Tamil Leader News
முக்கியம்
நீதிமன்ற அலைக்களத்தின் வார இறுதி விபரிப்பு: அரசியல் பலவான்களுக்கு எதிரான சட்டம்!●2027க்கான பட்ஜெட்; அட்வகாட்டா நிறுவனத்திடமிருந்து 5 பொருளாதார முன்மொழிவுகள்!●சங்கக்காரவின் விமான நிலையச் சம்பவத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்!●நான்கு மாவட்டங்களுக்கான நிலச்சரிவு எச்சரிக்கையை நீடித்தது NBRO!●'அவரைக் கொல்ல முயல்கிறார்கள்': இம்ரான் கானின் உயிருக்கு ஆபத்து என அவரது மகன் அவசர எச்சரிக்கை!●தமிழகத்தில் அடையாள அட்டைக்காகப் போராடும் இலங்கை இளைஞர்!●உலகின் மிகப்பெரிய கிரிப்டோகரன்சி கொள்ளையின் முழுமையான பின்னணி!●17ஆம் திகதி நாட்டை இருளில் மூழ்கடித்த திடீர் மின் தடையின் அறிக்கை வெளியானது!●இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●
செய்திகள்

கப்பம் கோரப்படும் 04 தொலைபேசி இலக்கங்கள் இதோ!

T

The Leader Desk

பிப்ரவரி 17, 2025 • 2:35 AM

கப்பம் கோரப்படும் 04 தொலைபேசி இலக்கங்கள் இதோ!   

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • பொலிஸார் விசாரணையை ஆரம்பித்துள்ளனர்.
  • இது தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்து வரும் நுகேகொடை வலய குற்றப் புலனாய்வுப் பிரிவு, இந்த மோசடியின் முக்கிய சந்தேக நபர் சுமார் நான்கு ஆண்டுகளுக்கு முன்பு வெளிநாட்டிற்கு சென்ற 32 வயதுடைய நபர் என்பதை வெளிப்படுத்தியுள்ளது.
  • அதன் ஊடாக அவர்களது தொலைபேசி நிறுவனம் மூலமாக அழைப்பு வந்தது என்பதை நம்ப வைப்பதே இதன் நோக்கமாகும்.
  • இதுபோன்ற கடத்தலுக்கு பரவலாகப் பயன்படுத்தப்பட்ட 4 தொலைபேசி எண்களை பொலிஸர் தற்போது அடையாளம் கண்டுள்ளனர்.
எழுத்து அளவு:

பொலிஸார் விசாரணையை ஆரம்பித்துள்ளனர்.

இது தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்து வரும் நுகேகொடை வலய குற்றப் புலனாய்வுப் பிரிவு, இந்த மோசடியின் முக்கிய சந்தேக நபர் சுமார் நான்கு ஆண்டுகளுக்கு முன்பு வெளிநாட்டிற்கு சென்ற 32 வயதுடைய நபர் என்பதை வெளிப்படுத்தியுள்ளது.

டுபாயை தளமாகக் கொண்ட இந்த கடத்தல்காரர்கள், கப்பம் பெறும் நோக்குடன் இலங்கையில் உள்ள ஏனையவர்கள் பயன்படுத்தி வரும், தொலைபேசி எண்களைப் பயன்படுத்தி மோசடி செய்து பணம் பறிப்பது விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

ஒவ்வொரு நபருக்கும் அவர்கள் பயன்படுத்தும் தொலைபேசி எண்களின் ஊடாகவே தொலைபேசி அழைப்புகளை மேற்கொள்ளும் வகையில் ஒரு தொழில்நுட்ப முறையைப் பயன்படுத்தியிருப்பது தெரியவந்துள்ளது.

அதன் ஊடாக அவர்களது தொலைபேசி நிறுவனம் மூலமாக அழைப்பு வந்தது என்பதை நம்ப வைப்பதே இதன் நோக்கமாகும்.

அழைப்பாளர் ஒரு லொட்டரியில் பரிசு வென்றதாகக் கூறி, அதைப் பெறுவதற்காக தொலைபேசி எண்ணுக்கு SMS மூலம் பெறப்பட்ட OTP எண்ணை வழங்குமாறு கேட்பது தெரியவந்துள்ளது.

பின்னர் மோசடி செய்பவர்கள் OTP எண்ணைப் பயன்படுத்தி தொலைபேசியின் அனைத்து விவரங்களையும் பெற்று, அந்த தொலைபேசி எண்ணுடன் தொடர்புடைய e-SIM கார்டைப் பெற்று, அதைப் பயன்படுத்தி பணம் பறிப்பதாக பொலிஸார் கூறுகின்றனர்.

இதுபோன்ற கடத்தலுக்கு பரவலாகப் பயன்படுத்தப்பட்ட 4 தொலைபேசி எண்களை பொலிஸர் தற்போது அடையாளம் கண்டுள்ளனர்.

076 944 91 26

071 564 97 53

076 413 26 85

074 149 75 54

அதற்கமைய, பின்வரும் எண்களில் இருந்து அழைப்பு வந்தால் உடனடியாக அருகிலுள்ள பொலிஸ் நிலையத்திற்குத் தெரிவிக்குமாறு விசாரணை அதிகாரிகள் பொதுமக்களைக் கேட்டுக்கொண்டுள்ளனர்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...