Tamil Leader News
முக்கியம்
2027க்கான பட்ஜெட்; அட்வகாட்டா நிறுவனத்திடமிருந்து 5 பொருளாதார முன்மொழிவுகள்!●சங்கக்காரவின் விமான நிலையச் சம்பவத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்!●நான்கு மாவட்டங்களுக்கான நிலச்சரிவு எச்சரிக்கையை நீடித்தது NBRO!●'அவரைக் கொல்ல முயல்கிறார்கள்': இம்ரான் கானின் உயிருக்கு ஆபத்து என அவரது மகன் அவசர எச்சரிக்கை!●தமிழகத்தில் அடையாள அட்டைக்காகப் போராடும் இலங்கை இளைஞர்!●உலகின் மிகப்பெரிய கிரிப்டோகரன்சி கொள்ளையின் முழுமையான பின்னணி!●17ஆம் திகதி நாட்டை இருளில் மூழ்கடித்த திடீர் மின் தடையின் அறிக்கை வெளியானது!●இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●65 இலட்சம் ஓட்டுநர் உரிமங்கள் தேக்கம்: நிலைமை சீரடைய 2027 ஏப்ரல் வரை தாமதம்!●
செய்திகள்

இப்படித்தான் மின் கட்டணம் அதிகரிக்கப்போகிறது!

T

The Leader Desk

மே 17, 2025 • 2:49 PM

இப்படித்தான் மின் கட்டணம் அதிகரிக்கப்போகிறது!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • திருத்துவது தொடர்பான முன்மொழிவை இலங்கை மின்சார சபை, பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழுவிடம் சமர்ப்பித்துள்ளது.
  • இதன்படி ஜூன் மாதம் முதலாம் திகதி முதல் மின்சாரக் கட்டணத்தை 18.3 சதவீதம் உயர்த்த வேண்டும் என முன்மொழியப்பட்டுள்ளது.
  • மின்சார சபையின் கோரிக்கை இல்லாமல் மின்சாரக் கட்டணத்தை 20 சதவீதம் குறைக்க கடந்த ஜனவரி மாதம் பொது பயன்பாடுகள் ஆணைக்குழு எடுத்த முடிவின் விளைவாக மின்சார சபைக்கு செயல்பாட்டு இழப்பு ஏற்பட்டதாக அந்த சபை சுட்டிக்காட்டியுள்ளது.
  • இந்த நிலையில், ஜூன் முதல் டிசம்பர் வரையிலான காலத்திற்கான இலங்கை மின்சார சபையின் நிதிப் பற்றாக்குறை 42,196 மில்லியன் ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளதால், இந்த கட்டண திருத்தத்தில் 18.3 சதவீத கட்டண உயர்வு தேவை என்று இலங்கை மின்சார சபை தனது முன்மொழிவில் தெரிவித்துள்ளது.
எழுத்து அளவு:

திருத்துவது தொடர்பான முன்மொழிவை இலங்கை மின்சார சபை, பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழுவிடம் சமர்ப்பித்துள்ளது.

இதன்படி ஜூன் மாதம் முதலாம் திகதி முதல் மின்சாரக் கட்டணத்தை 18.3 சதவீதம் உயர்த்த வேண்டும் என முன்மொழியப்பட்டுள்ளது.

மின்சார சபைக்கு ஏற்படும் நிதி இழப்புகளைக் கருத்தில் கொண்டு இந்தக் கட்டணத் திருத்தம் முன்மொழியப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மின்சார சபையின் கோரிக்கை இல்லாமல் மின்சாரக் கட்டணத்தை 20 சதவீதம் குறைக்க கடந்த ஜனவரி மாதம் பொது பயன்பாடுகள் ஆணைக்குழு எடுத்த முடிவின் விளைவாக மின்சார சபைக்கு செயல்பாட்டு இழப்பு ஏற்பட்டதாக அந்த சபை சுட்டிக்காட்டியுள்ளது.

இந்த நிலையில், ஜூன் முதல் டிசம்பர் வரையிலான காலத்திற்கான இலங்கை மின்சார சபையின் நிதிப் பற்றாக்குறை 42,196 மில்லியன் ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளதால், இந்த கட்டண திருத்தத்தில் 18.3 சதவீத கட்டண உயர்வு தேவை என்று இலங்கை மின்சார சபை தனது முன்மொழிவில் தெரிவித்துள்ளது.

இலங்கை மின்சார சபையின் கட்டண திருத்த முன்மொழிவின்படி, நிலையான கட்டணத்தைப் போலவே மின்சார அலகு கட்டணத்தையும் அதிகரிக்க முன்மொழியப்பட்டுள்ளது.

அதன்படி, வீடுகள், வழிபாட்டு தலங்கள், தொழிற்சாலை மற்றும் ஹோட்டல்கள் மற்றும் அரசு நிறுவனங்கள் உள்ளிட்ட அனைத்து துறைகளுக்கும் கட்டணங்களை அதிகரிக்க சபை முன்மொழிந்துள்ளது.

வீட்டு பிரிவிற்கு 0 முதல் 30 வரையான அலகுகளுக்கு 4 ரூபாயாகவிருந்த கட்டணத்தை 4 ரூபாய் 75 சதமாகவும், 75 ரூபாவாகவிருந்த நிலையான கட்டணத்தை 90 ரூபாவாகவும் அதிகரிக்க முன்மொழியப்பட்டுள்ளது.

அத்துடன் 31 முதல் 60 வரையிலான அலகுகளுக்கு 6 ரூபாவாகவிருந்த கட்டணத்தை 7 ரூபாவாகவும், நிலையான கட்டணத்தை 200 ரூபாவிலிருந்து 235 ரூவாவாகவும் உயர்த்துவதற்கு முன்மொழியப்பட்டுள்ளது.

61 முதல் 90 வரையான அலகுகளுக்கு 14 ரூபாவாகவிருந்த கட்டணத்தை 16.60 ரூபாவாகவும், 475 ரூபாவான நிலையான கட்டணத்தை 475 ரூபாவாகவும் அதிகரிக்க யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.

91 முதல் 120 வரையான அலகுகளுக்கு 20 ரூபாவாகவிருந்த கட்டணத்தை 23.65 ரூபாவாகவும் 1,000 ரூபாவாகவிருந்த நிலையான கட்டணத்தை 1,185 ரூபாயாகவும் உயர்த்த முன்மொழியப்பட்டுள்ளது.

இலங்கை மின்சார சபை தனது முன்மொழிவில், 121 முதல் 180 வரையிலான அலகுகளுக்கு 33 ரூபாவாகவிருந்த கட்டணத்தை 93.5 ரூபாவாகவும் நிலையான கட்டணத்தை 1500 ரூபாவிலிருந்து 1775 ரூபாவாக அதிகரிக்கவும் முன்மொழியப்பட்டுள்ளது.

181 அலகுகளுக்கு மேல் பயன்படுத்தும் வீட்டு பிரிவினருக்கு 52 ரூபாவாகவிருந்த ஒரு அலகு கட்டணத்தை 61.55 ரூபாவாகவும், 2000 ரூபாவாகவிருந்த நிலையான கட்டணத்தை 2370 ரூபாவகவும் அதிகரிப்பதற்கு இலங்கை மின்சார சபை முன்மொழிந்துள்ளது.

இலங்கை மின்சார சபை சமர்ப்பித்த முன்மொழிவை கருத்தில் கொண்டு, ஜூன் மாதம் முதல் வாரத்தில் மின்சார கட்டண திருத்தம் குறித்த இறுதி முடிவை அறிவிக்க பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழு திட்டமிட்டுள்ளது.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...