Tamil Leader News
முக்கியம்
2027க்கான பட்ஜெட்; அட்வகாட்டா நிறுவனத்திடமிருந்து 5 பொருளாதார முன்மொழிவுகள்!●சங்கக்காரவின் விமான நிலையச் சம்பவத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்!●நான்கு மாவட்டங்களுக்கான நிலச்சரிவு எச்சரிக்கையை நீடித்தது NBRO!●'அவரைக் கொல்ல முயல்கிறார்கள்': இம்ரான் கானின் உயிருக்கு ஆபத்து என அவரது மகன் அவசர எச்சரிக்கை!●தமிழகத்தில் அடையாள அட்டைக்காகப் போராடும் இலங்கை இளைஞர்!●உலகின் மிகப்பெரிய கிரிப்டோகரன்சி கொள்ளையின் முழுமையான பின்னணி!●17ஆம் திகதி நாட்டை இருளில் மூழ்கடித்த திடீர் மின் தடையின் அறிக்கை வெளியானது!●இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●65 இலட்சம் ஓட்டுநர் உரிமங்கள் தேக்கம்: நிலைமை சீரடைய 2027 ஏப்ரல் வரை தாமதம்!●
செய்திகள்

இலங்கையின் தென் மாகாண மக்களின் ஆயுள் அதிகரிக்கக் காரணம் என்ன?

T

The Leader Desk

மே 17, 2025 • 3:04 PM

இலங்கையின் தென் மாகாண மக்களின் ஆயுள் அதிகரிக்கக் காரணம் என்ன?

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • அதிக சுற்றுலாப் பயணிகளையும் வெளிநாட்டு முதலீட்டாளர்களையும் மாகாணத்திற்கு ஈர்ப்பதன் மூலம் சுற்றுலாத் துறையை மேலும் மேம்படுத்த முடியும் என்று கொழும்பு பல்கலைக்கழகத்தின் சமூக அறிவியல் துறையின் ஓய்வுபெற்ற பேராசிரியர் இந்திரலால் டி சில்வா தெரிவித்துள்ளார்.
  • இலங்கையின் 9 மாகாணங்களில், தென் மாகாணத்தின் ஹம்பாந்தோட்டை மற்றும் மாத்தறை பகுதிகளில் வசிக்கும் மக்கள் அதிக ஆயுட்காலம் கொண்டவர்களாகும்.
  • அந்தப் பகுதியில் நீண்ட காலம் வாழ்வதற்கான வாய்ப்புகள் உள்ளதனை தெரியப்படுத்தி ஊக்குவிக்க வேண்டும்.
  • மற்றும் 2011-2013ஆம் ஆண்டுகளுக்கான நாட்டின் வாழ்க்கை அட்டவணைகளில் வெளிப்படுத்தப்பட்ட ஆண் மற்றும் பெண் ஆயுட்காலம் குறித்த தரவுகளின் அடிப்படையில் பேராசிரியர் இந்த தகவலை வெளியிட்டார்.
எழுத்து அளவு:

அதிக சுற்றுலாப் பயணிகளையும் வெளிநாட்டு முதலீட்டாளர்களையும் மாகாணத்திற்கு ஈர்ப்பதன் மூலம் சுற்றுலாத் துறையை மேலும் மேம்படுத்த முடியும் என்று கொழும்பு பல்கலைக்கழகத்தின் சமூக அறிவியல் துறையின் ஓய்வுபெற்ற பேராசிரியர் இந்திரலால் டி சில்வா தெரிவித்துள்ளார்.

இலங்கையின் 9 மாகாணங்களில், தென் மாகாணத்தின் ஹம்பாந்தோட்டை மற்றும் மாத்தறை பகுதிகளில் வசிக்கும் மக்கள் அதிக ஆயுட்காலம் கொண்டவர்களாகும்.

இதற்கு பங்களித்த பல்வேறு காரணிகளுக்கு மத்தியில் நாசா சமீபத்தில் வெளிப்படுத்திய செயற்கைக்கோள் தரவுகளுக்கமைய, இலங்கையின் தெற்குப் பகுதிகளும் மாலைத்தீவின் கிழக்கே உள்ள இந்தியப் பெருங்கடலும் உலகிலேயே மிகக் குறைந்த ஈர்ப்பு விசையை கொண்டுள்ளதாக பேராசிரியர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அதற்கமைய, உலகின் செல்வந்தர்கள் தென் மாகாணத்திற்கு வருகை தருவதை ஊக்குவிக்க வேண்டும். அந்தப் பகுதியில் நீண்ட காலம் வாழ்வதற்கான வாய்ப்புகள் உள்ளதனை தெரியப்படுத்தி ஊக்குவிக்க வேண்டும்.

குறைந்த ஈர்ப்பு விசை நிலைமைகளை சிறப்பாக பயன்படுத்தக்கூடிய தொழில்களை அந்தப் பகுதியில் நிறுவ வெளிநாட்டு முதலீட்டாளர்களை ஊக்குவிப்பதற்கான சரியான நேரம் இது என பேராசிரியர் இந்திரலால் டி சில்வா மேலும் தெரிவித்துள்ளார்.

குறிப்பாக ஐரோப்பிய சுற்றுலாப் பயணிகளிடையே ஆயுர்வேத, மேற்கத்திய மற்றும் உள்நாட்டு மருத்துவ முறைகளை உள்ளடக்கிய சுகாதார சுற்றுலாவை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

2000-2002 மற்றும் 2011-2013ஆம் ஆண்டுகளுக்கான நாட்டின் வாழ்க்கை அட்டவணைகளில் வெளிப்படுத்தப்பட்ட ஆண் மற்றும் பெண் ஆயுட்காலம் குறித்த தரவுகளின் அடிப்படையில் பேராசிரியர் இந்த தகவலை வெளியிட்டார்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...