Tamil Leader News
முக்கியம்
நீதிமன்ற அலைக்களத்தின் வார இறுதி விபரிப்பு: அரசியல் பலவான்களுக்கு எதிரான சட்டம்!●2027க்கான பட்ஜெட்; அட்வகாட்டா நிறுவனத்திடமிருந்து 5 பொருளாதார முன்மொழிவுகள்!●சங்கக்காரவின் விமான நிலையச் சம்பவத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்!●நான்கு மாவட்டங்களுக்கான நிலச்சரிவு எச்சரிக்கையை நீடித்தது NBRO!●'அவரைக் கொல்ல முயல்கிறார்கள்': இம்ரான் கானின் உயிருக்கு ஆபத்து என அவரது மகன் அவசர எச்சரிக்கை!●தமிழகத்தில் அடையாள அட்டைக்காகப் போராடும் இலங்கை இளைஞர்!●உலகின் மிகப்பெரிய கிரிப்டோகரன்சி கொள்ளையின் முழுமையான பின்னணி!●17ஆம் திகதி நாட்டை இருளில் மூழ்கடித்த திடீர் மின் தடையின் அறிக்கை வெளியானது!●இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●
செய்திகள்

இலங்கையை வடகொரியாவாக மாற்ற அநுர முயற்சி!

T

The Leader Desk

பிப்ரவரி 18, 2025 • 2:24 AM

இலங்கையை வடகொரியாவாக மாற்ற அநுர முயற்சி!   

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • வேண்டும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்தார்.
  • இந்நாட்டை வடகொரியாவாக்குவதற்கு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க முயற்சிக்கின்றாரா என்ற சந்தேகம் எழுகிறது.
  • கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில், நாட்டில் தற்போது ஜனநாயக உரிமைகளை ஒடுக்கும் செயற்பாடுகளை அராசாங்கம் ஆரம்பித்திருக்கிறது.
எழுத்து அளவு:

வேண்டும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்தார்.

கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,

நாட்டில் தற்போது ஜனநாயக உரிமைகளை ஒடுக்கும் செயற்பாடுகளை அராசாங்கம் ஆரம்பித்திருக்கிறது. இந்த அரசாங்கம் ஆட்சியைப் பொறுப்பேற்றவுடன் தமது தேர்தல் பிரசார மேடைகளில் ஏறிய ஓய்வு பெற்ற பொலிஸ் உத்தியோகத்தர்களை, பொலிஸ் மற்றும் அரச பாதுகாப்பு பணிகளில் உயர் பதவிகளில் நியமித்துள்ளது.

இதற்கு முன்னர் எந்தவொரு அரச தலைவரும் இவ்வாறான நடவடிக்கைகளை முன்னெடுத்ததில்லை. தற்போது பொலிஸ் திணைக்களம் முழுமையாக அரசியல் மயப்படுத்தப்பட்டுள்ளது.

மறுபுறம் சட்டமா அதிபர் மீது அச்சுறுத்தல் விடுக்கப்படுகிறது. அது மாத்திரமின்றி அரசியல் கட்சிகளுக்கும் அச்சுறுத்தல் விடுக்கப்படுகிறது.

இந்நாட்டை வடகொரியாவாக்குவதற்கு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க முயற்சிக்கின்றாரா என்ற சந்தேகம் எழுகிறது.

எனவே அரசாங்கத்தின் இவ்வாறான ஜனநாயக விரோத செயற்பாடுகளுக்கு எதிராக மிகக் கடுமையாக எதிர்ப்புக்களை வெளியிட வேண்டும்.

கடந்த காலங்களில் சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்தி முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மீது பல்வேறு அவதூறுகள் பரப்பப்பட்டன.

ஆனால் அவர் ஒருபோதும் சமூக வலைத்தளங்களை முடக்குவதற்கு நடவடிக்கை எடுக்கவில்லை. தற்போதைய அரசாங்கம் அவ்வாறு அல்ல.

தமக்கு எதிரான கருத்துக்களை வெளியிடுவதற்கு எவருக்கும் அனுமதிப்பதில்லை. எனவே இலங்கை, வடகொரியாவாக மாறுவதை தடுப்பதற்கு மக்கள் அனைவரும் குரல் கொடுக்க வேண்டும் என்றார்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

இலங்கையை வடகொரியாவாக மாற்ற அநுர முயற்சி! | Tamil Leader | We Lead the Nation