Tamil Leader News
முக்கியம்
நான்கு மாவட்டங்களுக்கான நிலச்சரிவு எச்சரிக்கையை நீடித்தது NBRO!●'அவரைக் கொல்ல முயல்கிறார்கள்': இம்ரான் கானின் உயிருக்கு ஆபத்து என அவரது மகன் அவசர எச்சரிக்கை!●தமிழகத்தில் அடையாள அட்டைக்காகப் போராடும் இலங்கை இளைஞர்!●உலகின் மிகப்பெரிய கிரிப்டோகரன்சி கொள்ளையின் முழுமையான பின்னணி!●17ஆம் திகதி நாட்டை இருளில் மூழ்கடித்த திடீர் மின் தடையின் அறிக்கை வெளியானது!●இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●65 இலட்சம் ஓட்டுநர் உரிமங்கள் தேக்கம்: நிலைமை சீரடைய 2027 ஏப்ரல் வரை தாமதம்!●இஸ்ரேலிய வேலைவாய்ப்பு ஆட்சேர்ப்பு அரசாங்கத்தின் நேரடித் தலையீட்டிற்கு மாத்திரமே கட்டுப்படுத்தப்படும்!●மாடு அறுத்த குற்றத்துக்காக குஜராத்தில் மூவருக்கு ஆயுள் தண்டனை!●
செய்திகள்

ஹர்த்தாலுக்கு மு.கா முழுமையான ஆதரவு!

T

The Leader Desk

ஆகஸ்ட் 16, 2025 • 2:43 PM

ஹர்த்தாலுக்கு மு.கா முழுமையான ஆதரவு!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • ஆழமான சீர்கேட்டை வெளிப்படுத்துகின்றது.
  • எனவே, நீதி, பொறுப்புகூறல் மற்றும் இராணுவத்தினுள் நிலவும் தண்டனையற்ற சூழ்நிலைக்கு முடிவு கோரும் அமைதியான எதிர்ப்பாக எதிர்வரும் திங்கட்கிழமை (18 ஆம் திகதி) முன்னெடுக்கப் படவுள்ள ஹர்த்தாலுக்கு முழுமையான ஆதரவை வழங்குகின்றோம்” என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அறிவித்துள்ளது.
  • “இன்னும் ஒரு கவலைக்குரிய விடயம் என்னவெனில் அரசு இஸ்ரேலில் இருந்து பயணிகளுக்கு விசா விலக்கு வழங்கும் போக்காகும்.
  • “இந்தச் சூழ்நிலையில் எதிர்வரும் திங்கட்கிழமை (18 ஆம் திகதி) இலங்கைத் தமிழரசுக் கட்சி அறிவித்துள்ள ஹர்த்தாலை முழுமையாக ஆதரிக்க எங்கள் கட்சி தீர்மானித்துள்ளது.
எழுத்து அளவு:

ஆழமான சீர்கேட்டை வெளிப்படுத்துகின்றது. எனவே, நீதி, பொறுப்புகூறல் மற்றும் இராணுவத்தினுள் நிலவும் தண்டனையற்ற சூழ்நிலைக்கு முடிவு கோரும் அமைதியான எதிர்ப்பாக எதிர்வரும் திங்கட்கிழமை (18 ஆம் திகதி) முன்னெடுக்கப் படவுள்ள ஹர்த்தாலுக்கு முழுமையான ஆதரவை வழங்குகின்றோம்” என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அறிவித்துள்ளது.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ஜனாதிபதி சட்டத்தரணி நிசாம் காரியப்பர் இன்று சனிக்கிழமை அறிக்கையொன்றை வெளியிட்டு இதனைத் தெரிவித்துள்ளார்.

அந்த அறிக்கையில் மேலும் குறிப் பிடப்பட்டுள்ளதாவது:-

“முல்லைத்தீவில் அண்மையில் இடம்பெற்ற படுகொலை, இராணுவ உறுப்பினர்களால் மேற்கொள்ளப்பட்டதாக அறியப்படுகின்றது. பொதுமக்களைப் பாதுகாக்க வேண்டிய படைகள் தாமே சட்டமும் ஒழுங்கும் இழந்து இப்படி கொடூரச் செயல்களைச் செய்வது, இந்த நாட்டின் சட்ட அமுலாக்கத்தின் ஆழமான சீர்கேட்டை வெளிப்படுத்துகின்றது.

“இப்படிப்பட்ட குற்றங்களுக்குப் பொறுப்பேற்கச் செய்வதில் அரசின் இயலாமை அல்லது விருப்பமின்மை, பொதுமக்களின் நம்பிக்கையைச் சிதைத்து, நிரபராதிகளின் உயிரை ஆபத்துக்குள்ளாக்கியுள்ளது.

“இன்னும் ஒரு கவலைக்குரிய விடயம் என்னவெனில் அரசு இஸ்ரேலில் இருந்து பயணிகளுக்கு விசா விலக்கு வழங்கும் போக்காகும். இவர்கள் பலர் காசாவில் சர்வதேச மனிதாபிமானச் சட்டங்களை மீறியதாகப் பரவலாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ள இஸ்ரேல் பாதுகாப்புப் படைஉறுப்பினர்களே.

“இந்தச் சூழ்நிலையில் எதிர்வரும் திங்கட்கிழமை (18 ஆம் திகதி) இலங்கைத் தமிழரசுக் கட்சி அறிவித்துள்ள ஹர்த்தாலை முழுமையாக ஆதரிக்க எங்கள் கட்சி தீர்மானித்துள்ளது. இது நீதி, பொறுப்புக்கூறல், மற்றும் இராணுவத்தினுள் நிலவும் தண்டனையற்ற சூழ்நிலைக்கு முடிவு கோரும் அமைதியான எதிர்ப்பாகும்.

“வடக்கு, கிழக்கில் உள்ள நமது முஸ்லிம் சகோதரர்களும், சகோதரிகளும் எதிர்வரும் திங்கட்கிழமை குறைந்தபட்சம் காலை நேரத்தில் தங்கள் கடைகள் மற்றும் தொழில்களை மூடுவதன் மூலம் இந்த ஒற்றுமைப் போராட்டத்தில் இணையுமாறு அன்புடன் அழைக்கின்றோம்.

“தமிழ் மற்றும் முஸ்லிம் என அனைத்து சமூகங்களும் ஒன்றிணைந்து வன்முறையை நிராகரித்து, அநீதிக்கு எதிராகக் குரல் கொடுக்க வேண்டும்” என்றுள்ளது.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

ஹர்த்தாலுக்கு மு.கா முழுமையான ஆதரவு! | Tamil Leader | We Lead the Nation