Tamil Leader News
முக்கியம்
நீதிமன்ற அலைக்களத்தின் வார இறுதி விபரிப்பு: அரசியல் பலவான்களுக்கு எதிரான சட்டம்!●2027க்கான பட்ஜெட்; அட்வகாட்டா நிறுவனத்திடமிருந்து 5 பொருளாதார முன்மொழிவுகள்!●சங்கக்காரவின் விமான நிலையச் சம்பவத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்!●நான்கு மாவட்டங்களுக்கான நிலச்சரிவு எச்சரிக்கையை நீடித்தது NBRO!●'அவரைக் கொல்ல முயல்கிறார்கள்': இம்ரான் கானின் உயிருக்கு ஆபத்து என அவரது மகன் அவசர எச்சரிக்கை!●தமிழகத்தில் அடையாள அட்டைக்காகப் போராடும் இலங்கை இளைஞர்!●உலகின் மிகப்பெரிய கிரிப்டோகரன்சி கொள்ளையின் முழுமையான பின்னணி!●17ஆம் திகதி நாட்டை இருளில் மூழ்கடித்த திடீர் மின் தடையின் அறிக்கை வெளியானது!●இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●
செய்திகள்

குற்றச்சாட்டுகளுக்கு பதிலளித்துள்ள ரணில்!

T

The Leader Desk

மார்ச் 18, 2025 • 1:10 PM

குற்றச்சாட்டுகளுக்கு பதிலளித்துள்ள ரணில்!   

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • ஆகியோர் 2023 ஆம் ஆண்டு அரசாங்க நிதியை செலவழித்து லண்டனுக்கு சுற்றுலா சென்றதாக வெளியிடப்பட்ட கூற்று முற்றிலும் பொய்யானது என முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் அலுவலகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளது.
  • அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளவாறு, ரணில் விக்ரமசிங்க 2023 ஆம் ஆண்டு மூன்று முறை லண்டனுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.
  • அதன்படி, முதலாவது சுற்றுப்பயணம் - 2023 மே 09 ஆம் திகதி, மூன்றாம் சார்லஸ் மன்னரின் முடிசூட்டு விழாவில் பங்கேற்பதற்காக.
  • இரண்டாவது சுற்றுப்பயணம் - பாரிஸ் மாநாட்டில் பங்கேற்கும் போது சர்வதேச ஜனநாயகவாதிகளின் சங்கத்தின் (IDU) 40 ஆவது ஆண்டு அமர்வுக்காக.
எழுத்து அளவு:

ஆகியோர் 2023 ஆம் ஆண்டு அரசாங்க நிதியை செலவழித்து லண்டனுக்கு சுற்றுலா சென்றதாக வெளியிடப்பட்ட கூற்று முற்றிலும் பொய்யானது என முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் அலுவலகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளது.

அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளவாறு, ரணில் விக்ரமசிங்க 2023 ஆம் ஆண்டு மூன்று முறை லண்டனுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.

அதன்படி,

முதலாவது சுற்றுப்பயணம் - 2023 மே 09 ஆம் திகதி, மூன்றாம் சார்லஸ் மன்னரின் முடிசூட்டு விழாவில் பங்கேற்பதற்காக.

இரண்டாவது சுற்றுப்பயணம் - பாரிஸ் மாநாட்டில் பங்கேற்கும் போது சர்வதேச ஜனநாயகவாதிகளின் சங்கத்தின் (IDU) 40 ஆவது ஆண்டு அமர்வுக்காக.

மூன்றாவது சுற்றுப்பயணம் - ஹவானாவில் நடைபெற்ற G77 மாநாட்டில் பங்கேற்ற பின்னர், நியூயோர்க்கில் ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபைக் கூட்டத்தில் பங்கேற்று, அதன்பின் லண்டனுக்கு சென்றது.

மூன்றாவது முறையாக லண்டனுக்கு சென்றது, பேராசிரியர் மைத்திரி விக்ரமசிங்கவுக்கு பிரித்தானியாவின் வுல்வர்ஹாம்ப்டன் பல்கலைக்கழகத்தில் பேராசிரியர் பட்டம் வழங்கும் நிகழ்வில் பங்கேற்பதற்காகவாகும்.

ரணில் விக்ரமசிங்க நியூயோர்க்கில் ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபைக் கூட்டத்தில் பங்கேற்ற அதே நாட்களில் வுல்வர்ஹாம்ப்டன் பல்கலைக்கழகத்தில் அந்த நிகழ்வு நடைபெற்றதால், அழைப்பின் பேரில் முன்னாள் ஜனாதிபதியும் அந்த நிகழ்வில் பங்கேற்க லண்டனுக்கு சென்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சுற்றுப்பயணங்களின் போது ரணில் விக்ரமசிங்க பல அரச தலைவர்களை சந்தித்ததாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன், ஜனாதிபதியின் மனைவியாக பேராசிரியர் மைத்திரி விக்ரமசிங்க அந்த காலகட்டத்தில் சர்வதேச அளவில் ஏற்பாடு செய்யப்பட்ட கூட்டங்கள், பயிலரங்குகள் போன்றவற்றிலும் பங்கேற்றுள்ளார்.

நியூயோர்க்கிலிருந்து வந்து பகல் நேரத்திற்கு பின்னர் லண்டனை விட்டு வெளியேற திட்டமிடப்பட்டிருந்த போதிலும், அன்று பிற்பகலில் சில சந்திப்புகள் நடைபெற்றதால், ரணில் விக்ரமசிங்க இலங்கைக்கு திரும்புவது அடுத்த நாளுக்கு ஒத்திவைக்கப்பட்டது.

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் அதிகாரிகளின் லண்டன் சுற்றுப்பயணத்திற்கு அதிக அளவு பணம் செலவிடப்பட்டதாக கூறப்படுவது மிகவும் சிக்கலானது என்றும், இராஜதந்திர ரீதியாக மேற்கொள்ளப்படும் சுற்றுப்பயணங்கள் குறித்து தற்போதைய அரசாங்கத்திற்கு புரிதல் இல்லை என்பது இந்த விடயத்தில் தெளிவாகிறது என்றும் அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஜனாதிபதியாக இருந்த ரணில் விக்ரமசிங்க 2023 ஆம் ஆண்டு அரசாங்க செலவில் லண்டனுக்கு எந்தவொரு தனிப்பட்ட சுற்றுப்பயணத்திலும் ஈடுபடவில்லை எனவும், அதுதொடர்பாக வெளியிடப்படும் அனைத்து கூற்றுகளும் தவறானவை எனவும் அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

குற்றச்சாட்டுகளுக்கு பதிலளித்துள்ள ரணில்! | Tamil Leader | We Lead the Nation