Tamil Leader News
முக்கியம்
நீதிமன்ற அலைக்களத்தின் வார இறுதி விபரிப்பு: அரசியல் பலவான்களுக்கு எதிரான சட்டம்!●2027க்கான பட்ஜெட்; அட்வகாட்டா நிறுவனத்திடமிருந்து 5 பொருளாதார முன்மொழிவுகள்!●சங்கக்காரவின் விமான நிலையச் சம்பவத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்!●நான்கு மாவட்டங்களுக்கான நிலச்சரிவு எச்சரிக்கையை நீடித்தது NBRO!●'அவரைக் கொல்ல முயல்கிறார்கள்': இம்ரான் கானின் உயிருக்கு ஆபத்து என அவரது மகன் அவசர எச்சரிக்கை!●தமிழகத்தில் அடையாள அட்டைக்காகப் போராடும் இலங்கை இளைஞர்!●உலகின் மிகப்பெரிய கிரிப்டோகரன்சி கொள்ளையின் முழுமையான பின்னணி!●17ஆம் திகதி நாட்டை இருளில் மூழ்கடித்த திடீர் மின் தடையின் அறிக்கை வெளியானது!●இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●
செய்திகள்

நாட்டில் அதிகரிக்கும் வெப்பநிலை: பொதுமக்களுக்கு எச்சரிக்கை!

T

The Leader Desk

பிப்ரவரி 16, 2025 • 5:41 AM

நாட்டில் அதிகரிக்கும் வெப்பநிலை: பொதுமக்களுக்கு எச்சரிக்கை!   

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது.
  • நாட்டில் நிலவும் வெப்பமான வானிலை காரணமாக பாடசாலை மாணவர்கள் செயற்படும் விதத்தை உன்னிப்பாக அவதானித்து வருவதாகக் கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. இது தொடர்பில் நாளைய தினம் (17) கலந்துரையாடல் நடத்துவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
  • பாடசாலை மாணவர்கள் விளையாட்டுப் பயிற்சிகள் உள்ளிட்ட செயற்பாடுகளில் ஈடுபடும் போது அதிக சூரிய ஒளியில் இருப்பதனை தவிர்க்குமாறும் கல்வி அமைச்சின் செயலாளர் நாலக களுவெவ கோரியுள்ளார்.
  • அத்துடன், கொழும்பு, காலி, இரத்தினபுரி, திருகோணமலை, மட்டக்களப்பு, மன்னார் மற்றும் அனுராதபுரம் ஆகிய பகுதிகளில் வெப்பநிலையானது எதிர்வரும் நாட்களில் 32 முதல் 36 பாகை செல்சியஸ் வரை காணப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எழுத்து அளவு:

வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது.

அதன்படி, வெளியில், வீதிகளில் மற்றும் நெல் வயல்களில் வேலை செய்பவர்கள் தற்போதைய நிலைமை குறித்து மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்நிலைமைகளிலிருந்து பாதுகாக்க, சுகாதார அதிகாரிகள் மக்கள் அதிக தண்ணீர் குடிக்கவும், இயற்கை திரவங்களை அதிகமாக உட்கொள்ளவும் அறிவுறுத்தியுள்ளனர்.

நாட்டில் நிலவும் வெப்பமான வானிலை காரணமாக பாடசாலை மாணவர்கள் செயற்படும் விதத்தை உன்னிப்பாக அவதானித்து வருவதாகக் கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. 

இது தொடர்பில் நாளைய தினம் (17) கலந்துரையாடல் நடத்துவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

பாடசாலை மாணவர்கள் விளையாட்டுப் பயிற்சிகள் உள்ளிட்ட செயற்பாடுகளில் ஈடுபடும் போது அதிக சூரிய ஒளியில் இருப்பதனை தவிர்க்குமாறும் கல்வி அமைச்சின் செயலாளர் நாலக களுவெவ கோரியுள்ளார்.

இலங்கை உட்பட உலகின் மத்திய ரேகை பகுதியில் உள்ள பல நாடுகளில் தற்போதைய நாட்களில் அதிக வெப்பநிலை நிலவுகிறது.

அதன்படி, ஆசியா, ஆபிரிக்கா மற்றும் அவுஸ்திரேலியா ஆகிய கண்டங்களில் உள்ள நாடுகளும் அதிக வெப்பநிலையினால் பாதிக்கப்படுவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அத்துடன், கொழும்பு, காலி, இரத்தினபுரி, திருகோணமலை, மட்டக்களப்பு, மன்னார் மற்றும் அனுராதபுரம் ஆகிய பகுதிகளில் வெப்பநிலையானது எதிர்வரும் நாட்களில் 32 முதல் 36 பாகை செல்சியஸ் வரை காணப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிக வெப்பநிலையினால் உடல் வெப்பநிலை அதிகரித்து பல உடல்நல பிரச்சினைகளை ஏற்படக்கூடும் என்பதால் அதிகளவில் நீர், இயற்கை பானங்களை பருகுமாறு சுகாதார அதிகாரிகள் கோரியுள்ளனர்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...