Tamil Leader News
முக்கியம்
2027க்கான பட்ஜெட்; அட்வகாட்டா நிறுவனத்திடமிருந்து 5 பொருளாதார முன்மொழிவுகள்!●சங்கக்காரவின் விமான நிலையச் சம்பவத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்!●நான்கு மாவட்டங்களுக்கான நிலச்சரிவு எச்சரிக்கையை நீடித்தது NBRO!●'அவரைக் கொல்ல முயல்கிறார்கள்': இம்ரான் கானின் உயிருக்கு ஆபத்து என அவரது மகன் அவசர எச்சரிக்கை!●தமிழகத்தில் அடையாள அட்டைக்காகப் போராடும் இலங்கை இளைஞர்!●உலகின் மிகப்பெரிய கிரிப்டோகரன்சி கொள்ளையின் முழுமையான பின்னணி!●17ஆம் திகதி நாட்டை இருளில் மூழ்கடித்த திடீர் மின் தடையின் அறிக்கை வெளியானது!●இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●65 இலட்சம் ஓட்டுநர் உரிமங்கள் தேக்கம்: நிலைமை சீரடைய 2027 ஏப்ரல் வரை தாமதம்!●
செய்திகள்

20 மாவட்டங்களில் கடும் வெப்பம்: பொதுமக்களுக்கு எச்சரிக்கை!

T

The Leader Desk

ஏப்ரல் 16, 2025 • 9:08 AM

20 மாவட்டங்களில் கடும் வெப்பம்: பொதுமக்களுக்கு எச்சரிக்கை!   

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
  • அதிக வெப்பத்தால் பாதிக்கப்படக்கூடிய வயதானவர்கள் மற்றும் நோய்வாய்ப்பட்டவர்கள் கவனமாக இருக்க எச்சரிக்கப்பட்டுள்ளனர்.
  • அதன்படி வடக்கு, வடமத்திய, வடமேற்கு, மேற்கு, தெற்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் சில பகுதிகளிலும், இரத்தினபுரி மற்றும் மொனராகலை மாவட்டங்களிலும் மனித உடலால் உணரப்படும் வெப்பநிலை 'எச்சரிக்கை நிலை' வரை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்பட்டுள்ளது.
எழுத்து அளவு:

என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

அதன்படி வடக்கு, வடமத்திய, வடமேற்கு, மேற்கு, தெற்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் சில பகுதிகளிலும், இரத்தினபுரி மற்றும் மொனராகலை மாவட்டங்களிலும் மனித உடலால் உணரப்படும் வெப்பநிலை 'எச்சரிக்கை நிலை' வரை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்பட்டுள்ளது.

வெப்பத்தால் ஏற்படும் பக்கவாதம் போன்ற நோய்களைத் தவிர்க்க பின்வரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளது.

நிழலான இடங்களில் அடிக்கடி ஓய்வு எடுப்பதோடு, அதிளவு நீரைப் பருகவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதிக வெப்பத்தால் பாதிக்கப்படக்கூடிய வயதானவர்கள் மற்றும் நோய்வாய்ப்பட்டவர்கள் கவனமாக இருக்க எச்சரிக்கப்பட்டுள்ளனர்.

மேலும், வெளியிடங்களில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள வாகனங்களில் குழந்தைகள் அல்லது சிறுவர்களை நீண்ட நேரம் தனித்து விட வேண்டாம் என்றும் முடிந்தளவு வெளியில் மேற்கொள்ளக் கூடிய செயற்பாடுகளை தவிர்த்துக் கொள்ளுமாறும் கேட்டுக் கொண்டுள்ளது.

வெளியில் செல்லும் போது வெள்ளை அல்லது வெளிர் நிற ஆடைகளை அணிந்து செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், வெப்பநிலை குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும் அது தொடர்பான  உத்தியோகபூர்வ அறிவிப்புக்களை அறிந்துகொள்ள பொதுமக்கள் வளிமண்டலவியல் திணைக்களத்துடன் இணைந்திருக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.  

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...