Tamil Leader News
முக்கியம்
2027க்கான பட்ஜெட்; அட்வகாட்டா நிறுவனத்திடமிருந்து 5 பொருளாதார முன்மொழிவுகள்!●சங்கக்காரவின் விமான நிலையச் சம்பவத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்!●நான்கு மாவட்டங்களுக்கான நிலச்சரிவு எச்சரிக்கையை நீடித்தது NBRO!●'அவரைக் கொல்ல முயல்கிறார்கள்': இம்ரான் கானின் உயிருக்கு ஆபத்து என அவரது மகன் அவசர எச்சரிக்கை!●தமிழகத்தில் அடையாள அட்டைக்காகப் போராடும் இலங்கை இளைஞர்!●உலகின் மிகப்பெரிய கிரிப்டோகரன்சி கொள்ளையின் முழுமையான பின்னணி!●17ஆம் திகதி நாட்டை இருளில் மூழ்கடித்த திடீர் மின் தடையின் அறிக்கை வெளியானது!●இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●65 இலட்சம் ஓட்டுநர் உரிமங்கள் தேக்கம்: நிலைமை சீரடைய 2027 ஏப்ரல் வரை தாமதம்!●
செய்திகள்

‘ஈஸ்டர் தாக்குதல்களுடன் பிள்ளையானை தொடர்புபடுத்தும் அரசாங்கத்தின் முயற்சி தோல்வி!’

T

The Leader Desk

ஏப்ரல் 16, 2025 • 9:03 AM

‘ஈஸ்டர் தாக்குதல்களுடன் பிள்ளையானை தொடர்புபடுத்தும் அரசாங்கத்தின் முயற்சி தோல்வி!’   

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • தொடர்புபட்டுள்ளார் என்ற கருத்தை உருவாக்க அரசாங்கம் மேற்கொண்ட முயற்சி தோல்வியடைந்துள்ளதாக, சட்டத்தரணி உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
  • இந்தச் சந்திப்பு, நேற்றைய தினம், சுமார் 30 நிமிடங்கள் அளவில் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகின்றது.
  • அத்துடன், தனக்கு நித்திரை செய்வதற்குகூட முறையான ஏற்பாடுகள் செய்திருக்கப்படவில்லை என பிள்ளையான் கூறியதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
  • இவ்வாறிருக்க, இன்று (16) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கருத்துத் தெரிவித்த கம்மன்பில, ஈஸ்டர் தாக்குதல்களுடன் பிள்ளையான தொடர்புபட்டுள்ளார் என்ற கருத்தை உருவாக்க அரசாங்கம் மேற்கொண்ட முயற்சி தோல்வியடைந்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
எழுத்து அளவு:

தொடர்புபட்டுள்ளார் என்ற கருத்தை உருவாக்க அரசாங்கம் மேற்கொண்ட முயற்சி தோல்வியடைந்துள்ளதாக, சட்டத்தரணி உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தனை (பிள்ளையானை) முன்னாள் அமைச்சர் உதய கம்மன்பில சிறைக்கு சென்று சந்தித்து வந்திருந்தார்.

இந்தச் சந்திப்பு, நேற்றைய தினம், சுமார் 30 நிமிடங்கள் அளவில் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்நிலையில், இந்த கலந்துரையாடல் தொடர்பான விடயங்களை ஊடக சந்திப்பு ஒன்று மேற்கொண்டு, உதய கம்மன்பில தெரியப்படுத்தவுள்ளார்.

அது மாத்திரமன்றி பிள்ளையான், சிறையில் தனது நிலைமை குறித்து உதய கம்மன்பிலவிடம் தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது.

அதன்படி, இலங்கையின் ஆட்சியாளர்கள் தன்னை பயன்படுத்தி விட்டு தூக்கி வீசி விட்டதாகவும், முதுகு வலியுடன் நிலத்தில் நித்திரைகொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் பிள்ளையான் குறிப்பிட்டதாகவும் கூறப்படுகிறது.

அத்துடன், தனக்கு நித்திரை செய்வதற்குகூட முறையான ஏற்பாடுகள் செய்திருக்கப்படவில்லை என பிள்ளையான் கூறியதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இவ்வாறிருக்க, இன்று (16) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கருத்துத் தெரிவித்த கம்மன்பில, ஈஸ்டர் தாக்குதல்களுடன் பிள்ளையான தொடர்புபட்டுள்ளார் என்ற கருத்தை உருவாக்க அரசாங்கம் மேற்கொண்ட முயற்சி தோல்வியடைந்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

கிழக்குப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் பேராசிரியர் சிவசுப்பிரமணியம் ரவீந்திரநாத் கடத்தப்பட்டு காணாமல் போனது தொடர்பான விசாரணைகள் தொடர்பாக, முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் அல்லது பிள்ளையான் கடந்த 8ஆம் திகதி கைது செய்யப்பட்டார்.

இது, டிசம்பர் 15, 2006 அன்று நடந்த கடத்தல் சம்பவத்துக்காக, 18 ஆண்டுகளுக்குப் பிறகு நடந்த கைதாகும்.

பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட பிள்ளையான், தற்போது 90 நாள் தடுப்புக்காவல் உத்தரவின் பேரில் குற்றப் புலனாய்வுத் துறையின் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

இதற்கிடையில், சட்டத்தரணி உதய கம்மன்பில, காவலில் உள்ள பிள்ளையானை சந்தித்து நேற்று (15) அரை மணி நேரம் கலந்துரையாடினார்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

‘ஈஸ்டர் தாக்குதல்களுடன் பிள்ளையானை தொடர்புபடுத்தும் அரசாங்கத்தின் முயற்சி தோல்வி!’ | Tamil Leader | We Lead the Nation