Tamil Leader News
முக்கியம்
2027க்கான பட்ஜெட்; அட்வகாட்டா நிறுவனத்திடமிருந்து 5 பொருளாதார முன்மொழிவுகள்!●சங்கக்காரவின் விமான நிலையச் சம்பவத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்!●நான்கு மாவட்டங்களுக்கான நிலச்சரிவு எச்சரிக்கையை நீடித்தது NBRO!●'அவரைக் கொல்ல முயல்கிறார்கள்': இம்ரான் கானின் உயிருக்கு ஆபத்து என அவரது மகன் அவசர எச்சரிக்கை!●தமிழகத்தில் அடையாள அட்டைக்காகப் போராடும் இலங்கை இளைஞர்!●உலகின் மிகப்பெரிய கிரிப்டோகரன்சி கொள்ளையின் முழுமையான பின்னணி!●17ஆம் திகதி நாட்டை இருளில் மூழ்கடித்த திடீர் மின் தடையின் அறிக்கை வெளியானது!●இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●65 இலட்சம் ஓட்டுநர் உரிமங்கள் தேக்கம்: நிலைமை சீரடைய 2027 ஏப்ரல் வரை தாமதம்!●
செய்திகள்

சூழலுக்கு பாதிப்பு ஏற்படாதவாறு மன்னார் காற்றாலை மின்னுற்பத்தி திட்டத்தை முன்னெடுக்க நடவடிக்கை!

T

The Leader Desk

ஏப்ரல் 17, 2025 • 1:33 PM

சூழலுக்கு பாதிப்பு ஏற்படாதவாறு மன்னார் காற்றாலை மின்னுற்பத்தி திட்டத்தை முன்னெடுக்க நடவடிக்கை!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • மன்னார் காற்றாலை மின் உற்பத்தி திட்டத்தை முன்னெடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
  • மன்னார் பஜார் பகுதியில் இன்று (17.04.2025) காலை இடம்பெற்ற தேசிய மக்கள் சக்தியின் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் பிரசார கூட்டத்தில் கலந்து கொண்டு உரை நிகழ்த்துகையில் அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
  • மேலும் மன்னாரில் காற்றைக்கொண்டு மின் உற்பத்தி செய்யக்கூடிய வசதிகள் அதிகமாக காணப்படுகின்றன.
  • மேலும், எதிர்வரும் ஜூன் மாதம் முதல், மேலதிகமாக 4 இலட்சம் நபர்களுக்கு அஸ்வஸ்ய நிவாரணம் வழங்கப்படும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
எழுத்து அளவு:

மன்னார் காற்றாலை மின் உற்பத்தி திட்டத்தை முன்னெடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

மன்னார் பஜார் பகுதியில் இன்று (17.04.2025) காலை இடம்பெற்ற தேசிய மக்கள் சக்தியின் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் பிரசார கூட்டத்தில் கலந்து கொண்டு உரை நிகழ்த்துகையில் அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், "இந்திய அரசாங்கத்தின் உதவியுடன் மன்னாரில் இருந்து தமிழ்நாடு, இராமேஸ்வரத்திற்கான பயணிகள் படகுச் சேவையை மீள ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.

இதற்கான பேச்சுவார்த்தைகள் தற்போது இடம்பெற்று வருகின்றன. மேலும் மன்னாரில் காற்றைக்கொண்டு மின் உற்பத்தி செய்யக்கூடிய வசதிகள் அதிகமாக காணப்படுகின்றன.

இருப்பினும், கடந்த காலங்களில் சூழல் பாதுகாப்பை கருத்தில் கொள்ளாமல் குறித்த திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வந்தன. இந்த நிலையில் குறித்த திட்டங்கள் அனைத்தும் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளன.

எதிர்காலத்தில் மக்களின் கருத்துக்களை அறிந்து கொண்டு, சூழலுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில், குறித்த வேலைத்திட்டத்தை முன்னெடுக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

மேலும், எதிர்வரும் ஜூன் மாதம் முதல், மேலதிகமாக 4 இலட்சம் நபர்களுக்கு அஸ்வஸ்ய நிவாரணம் வழங்கப்படும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

குறித்த கூட்டத்தில் கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரன், நாடாளுமன்ற உறுப்பினர்களான ஜெகதீஸ்வரன், திலகநாதன் மற்றும் மன்னார் மாவட்டத்தில் மன்னார் நகர சபை, மன்னார், நானாட்டான், முசலி, மாந்தை மேற்கு ஆகிய பிரதேச சபைகளின் வேட்பாளர்கள் மற்றும் ஆதரவாளர்களும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

சூழலுக்கு பாதிப்பு ஏற்படாதவாறு மன்னார் காற்றாலை மின்னுற்பத்தி திட்டத்தை முன்னெடுக்க நடவடிக்கை! | Tamil Leader | We Lead the Nation