Tamil Leader News
முக்கியம்
2027க்கான பட்ஜெட்; அட்வகாட்டா நிறுவனத்திடமிருந்து 5 பொருளாதார முன்மொழிவுகள்!●சங்கக்காரவின் விமான நிலையச் சம்பவத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்!●நான்கு மாவட்டங்களுக்கான நிலச்சரிவு எச்சரிக்கையை நீடித்தது NBRO!●'அவரைக் கொல்ல முயல்கிறார்கள்': இம்ரான் கானின் உயிருக்கு ஆபத்து என அவரது மகன் அவசர எச்சரிக்கை!●தமிழகத்தில் அடையாள அட்டைக்காகப் போராடும் இலங்கை இளைஞர்!●உலகின் மிகப்பெரிய கிரிப்டோகரன்சி கொள்ளையின் முழுமையான பின்னணி!●17ஆம் திகதி நாட்டை இருளில் மூழ்கடித்த திடீர் மின் தடையின் அறிக்கை வெளியானது!●இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●65 இலட்சம் ஓட்டுநர் உரிமங்கள் தேக்கம்: நிலைமை சீரடைய 2027 ஏப்ரல் வரை தாமதம்!●
செய்திகள்

17 அமெரிக்க பாதிரியார்கள் உட்பட குழந்தைகளும் ஹைதியில் கடத்தப்பட்டனர்!

T

The Leader Desk

அக்டோபர் 18, 2021 • 4:32 AM

17 அமெரிக்க பாதிரியார்கள் உட்பட குழந்தைகளும் ஹைதியில் கடத்தப்பட்டனர்!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • கரீபியன் தீவு நாடான ஹைதி உலகிலேயே அதிக அளவு கடத்தல் சம்பவங்கள் நடக்கும் நாடாக இருந்து வருகிறது.
  • தேவாலய ஊழியர்கள் தங்கள் குடும்பத்தினரோடு அருகில் உள்ள ஒரு அனாதை ஆசிரமத்துக்கு சென்றுவிட்டு பஸ்சில் திரும்பி கொண்டிருந்தபோது, அவர்களை வழிமறித்த மர்ம கும்பல் சிறுவர்கள் உள்பட 17 பேரை கடத்தி சென்றது.
  • எனினும் தீவிர பாதுகாப்பு நடவடிக்கைகளின் பலனாக கடந்த சில ஆண்டுகளாக அங்கு கடத்தல் சம்பவங்கள் குறைந்திருந்தன.
எழுத்து அளவு:

கரீபியன் தீவு நாடான ஹைதி உலகிலேயே அதிக அளவு கடத்தல் சம்பவங்கள் நடக்கும் நாடாக இருந்து வருகிறது. எனினும் தீவிர பாதுகாப்பு நடவடிக்கைகளின் பலனாக கடந்த சில ஆண்டுகளாக அங்கு கடத்தல் சம்பவங்கள் குறைந்திருந்தன. இந்த சூழலில் அண்மையில் அந்த நாட்டின் அதிபர் ஜோவனல் மோயிஸ் கூலிப்படையினரால் படுகொலை செய்யப்பட்ட பின்னர் கடத்தல் கும்பல்களின் கை மீண்டும் ஓங்கியுள்ளது.

இந்த நிலையில், ஹைதியின் தலைநகர் போர்ட் அவ் பிரின்சில் உள்ள தேவாலயத்தில் பணியாற்றி வரும் அமெரிக்காவை சேர்ந்த கிறிஸ்தவ ஊழியர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினர் கடத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தேவாலய ஊழியர்கள் தங்கள் குடும்பத்தினரோடு அருகில் உள்ள ஒரு அனாதை ஆசிரமத்துக்கு சென்றுவிட்டு பஸ்சில் திரும்பி கொண்டிருந்தபோது, அவர்களை வழிமறித்த மர்ம கும்பல் சிறுவர்கள் உள்பட 17 பேரை கடத்தி சென்றது.

கடத்தல்காரர்கள் யார்? அவர்களின் நோக்கம் என்ன? கடத்தப்பட்டவர்களின் தற்போதைய நிலை என்ன? போன்ற எந்த தகவல்களும் வெளியாகவில்லை.

இந்த கடத்தல் சம்பவம் தொடர்பாக ஹைதி அதிகாரிகளுடன் தொடர்ந்து தொடர்பில் இருந்து வருவதாக போர்ட் அவ் பிரின்சில் உள்ள அமெரிக்க தூதரகம் தெரிவித்துள்ளது.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...