Tamil Leader News
முக்கியம்
நீதிமன்ற அலைக்களத்தின் வார இறுதி விபரிப்பு: அரசியல் பலவான்களுக்கு எதிரான சட்டம்!●2027க்கான பட்ஜெட்; அட்வகாட்டா நிறுவனத்திடமிருந்து 5 பொருளாதார முன்மொழிவுகள்!●சங்கக்காரவின் விமான நிலையச் சம்பவத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்!●நான்கு மாவட்டங்களுக்கான நிலச்சரிவு எச்சரிக்கையை நீடித்தது NBRO!●'அவரைக் கொல்ல முயல்கிறார்கள்': இம்ரான் கானின் உயிருக்கு ஆபத்து என அவரது மகன் அவசர எச்சரிக்கை!●தமிழகத்தில் அடையாள அட்டைக்காகப் போராடும் இலங்கை இளைஞர்!●உலகின் மிகப்பெரிய கிரிப்டோகரன்சி கொள்ளையின் முழுமையான பின்னணி!●17ஆம் திகதி நாட்டை இருளில் மூழ்கடித்த திடீர் மின் தடையின் அறிக்கை வெளியானது!●இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●
செய்திகள்

உள்ளூராட்சிமன்றத் தேர்தல் சட்டமூலத்தில் கைச்சாத்திட்ட சபாநாயகர்

T

The Leader Desk

பிப்ரவரி 17, 2025 • 3:05 PM

உள்ளூராட்சிமன்றத் தேர்தல் சட்டமூலத்தில் கைச்சாத்திட்ட சபாநாயகர்

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • இந்த சட்டமூலம் 2025 ஜனவரி 9ஆம் திகதி முதலாவது மதிப்பீட்டுக்காக பாராளுமன்றத்திற்கு முன்வைக்கப்பட்டது.
  • அதற்கமைய இந்த சட்டமூலம் 2025ஆம் ஆண்டில் 1ஆம் இலக்க உள்ளூராட்சி மன்றத் தேர்தல்கள் (விசேட ஏற்பாடுகள்) சட்டமாக அமுலுக்கு வரும்.
  • இதற்கு ஆதரவாக 187 வாக்குகள் பதிவாகின.
  • இருப்பினும், எந்த பாராளுமன்ற உறுப்பினரும் சட்டமூலத்திற்கு எதிராக வாக்களிக்கவில்லை, அதேபொல் யாரும் வாக்களிப்பதைத் தவிர்க்கவும் இல்லை.
எழுத்து அளவு:

உறுப்புரைக்கு அமைய, சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்ன இன்று (17) தனது கையொப்பத்தையிட்டு சான்றுரைப்படுத்தினார். 

இந்தச் சட்டமூலம் தொடர்பான இரண்டாவது மதிப்பீட்டு விவாதம் இன்று பி.ப 2.00 மணி முதல் பி.ப 7.00 மணிவரை இடம்பெற்று திருத்தங்கள் இன்றி விசேட பெரும்பான்மையுடன் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.

இந்த சட்டமூலம் 2025 ஜனவரி 9ஆம் திகதி முதலாவது மதிப்பீட்டுக்காக பாராளுமன்றத்திற்கு முன்வைக்கப்பட்டது.

அதற்கமைய இந்த சட்டமூலம் 2025ஆம் ஆண்டில் 1ஆம் இலக்க உள்ளூராட்சி மன்றத் தேர்தல்கள் (விசேட ஏற்பாடுகள்) சட்டமாக அமுலுக்கு வரும்.

இதேவேளை, உள்ளூராட்சிமன்றத் தேர்தல் சிறப்பு ஏற்பாடுகள் சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு சற்று நேரத்திற்கு முன்பு பாராளுமன்றத்தில் சிறப்பு பெரும்பான்மை வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது. இதற்கு ஆதரவாக 187 வாக்குகள் பதிவாகின.

இருப்பினும், எந்த பாராளுமன்ற உறுப்பினரும் சட்டமூலத்திற்கு எதிராக வாக்களிக்கவில்லை, அதேபொல் யாரும் வாக்களிப்பதைத் தவிர்க்கவும் இல்லை.

அதனை தொடர்ந்து உள்ளூராட்சி மன்றத் தேர்தல் (சிறப்பு ஏற்பாடுகள்) சட்டமூலத்தின் மூன்றாவது வாசிப்பு எனப்படும் குழு நிலை விவாதம் ஆரம்பமானது.

இதில் சட்டமூலத்திற்கு ஆதரவாக 158 வாக்குகள் பதிவாகியிருந்த நிலையில் எதிராக வாக்குகள் எதுவும் பதிவாகவில்லை.

அதன்படி, உள்ளூராட்சி மன்றத் தேர்தல் (சிறப்பு ஏற்பாடுகள்) சட்டமூலம் திருத்தம் இல்லாமல் சிறப்பு பெரும்பான்மையால் நிறைவேற்றப்பட்டதாக சபாநாயகர் சபைக்குத் அறிவித்தார்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...