Tamil Leader News
முக்கியம்
நான்கு மாவட்டங்களுக்கான நிலச்சரிவு எச்சரிக்கையை நீடித்தது NBRO!●'அவரைக் கொல்ல முயல்கிறார்கள்': இம்ரான் கானின் உயிருக்கு ஆபத்து என அவரது மகன் அவசர எச்சரிக்கை!●தமிழகத்தில் அடையாள அட்டைக்காகப் போராடும் இலங்கை இளைஞர்!●உலகின் மிகப்பெரிய கிரிப்டோகரன்சி கொள்ளையின் முழுமையான பின்னணி!●17ஆம் திகதி நாட்டை இருளில் மூழ்கடித்த திடீர் மின் தடையின் அறிக்கை வெளியானது!●இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●65 இலட்சம் ஓட்டுநர் உரிமங்கள் தேக்கம்: நிலைமை சீரடைய 2027 ஏப்ரல் வரை தாமதம்!●இஸ்ரேலிய வேலைவாய்ப்பு ஆட்சேர்ப்பு அரசாங்கத்தின் நேரடித் தலையீட்டிற்கு மாத்திரமே கட்டுப்படுத்தப்படும்!●மாடு அறுத்த குற்றத்துக்காக குஜராத்தில் மூவருக்கு ஆயுள் தண்டனை!●
செய்திகள்

கனடா அமைச்சர் கெரி ஆனந்தசங்கரிக்கு புதுப் பிரச்சினை!

T

The Leader Desk

ஜூலை 17, 2025 • 2:14 AM

கனடா அமைச்சர் கெரி ஆனந்தசங்கரிக்கு புதுப் பிரச்சினை!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • குடியுரிமை பெறுவதற்கு ஆதரவளித்ததாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளார்.
  • மற்றும் 2023ஆம் ஆண்டுகளில் கனடா எல்லை சேவைகள் நிறுவனத்திற்கு தொடர்புடைய கடிதங்கள் அனுப்பப்பட்டதாகக் கூறப்படுகிறது.
  • இருப்பினும், குற்றச்சாட்டுகளுடன் தொடர்புடைய கனேடிய பொதுப் பாதுகாப்பு அமைச்சர் கெரி ஆனந்த சங்கரியின் அலுவலகம் அறிக்கை ஒன்றை வௌியிட்டுள்ளது.
எழுத்து அளவு:

குடியுரிமை பெறுவதற்கு ஆதரவளித்ததாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளார்.

இலங்கையின் முன்னாள் விடுதலைப் புலி உறுப்பினரான செந்தூரன் செல்வகுமார் என்பவருக்கு கனேடிய குடியுரிமை வழங்குவதை ஆதரித்து கெரி ஆனந்தசங்கரி இரண்டு கடிதங்களை அனுப்பியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.

2016 மற்றும் 2023ஆம் ஆண்டுகளில் கனடா எல்லை சேவைகள் நிறுவனத்திற்கு தொடர்புடைய கடிதங்கள் அனுப்பப்பட்டதாகக் கூறப்படுகிறது.

கெரி ஆனந்தசங்கரி பாராளுமன்ற உறுப்பினராக இருந்தபோது இந்தக் கடிதங்களைச் சமர்ப்பித்ததாகவும், தொடர்புடைய நபருக்கு விடுதலைப் புலிகளுடன் அவருக்கு நேரடித் தொடர்புகள் இருப்பதாகக் கூறி, அந்நாட்டின் குடிவரவு மற்றும் குடியகல்வுத் துறை பல சந்தர்ப்பங்களில் அவரது குடியுரிமை விண்ணப்பத்தை நிராகரித்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.

மனிதாபிமானக் கருத்தாய்வுகளையும், அவரது குடும்பம் பிரிவதற்கான அறிகுறிகள் காணப்படுவதாலும், செந்தூரன் செல்வகுமார் என்ற நபருக்கு நிரந்தர கனேடிய குடியுரிமை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று கெரி ஆனந்தசங்கரி சம்பந்தப்பட்ட கடிதங்களில் கோரியுள்ளதாகக் கூறப்படுகிறது.

எவ்வாறாயினும், விடுதலைப் புலிகள் இயக்கம் தடைசெய்யப்பட்ட அமைப்பு என்பதால், கெரி ஆனந்தசங்கரி பயங்கரவாதத்தை ஆதரிப்பதாக அவர் மீது குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன.

பொதுப் பாதுகாப்பு அமைச்சர் கெரி ஆனந்தசங்கரி பயங்கரவாதத்தை ஆதரிப்பதால், அவர் தனது அமைச்சர் பதவியில் தொடர்ந்து பணியாற்றுவது சிக்கல் நிலையை தோற்றுவித்துள்ளதாக கனடா பிரதமருக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இருப்பினும், குற்றச்சாட்டுகளுடன் தொடர்புடைய கனேடிய பொதுப் பாதுகாப்பு அமைச்சர் கெரி ஆனந்த சங்கரியின் அலுவலகம் அறிக்கை ஒன்றை வௌியிட்டுள்ளது. குறித்த அறிக்கையில், இந்த சம்பவம் தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருப்பதால், இது தொடர்பில் குறிப்பிட்ட விபரங்களை வழங்குவது பொருத்தமற்றது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், கெரி ஆனந்தசங்கரி அமைச்சர் பதவியை ஏற்றுக்கொண்டதிலிருந்து இதுபோன்ற கோரிக்கைக் கடிதங்களை ஒருபோதும் சமர்ப்பிக்கவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், குழந்தை கனடாவில் இருக்கும் நிலையில், நபர் ஒருவரின் குடும்பம் பிரிவதைத் தடுக்கும் நோக்கில் வௌியிடப்பட்ட தனது கோரிக்கையாது அசாதாரணமானது அல்ல என்றும் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

பயங்கரவாத அமைப்புக்கு ஒருபோதும் ஆதரவளிக்க மாட்டேன் என்றும், பயங்கரவாத அமைப்புக்கு ஆதரவாக முடிவுகளை எடுக்க மாட்டேன் என்றும் கெரி ஆனந்தசங்கரி தொடர்புடைய அறிக்கையில் மேலும் குறிப்பிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இருப்பினும், இந்த விவகாரம் தொடர்பாக கனேடிய பிரதமர் இதுவரை எந்த அறிக்கையும் வெளியிடவில்லை என்று சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

கனடா அமைச்சர் கெரி ஆனந்தசங்கரிக்கு புதுப் பிரச்சினை! | Tamil Leader | We Lead the Nation