Tamil Leader News
முக்கியம்
நான்கு மாவட்டங்களுக்கான நிலச்சரிவு எச்சரிக்கையை நீடித்தது NBRO!●'அவரைக் கொல்ல முயல்கிறார்கள்': இம்ரான் கானின் உயிருக்கு ஆபத்து என அவரது மகன் அவசர எச்சரிக்கை!●தமிழகத்தில் அடையாள அட்டைக்காகப் போராடும் இலங்கை இளைஞர்!●உலகின் மிகப்பெரிய கிரிப்டோகரன்சி கொள்ளையின் முழுமையான பின்னணி!●17ஆம் திகதி நாட்டை இருளில் மூழ்கடித்த திடீர் மின் தடையின் அறிக்கை வெளியானது!●இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●65 இலட்சம் ஓட்டுநர் உரிமங்கள் தேக்கம்: நிலைமை சீரடைய 2027 ஏப்ரல் வரை தாமதம்!●இஸ்ரேலிய வேலைவாய்ப்பு ஆட்சேர்ப்பு அரசாங்கத்தின் நேரடித் தலையீட்டிற்கு மாத்திரமே கட்டுப்படுத்தப்படும்!●மாடு அறுத்த குற்றத்துக்காக குஜராத்தில் மூவருக்கு ஆயுள் தண்டனை!●
செய்திகள்

எதிர்க்கட்சிகளின் பொதுக் கூட்டு எதற்கு?

T

The Leader Desk

ஆகஸ்ட் 16, 2025 • 2:50 PM

எதிர்க்கட்சிகளின் பொதுக் கூட்டு எதற்கு?

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச உள்ளிட்ட எதிர்க்கட்சிகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் கட்சித் தலைவர்களை எதிர்வரும் சில நாட்களில் சந்திக்கத் தீர்மானித்துள்ளது.
  • சுமார் ஒன்றரை மணித்தியாலங்கள் நீடித்த இந்தக் கலந்துரையாடலில், ஜி.எல்.
  • எதிர்க்கட்சியில் உள்ள அனைத்துக் கட்சிகளும் பொதுவான விடயங்களில் இணைந்து செயற்படுவதற்குப் பின்பற்ற வேண்டிய வேலைத்திட்டம் மற்றும் உபாயங்கள் தொடர்பில் கலந்துரையாடுவதே இதன் நோக்கமாகும் என பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.
எழுத்து அளவு:

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச உள்ளிட்ட எதிர்க்கட்சிகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் கட்சித் தலைவர்களை எதிர்வரும் சில நாட்களில் சந்திக்கத் தீர்மானித்துள்ளது.

எதிர்க்கட்சியில் உள்ள அனைத்துக் கட்சிகளும் பொதுவான விடயங்களில் இணைந்து செயற்படுவதற்குப் பின்பற்ற வேண்டிய வேலைத்திட்டம் மற்றும் உபாயங்கள் தொடர்பில் கலந்துரையாடுவதே இதன் நோக்கமாகும் என பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.

கடந்த வியாழக்கிழமை பிற்பகல் முன்னாள் அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸின் இல்லத்தில் நடைபெற்ற கலந்துரையாடலின் போதே அவர்கள் இந்த தீர்மானத்தை எடுத்துள்ளனர்.

இந்த சந்திப்பு எந்தவொரு அரசியல் கட்சியையோ அல்லது அமைப்பையோ கட்டியெழுப்பும் நோக்கில் அல்லாது, நாட்டைப் பாதிக்கும் சமூக, பொருளாதாரப் பிரச்சினைகள் தொடர்பில் இணக்கப்பாட்டை ஏற்படுத்தி, ஒரு பரந்த தளத்தை உருவாக்குவதற்காகவே இடம்பெற்றதாக பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர குறிப்பிடுகின்றார்.

இந்த எதிர்கால வேலைத்திட்டம் தொடர்பான ஒரு கருத்தாக்கப் பத்திரத்தை தயாரிப்பது குறித்தும் இதன்போது கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

சுமார் ஒன்றரை மணித்தியாலங்கள் நீடித்த இந்தக் கலந்துரையாடலில், ஜி.எல். பீரிஸ், மிலிந்த மொரகொட, அநுர பிரியதர்ஷன யாப்பா, சுசில் பிரேமஜயந்த, பாட்டலி சம்பிக ரணவக்க, மஹிந்த அமரவீர, மனோ கணேசன், நிஷான் காரியப்பர், ரிஷாட் பதியுதீன், தயாசிறி ஜயசேகர, ரமேஷ் பத்திரண, லசந்த அழகியவன்ன, மயந்த திஸாநாயக்க, பிரேம்நாத் சி. தொலவத்த ஆகிய முன்னாள் அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழுவொன்று கலந்துகொண்டது.

ஜி.எல். பீரிஸின் இல்லத்தில் இந்த முன்னாள் அமைச்சர்கள் குழு இதற்கு முன்னரும் கலந்துரையாடல்களை நடத்தியுள்ளது.

எதிர்க்கட்சிகளின் பொதுவான மேடை ஒரு தலைமைத்துவ சபையின் கீழ் இயங்கவுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...