Tamil Leader News
முக்கியம்
நான்கு மாவட்டங்களுக்கான நிலச்சரிவு எச்சரிக்கையை நீடித்தது NBRO!●'அவரைக் கொல்ல முயல்கிறார்கள்': இம்ரான் கானின் உயிருக்கு ஆபத்து என அவரது மகன் அவசர எச்சரிக்கை!●தமிழகத்தில் அடையாள அட்டைக்காகப் போராடும் இலங்கை இளைஞர்!●உலகின் மிகப்பெரிய கிரிப்டோகரன்சி கொள்ளையின் முழுமையான பின்னணி!●17ஆம் திகதி நாட்டை இருளில் மூழ்கடித்த திடீர் மின் தடையின் அறிக்கை வெளியானது!●இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●65 இலட்சம் ஓட்டுநர் உரிமங்கள் தேக்கம்: நிலைமை சீரடைய 2027 ஏப்ரல் வரை தாமதம்!●இஸ்ரேலிய வேலைவாய்ப்பு ஆட்சேர்ப்பு அரசாங்கத்தின் நேரடித் தலையீட்டிற்கு மாத்திரமே கட்டுப்படுத்தப்படும்!●மாடு அறுத்த குற்றத்துக்காக குஜராத்தில் மூவருக்கு ஆயுள் தண்டனை!●
செய்திகள்

இஸ்ரேல் மீது மிகப்பெரிய தாக்குதலை நடத்த ஈரான் தயாராகியுள்ளது!

T

The Leader Desk

ஜூன் 17, 2025 • 4:40 AM

இஸ்ரேல் மீது மிகப்பெரிய தாக்குதலை நடத்த ஈரான் தயாராகியுள்ளது!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • ஈரான் அரசு ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
  • தங்களுக்கு எதிராக அணு ஆயுதங்களை தயாரிப்பதாக கூறி ஈரான் மீது கடந்த 13ஆம் திகதி திடீரென இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது.
  • இரு நாடுகளுக்கு இடையேயான இந்த மோதல் நேற்று 4ஆவது நாளாக நீடித்தது.
  • இந்த தாக்குதலில் ஈரானின் 120 ஏவுகணை லோஞ்சர்கள் அழிக்கப்பட்டதாகவும், அவற்றின் மூலம்தான் கடந்த 3 நாட்களாக இஸ்ரேல் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல் நடத்தியதாகவும் இஸ்ரேல் இராணுவ செய்தி தொடர்பாளர் எப்பி டெப்ரின் கூறியுள்ளார்.
எழுத்து அளவு:

ஈரான் அரசு ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

இரு நாடுகளும் நான்காவது நாளாக பெரும் தாக்குதல்களை பரிமாறிக்கொண்ட நிலையில், இஸ்ரேலை நோக்கி புதிய ஏவுகணை தாக்குதல்கள் நடத்த உள்ளதாக ஈரான் அரசு ஊடகங்கள் நேற்று இரவு அறிவித்துள்ளன.

தங்களுக்கு எதிராக அணு ஆயுதங்களை தயாரிப்பதாக கூறி ஈரான் மீது கடந்த 13ஆம் திகதி திடீரென இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது.

தலைநகர் தெஹ்ரான் மற்றும் அதை சுற்றியுள்ள இராணுவ நிலைகள் மற்றும் முக்கியமான அணு ஆயுத கட்டமைப்புகளை குறி வைத்து போர் விமானங்கள் மூலம் குண்டு வீசியது. இஸ்ரேலின் இந்த பயங்கர தாக்குதலில் ஈரானின் இராணுவ தளபதிகள், அணு ஆயுத விஞ்ஞானிகள் என பாதுகாப்பு நிபுணர்கள் கொல்லப்பட்டனர்.

அத்துடன், வான் பாதுகாப்பு அமைப்பு மற்றும் இராணுவ தளவாடங்களும் மிகப்பெரும் சேதமடைந்தன. மேலும் தெஹ்ரானில் உள்ள இயற்கை எரிவாயு சுத்திகரிப்பு ஆலை மற்றும் எண்ணெய் கிடங்கையும் தாக்கியது. இந்த எண்ணெய் கிடங்கு தொடர்ந்து பற்றி எரிகிறது. இதனால் ஈரானில் பரவலாக பெருத்த சேதம் விளைந்துள்ளது.

இதற்கிடையே இஸ்ரேல் மீது ஈரானும் பதிலடி தாக்குதலை தொடங்கியது. ஜெருசலேம், டெல் அவிவ் உள்ளிட்ட இஸ்ரேலின் முக்கிய நகரங்களை குறி வைத்து ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்களை கொண்டு தாக்கி வருகிறது. இரு நாடுகளுக்கு இடையேயான இந்த மோதல் நேற்று 4ஆவது நாளாக நீடித்தது. இஸ்ரேலின் போர் விமானங்கள் ஈரானுக்குள் நூற்றுக்கணக்கான கி.மீ. தூரத்துக்கு உள்ளே வந்து தாக்குதலை நடத்தி வருகின்றன.

