Tamil Leader News
முக்கியம்
2027க்கான பட்ஜெட்; அட்வகாட்டா நிறுவனத்திடமிருந்து 5 பொருளாதார முன்மொழிவுகள்!●சங்கக்காரவின் விமான நிலையச் சம்பவத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்!●நான்கு மாவட்டங்களுக்கான நிலச்சரிவு எச்சரிக்கையை நீடித்தது NBRO!●'அவரைக் கொல்ல முயல்கிறார்கள்': இம்ரான் கானின் உயிருக்கு ஆபத்து என அவரது மகன் அவசர எச்சரிக்கை!●தமிழகத்தில் அடையாள அட்டைக்காகப் போராடும் இலங்கை இளைஞர்!●உலகின் மிகப்பெரிய கிரிப்டோகரன்சி கொள்ளையின் முழுமையான பின்னணி!●17ஆம் திகதி நாட்டை இருளில் மூழ்கடித்த திடீர் மின் தடையின் அறிக்கை வெளியானது!●இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●65 இலட்சம் ஓட்டுநர் உரிமங்கள் தேக்கம்: நிலைமை சீரடைய 2027 ஏப்ரல் வரை தாமதம்!●
செய்திகள்

கொட்டாஞ்சேனை மாணவி மரணம்: தனியார் கல்வி நிறுவன ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்கப்படாதாம்!

T

The Leader Desk

மே 16, 2025 • 11:18 AM

கொட்டாஞ்சேனை மாணவி மரணம்: தனியார் கல்வி நிறுவன ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்கப்படாதாம்!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • குற்றம் சாட்டப்பட்டுள்ள தனியார் கல்வி நிறுவன உரிமையாளர் சிவானந்த ராஜா மீது நடவடிக்கை எடுக்கப்படாது என சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபையின் சட்ட நடைமுறையாக்கல் பிரிவின் பணிப்பாளர் சஜீவனி அபேகோன் தெரிவித்துள்ளார்.
  • சம்பவம் தொடர்பில் குறித்த தனியார் வகுப்பில் கல்வி பயிலும் 20 மாணவர்களிடம் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
  • எனினும், குறித்த சம்பவத்துடன் தனியார் கல்வி நிறுவனருக்கு தொடர்பு இருப்பதாக எந்தவொரு மாணவரும் நேரடி வாக்குமூலம் அளிக்கவில்லை.
எழுத்து அளவு:

குற்றம் சாட்டப்பட்டுள்ள தனியார் கல்வி நிறுவன உரிமையாளர் சிவானந்த ராஜா மீது நடவடிக்கை எடுக்கப்படாது என சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபையின் சட்ட நடைமுறையாக்கல் பிரிவின் பணிப்பாளர் சஜீவனி அபேகோன் தெரிவித்துள்ளார்.

உயிரிழந்த சிறுமியின் தாயாரின் வாக்குமூலத்தை மட்டும் அடிப்படையாக கொண்டு அடுத்த கட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் குறித்த தனியார் வகுப்பில் கல்வி பயிலும் 20 மாணவர்களிடம் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. எனினும், குறித்த சம்பவத்துடன் தனியார் கல்வி நிறுவனருக்கு தொடர்பு இருப்பதாக எந்தவொரு மாணவரும் நேரடி வாக்குமூலம் அளிக்கவில்லை.

இந்நிலையில், குறித்த சம்பவம் தொடர்பில் தொடர்ச்சியான விசாரணைகள் இடம்பெற்று வருவதாக சஜீவனி அபேகோன் கூறியுள்ளார்.

இதேவேளை, உயிரிழந்த மாணவி கடந்த வருடம் தவறான முறைக்கு உட்படுத்தப்பட்டதாக கூறப்படும் தகவலில் உள்ள உண்மையை கண்டறிய பாடசாலையின் அதிபரிடம் விளக்கம் கோரப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...