Tamil Leader News
முக்கியம்
2027க்கான பட்ஜெட்; அட்வகாட்டா நிறுவனத்திடமிருந்து 5 பொருளாதார முன்மொழிவுகள்!●சங்கக்காரவின் விமான நிலையச் சம்பவத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்!●நான்கு மாவட்டங்களுக்கான நிலச்சரிவு எச்சரிக்கையை நீடித்தது NBRO!●'அவரைக் கொல்ல முயல்கிறார்கள்': இம்ரான் கானின் உயிருக்கு ஆபத்து என அவரது மகன் அவசர எச்சரிக்கை!●தமிழகத்தில் அடையாள அட்டைக்காகப் போராடும் இலங்கை இளைஞர்!●உலகின் மிகப்பெரிய கிரிப்டோகரன்சி கொள்ளையின் முழுமையான பின்னணி!●17ஆம் திகதி நாட்டை இருளில் மூழ்கடித்த திடீர் மின் தடையின் அறிக்கை வெளியானது!●இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●65 இலட்சம் ஓட்டுநர் உரிமங்கள் தேக்கம்: நிலைமை சீரடைய 2027 ஏப்ரல் வரை தாமதம்!●
செய்திகள்

பயங்கரவாத தடுப்புச்சட்ட பொலிசாரால் கைது செய்யப்பட்ட முஸ்லிம் கவிஞரின் வழக்கு18 மாதங்களின் பின்!

T

The Leader Desk

நவம்பர் 16, 2021 • 4:04 PM

பயங்கரவாத தடுப்புச்சட்ட பொலிசாரால் கைது செய்யப்பட்ட முஸ்லிம் கவிஞரின் வழக்கு18 மாதங்களின் பின்! 

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • சட்டமா அதிபர் திணைக்களம் மற்றும் பயங்கரவாத எதிர்ப்பு மற்றும் விசாரணைப் பிரிவினருடன் இணைந்து அஹ்னாப் ஜஸீமுக்கு எதிரான வழக்கு நவம்பர் 15 திங்கட்கிழமை புத்தளம் மேல் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படடது.
  • விசாரணை திகதிகள் மற்றும் கவிஞருக்கு பிணை வழங்குவது தொடர்பான சட்டமா அதிபரின் கருத்து எதிர்வரும் டிசம்பர் 15ஆம் திகதி இடம்பெறவுள்ள விசாரணையின் போது அறிவிக்கப்படும் என சட்டமா அதிபர் தெரிவித்துள்ளார்.
  • அவர் மே 16, 2020 அன்று கைது செய்யப்பட்டார் மற்றும் பயங்கரவாத எதிர்ப்பு மற்றும் புலனாய்வுப் பிரிவினரால் ஒரு வருடத்திற்கும் மேலாக தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
எழுத்து அளவு:

சட்டமா அதிபர் திணைக்களம் மற்றும் பயங்கரவாத எதிர்ப்பு மற்றும் விசாரணைப் பிரிவினருடன் இணைந்து அஹ்னாப் ஜஸீமுக்கு எதிரான வழக்கு நவம்பர் 15 திங்கட்கிழமை புத்தளம் மேல் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படடது.

மன்னார் தமிழ் வாசகர் வட்டத்தில் பிரபல இளம் கவிஞர் அஹ்னாப் ஜசீம் சார்பாக வாதாடும் சட்டத்தரணி சஞ்சய வில்சன் ஜயசேகர, பயங்கரவாத ஒடுக்குமுறை மற்றும் புலனாய்வுப் பிரிவினர் தனது கட்சிக்காரருக்கு எதிராக சதி ரீதியில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளதாக ஜே.டி.எஸ் இணையத்தளத்திடம் தெரிவித்துள்ளார்.

சந்தேக நபராக பெயரிடப்பட்டுள்ள அஹ்னாப் மற்றும் அவரது சட்டத்தரணியாக செயற்படும் தமக்கும் தெரிவிக்காமல் CTU சம்பந்தப்பட்ட தரப்பினருடன் கைகோர்த்து குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்துள்ளதாக சட்டத்தரணி மேலும் சுட்டிக்காட்டினார்.

சட்டத்தரணி வில்சன் ஜயசேகர ஜே.டி.எஸ் இணையத்தளத்திடம் மேலும் கூறுகையில், பயங்கரவாத எதிர்ப்பு மற்றும் புலனாய்வுப் பிரிவு ஆரம்பத்திலிருந்தே அஹ்னாப்பை சிறையில் அடைக்க விரும்பியதாகவும், அதற்காக முடிந்த அனைத்தையும் செய்து வருவதாகவும் கூறினார்.

விசாரணை திகதிகள் மற்றும் கவிஞருக்கு பிணை வழங்குவது தொடர்பான சட்டமா அதிபரின் கருத்து எதிர்வரும் டிசம்பர் 15ஆம் திகதி இடம்பெறவுள்ள விசாரணையின் போது அறிவிக்கப்படும் என சட்டமா அதிபர் தெரிவித்துள்ளார்.

2017 இல் வௌிவந்த 'நவரசம்' கவிதைதொகுப்பு மூலமாக, 'தீவிரவாத' கருத்துக்களை தனது மாணவர்கள் பின்பற்றவைக்க முயற்சித்தார் என்று குற்றம்சுமத்தி அஹ்னாஃப் ஜசீமை பயங்கரவாத எதிர்ப்பு மற்றும் புலனாய்வுப் பிரிவு (CTID) கைது செய்வதற்கு காரணமாக அமைந்தது.

அவர் மே 16, 2020 அன்று கைது செய்யப்பட்டார் மற்றும் பயங்கரவாத எதிர்ப்பு மற்றும் புலனாய்வுப் பிரிவினரால் ஒரு வருடத்திற்கும் மேலாக தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...