குறிப்பாக ஈரானின் மேற்கு பகுதியில் இருந்து தலைநகர் தெஹ்ரான் வரை ஈரானின் வான் பகுதியை தங்கள் போர் விமானங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருப்பதாகவும், எந்தவித தடையும் இன்றி தாக்குதல் தொடுத்து வருவதாகவும் இஸ்ரேல் கூறியது.

இந்த தாக்குதலில் ஈரானின் 120 ஏவுகணை லோஞ்சர்கள் அழிக்கப்பட்டதாகவும், அவற்றின் மூலம்தான் கடந்த 3 நாட்களாக இஸ்ரேல் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல் நடத்தியதாகவும் இஸ்ரேல் இராணுவ செய்தி தொடர்பாளர் எப்பி டெப்ரின் கூறியுள்ளார். மேலும், தெஹ்ரானில் உள்ள ஈரான் புரட்சிகர படையின் 10 கட்டளை மையங்கள் அழிக்கப்பட்டதாக  தெரிவித்தார்.

இது குறித்து இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கூறுகையில், 'தெஹ்ரான் வான்பகுதியை எங்கள் விமானப்படை கட்டுப்பாட்டில் வைத்துள்ளது. அணு ஆயுத அச்சுறுத்தலை நீக்குதல் மற்றும் ஏவுகணை அச்சுறுத்தலை நீக்குதல் ஆகிய இரண்டு குறிக்கோள்களை அடைவதற்கான பாதையில் நாங்கள் இருக்கிறோம்' என கூறினார்.

மேலும் அவர், 'நாங்கள் வெற்றியின் பாதையில் இருக்கிறோம். அந்த இலக்கு எட்டப்படுகிறது. அற்புதமான பணிகளைச் செய்யும் எங்கள் வீர விமானிகள் மற்றும் எங்கள் அற்புதமான தரைப்படை குழுவினருக்கு நன்றி' என்றும் தெரிவித்தார்.

ஈரானில் கடந்த 13ஆம் திகதி முதல் இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதலில் 224 பேர் கொல்லப்பட்டதாகவும், நூற்றுக்கணக்கானோர் காயமடைந்ததாகவும் அதிகாரப்பூர்வ தகவல் வெளியானது. அதேநேரம் பலி எண்ணிக்கை 400-க்கு மேல் உயர்ந்திருப்பதாகவும், 600-க்கு மேற்பட்டோர் காயமடைந்ததாகவும் மனித உரிமை ஆர்வலர்கள் ஏற்கனவே கூறியிருந்தனர்.

மறுபுறம் இஸ்ரேல் மீது நேற்றும் ஈரான் அலையலையாக டிரோன்களையும் 100க்கு மேற்பட்ட ஏவுகணைகளையும் வீசியது. இதில் பெரும்பாலும் அடுக்குமாடி கட்டிடங்கள் சேதமடைந்தன. இதில் 8 பேர் பலியாகினர். டெல் அவிவ் நகரில் உள்ள அமெரிக்க தூதரகம் அருகே ஈரானின் ஏவுகணை ஒன்று விழுந்து வெடித்தது. இதில் தூதரகம் லேசான சேதமடைந்தது. எனினும் யாரும் காயமடையவில்லை.

இஸ்ரேல் மீது ஈரான் நடத்தி வரும் பதில் தாக்குதலில் இதுவரை 24 பேர் கொல்லப்பட்டதாகவும், 500-க்கு அதிகமானோர் காயமடைந்துள்ளதாகவும் அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இஸ்ரேல் மீது நேற்று தீவிர தாக்குதல் நடத்தியுள்ள நிலையில், முந்தையவற்றை விட மிகவும் வலிமையானது, கடுமையானது, துல்லியமானது மற்றும் அழிவுகரமானதாக இருந்ததாக ஈரான் கூறியுள்ளது.

மறுபுறம் ஈரான் தலைநகர் தெஹ்ரானில் வசித்து வரும் மக்களை வெளியேறுமாறு இஸ்ரேல் இராணுவம் எச்சரித்து உள்ளது. இதன் மூலம் அங்கே தீவிர தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.

இந்நிலையில், இஸ்ரேல் மண்ணில் வரலாற்றில் மிகப்பெரிய தாக்குதல் நடத்தப்படும் என்று ஈரான் அறிவித்துள்ளது. இரு நாடுகளும் நான்காவது நாளாக பெரும் தாக்குதல்களை பரிமாறிக்கொண்ட நிலையில், இஸ்ரேலை நோக்கி புதிய ஏவுகணை தாக்குதல்கள் நடத்த உள்ளதாக ஈரான் அரசு ஊடகங்கள் நேற்று இரவு அறிவித்துள்ளன.

மேலும் இஸ்ரேல் மண்ணில் வரலாற்றில் மிகப்பெரிய மற்றும் மிகவும் தீவிரமான ஏவுகணைத் தாக்குதலுக்கு ஈரான் தயாராகி வருவதாகவும் ஈரான் அரசு ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

-தமிழன்

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...