Tamil Leader News
முக்கியம்
நான்கு மாவட்டங்களுக்கான நிலச்சரிவு எச்சரிக்கையை நீடித்தது NBRO!●'அவரைக் கொல்ல முயல்கிறார்கள்': இம்ரான் கானின் உயிருக்கு ஆபத்து என அவரது மகன் அவசர எச்சரிக்கை!●தமிழகத்தில் அடையாள அட்டைக்காகப் போராடும் இலங்கை இளைஞர்!●உலகின் மிகப்பெரிய கிரிப்டோகரன்சி கொள்ளையின் முழுமையான பின்னணி!●17ஆம் திகதி நாட்டை இருளில் மூழ்கடித்த திடீர் மின் தடையின் அறிக்கை வெளியானது!●இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●65 இலட்சம் ஓட்டுநர் உரிமங்கள் தேக்கம்: நிலைமை சீரடைய 2027 ஏப்ரல் வரை தாமதம்!●இஸ்ரேலிய வேலைவாய்ப்பு ஆட்சேர்ப்பு அரசாங்கத்தின் நேரடித் தலையீட்டிற்கு மாத்திரமே கட்டுப்படுத்தப்படும்!●மாடு அறுத்த குற்றத்துக்காக குஜராத்தில் மூவருக்கு ஆயுள் தண்டனை!●
செய்திகள்

செம்மணியில் புத்தகப் பையோடு மீட்கப்பட்ட எலும்புக்கூடு சிறுமியினுடையது!

T

The Leader Desk

ஜூலை 16, 2025 • 3:24 AM

செம்மணியில் புத்தகப் பையோடு மீட்கப்பட்ட எலும்புக்கூடு சிறுமியினுடையது!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • போன்றவற்றோடு அடையாளம் காணப்பட்ட என்புத் தொகுதி 4 - 5 வயதுடைய சிறுமியினுடையது என்று சட்ட மருத்துவ அதிகாரி பிரணவன் செல்லையாவால் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
  • ஆனந்தராஜா கடந்த 10ஆம் திகதி கட்டளை ஒன்றினை வழங்கியிருந்தார்.
  • இந்நிலையில் நேற்று செம்மணிப் புதைகுழி தொடர்பான வழக்கு யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது அந்த என்புத் தொகுதி தொடர்பான அறிக்கை மன்றுக்குச் சமர்ப்பிக்கப்பட்டது.
  • நீல நிறப் புத்தகப்பை, சிறுவர்கள் விளையாடும் பொம்மை போன்றவற்றோடு அடையாளம் காணப்பட்ட எஸ் - 25 என அடையாளமிடப்பட்ட என்புத் தொகுதி சிறுமியின் என்புத் தொகுதி எனவும், உத்தேசமாக 4 - 5 வயதுடையதாக இருக்கும் எனவும் சட்ட மருத்துவ அதிகாரி மன்றில் தனது அறிக்கையை வெளியிட்டார்.
எழுத்து அளவு:

போன்றவற்றோடு அடையாளம் காணப்பட்ட என்புத் தொகுதி 4 - 5 வயதுடைய சிறுமியினுடையது என்று சட்ட மருத்துவ அதிகாரி பிரணவன் செல்லையாவால் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

செம்மணி புதைகுழியில் இருந்து நீல நிறப் புத்தகப்பை, சிறுவர்கள் விளையாடும் பொம்மை என்பவற்றோடு அகழ்ந்தெடுக்கப்பட்ட சிறுவரின் என்புத் தொகுதி எனச் சந்தேகிக்கப்படும் என்புத் தொகுதி தொடர்பான மனித என்பு ஆய்வு அறிக்கையை 15ஆம் திகதிக்கு (நேற்று) முன்னர் மன்றில் சமர்ப்பிக்குமாறு சட்ட மருத்துவ அதிகாரி பிரணவன் செல்லையாவுக்கு யாழ்ப்பாணம் நீதிவான் ஏ.ஏ. ஆனந்தராஜா கடந்த 10ஆம் திகதி கட்டளை ஒன்றினை வழங்கியிருந்தார்.

இந்நிலையில் நேற்று செம்மணிப் புதைகுழி தொடர்பான வழக்கு யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது அந்த என்புத் தொகுதி தொடர்பான அறிக்கை மன்றுக்குச் சமர்ப்பிக்கப்பட்டது.

நீல நிறப் புத்தகப்பை, சிறுவர்கள் விளையாடும் பொம்மை போன்றவற்றோடு அடையாளம் காணப்பட்ட எஸ் - 25 என அடையாளமிடப்பட்ட என்புத் தொகுதி சிறுமியின் என்புத் தொகுதி எனவும், உத்தேசமாக 4 - 5 வயதுடையதாக இருக்கும் எனவும் சட்ட மருத்துவ அதிகாரி மன்றில் தனது அறிக்கையை வெளியிட்டார்.

மேலும் எஸ் - 48, எஸ் - 56 என அடையாளமிடப்பட்ட சிறுவர்களினுடைய என்புத் தொகுதிகள் எனச் சந்தேகிக்கப்படும் என்புத் தொகுதிகள், புத்தகப்பையோடு அடையாளம் காணப்பட்ட சிறுமியினுடைய என்புத் தொகுதியோடு உடைகள் மற்றும் என்பியல் சம்பந்தமாக ஒருமித்த தன்மைகள் இருப்பதாகவும் மன்றுக்கு சட்ட மருத்துவ அதிகாரியால் சுட்டிக்காட்டப்பட்டது.

புத்தகப்பையோடு அடையாளம் காணப்பட்ட என்புத் தொகுதியில் மேற்கொள்ளப்பட்டது போன்ற என்பு ஆய்வை சிறுவர்களினுடையது என நம்பப்படும் குறித்த இரண்டு என்புத் தொகுதிகள் மீதும் மேற்கொண்டு அறிக்கை சமர்ப்பிக்குமாறும் மன்றால் அறிவுறுத்தப்பட்டது.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...