Tamil Leader News
முக்கியம்
நீதிமன்ற அலைக்களத்தின் வார இறுதி விபரிப்பு: அரசியல் பலவான்களுக்கு எதிரான சட்டம்!●2027க்கான பட்ஜெட்; அட்வகாட்டா நிறுவனத்திடமிருந்து 5 பொருளாதார முன்மொழிவுகள்!●சங்கக்காரவின் விமான நிலையச் சம்பவத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்!●நான்கு மாவட்டங்களுக்கான நிலச்சரிவு எச்சரிக்கையை நீடித்தது NBRO!●'அவரைக் கொல்ல முயல்கிறார்கள்': இம்ரான் கானின் உயிருக்கு ஆபத்து என அவரது மகன் அவசர எச்சரிக்கை!●தமிழகத்தில் அடையாள அட்டைக்காகப் போராடும் இலங்கை இளைஞர்!●உலகின் மிகப்பெரிய கிரிப்டோகரன்சி கொள்ளையின் முழுமையான பின்னணி!●17ஆம் திகதி நாட்டை இருளில் மூழ்கடித்த திடீர் மின் தடையின் அறிக்கை வெளியானது!●இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●
செய்திகள்

சுமந்திரனுக்கு எதற்கு பதில் செயலாளர் பதவி?

T

The Leader Desk

பிப்ரவரி 17, 2025 • 2:06 AM

சுமந்திரனுக்கு எதற்கு பதில் செயலாளர் பதவி?   

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • மட்டக்களப்பு - களுவாஞ்சிகுடியில் நேற்று (16) நடைபெற்ற கட்சியின் மத்திய குழுக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது.
  • யோகேஸ்வரன் ஆகியோர் தமது எதிர்ப்பைப் பதிவு செய்தனர்.
  • இதுவரை அப்பதவியில் இருந்த மருத்துவர் ப.சத்தியலிங்கம் எம்.பி, சுகயீனம் காரணமாக பதவியில் தான் தொடர்ந்து இருக்க முடியாது என கூட்டத்தில் அறிவித்தமையை அடுத்து கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது.
எழுத்து அளவு:

மட்டக்களப்பு - களுவாஞ்சிகுடியில் நேற்று (16) நடைபெற்ற கட்சியின் மத்திய குழுக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது.

இதுவரை அப்பதவியில் இருந்த மருத்துவர் ப.சத்தியலிங்கம் எம்.பி, சுகயீனம் காரணமாக பதவியில் தான் தொடர்ந்து இருக்க முடியாது என கூட்டத்தில் அறிவித்தமையை அடுத்து கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது.

சத்தியலிங்கத்துக்கு அடுத்து, கட்சியில் சிரஷ்ட துணைச் செயலாளராக இருந்த சுமந்திரனைப் பதில் பொதுச் செயலாளராக நியமிப்பது என மத்திய குழு உடனடியாகவே தீர்மானித்தது.

அந்த முடிவுக்கு கட்சியின் நாடாளுமன்ற குழு தலைவர் சிறீதரன் எம்.பி., ஸ்ரீநேசன் எம்.பி. மற்றும் முன்னாள் எம்.பி. யோகேஸ்வரன் ஆகியோர் தமது எதிர்ப்பைப் பதிவு செய்தனர். எனினும், அவர்களின் எதிர்ப்பை மீறி அந்த நியமனத்தை மத்திய குழு மேற்கொண்டது.

வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலை எதிர்கொள்வதற்கான தந்திரோபாயம் குறித்து இன்றைய கூட்டத்தில் கலந்துரையாடப்பட்டது. தேர்தலை தனியாகத் தமிழரசுக் கட்சியாக எதிர்கொண்டாலும், மற்றைய தமிழ்த் தேசியக் கட்சிகளுடன் தேர்தலுக்கு முன்னரே இணக்க உடன்பாடு ஒன்றைச் செய்து கொள்வது என்றும் தீர்மானிக்கப்பட்டது.

கட்சியின் மூத்த தலைவர் மாவை சேனாதிராஜாவின் மறைவையொட்டிய வேளையில்  கட்சியின் பிரமுகர்களுக்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட வன்முறை பாங்கிலான அச்சுறுத்தல் நடவடிக்கைகள் குறித்து யாழ்ப்பாணத்தில் செய்யப்பட்டுள்ள பொலிஸ் முறைப்பாடு தொடர்பில் காத்திரமான முன்நகர்வுகள் இல்லாவிட்டால், அந்த நடவடிக்கைகளினால் பாதிக்கப்பட்டவர்களில் முக்கிய பிரமுகர்கள் இருப்பதையும் கவனத்தில் கொண்டு, அந்த விடயத்தை குற்ற புலனாய்வுப் பிரிவினர் மூலம் துரிதமாக முன்னெடுத்து, புலனாய்வு செய்து விசாரிப்பதற்கான நடவடிக்கைகளை கொழும்பில் கட்சி ரீதியாக மேற்கொள்வது என்றும் தீர்மானிக்கப்பட்டதாக அறியவந்துள்ளது.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...