Tamil Leader News
முக்கியம்
நான்கு மாவட்டங்களுக்கான நிலச்சரிவு எச்சரிக்கையை நீடித்தது NBRO!●'அவரைக் கொல்ல முயல்கிறார்கள்': இம்ரான் கானின் உயிருக்கு ஆபத்து என அவரது மகன் அவசர எச்சரிக்கை!●தமிழகத்தில் அடையாள அட்டைக்காகப் போராடும் இலங்கை இளைஞர்!●உலகின் மிகப்பெரிய கிரிப்டோகரன்சி கொள்ளையின் முழுமையான பின்னணி!●17ஆம் திகதி நாட்டை இருளில் மூழ்கடித்த திடீர் மின் தடையின் அறிக்கை வெளியானது!●இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●65 இலட்சம் ஓட்டுநர் உரிமங்கள் தேக்கம்: நிலைமை சீரடைய 2027 ஏப்ரல் வரை தாமதம்!●இஸ்ரேலிய வேலைவாய்ப்பு ஆட்சேர்ப்பு அரசாங்கத்தின் நேரடித் தலையீட்டிற்கு மாத்திரமே கட்டுப்படுத்தப்படும்!●மாடு அறுத்த குற்றத்துக்காக குஜராத்தில் மூவருக்கு ஆயுள் தண்டனை!●
செய்திகள்

ஈரானின் ஏவுகணைத் தாக்குதல்களில் இஸ்ரேலில் உள்ள இரு இலங்கைப் பெண்கள் காயம்!

T

The Leader Desk

ஜூன் 15, 2025 • 3:00 PM

ஈரானின் ஏவுகணைத் தாக்குதல்களில் இஸ்ரேலில் உள்ள இரு இலங்கைப் பெண்கள் காயம்!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • இலங்கையர்களின் பாதுகாப்பை தொடர்ந்து கண்காணித்து வருவதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
  • இன்று (15) காலை இஸ்ரேலின் Batyam மற்றும் Ramat Gan பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட ஏவுகணைத் தாக்குதல்களினால் கட்டிடங்கள் சேதமடைந்ததன் காரணமாக இவ்விருவருக்கும் சிறு காயங்கள் ஏற்பட்டுள்ளதாக தூதுவர் கூறுகிறார்.
  • இதேவேளை, ஈரான் மீதான இஸ்ரேலின் தாக்குதல்களில், சிறுவர்கள் உட்பட 128 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
  • இந்தத் தாக்குதலில் சுமார் 900 பேர் காயமடைந்ததாக ஈரானிய சுகாதார அமைச்சகத்தை மேற்கோள் காட்டி ஈரானிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
எழுத்து அளவு:

இலங்கையர்களின் பாதுகாப்பை தொடர்ந்து கண்காணித்து வருவதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

இலங்கையர் எவருக்கும் பாதுகாப்பில் பிரச்சினை இருந்தால், தூதரக அதிகாரிகளை தொடர்புகொள்ள முடியும் என வெளிவிவகார மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திரா கூறுகிறார்.

இஸ்ரேலில் தங்கியுள்ள இலங்கையர்கள் தொடர்பான தகவல்களைப் பெறுவதில் சிரமம் உள்ள உறவினர்கள், அது குறித்து வெளியுறவு அமைச்சிடம் விசாரிக்கலாம் என்றும் பிரதியமைச்சர் கூறினார்.

இதேவேளை, இஸ்ரேல் மீது ஈரான் நடத்திய தொடர் ஏவுகணைத் தாக்குதலில் இலங்கைப் பெண்கள் இருவர் சிறு காயங்களுக்கு உள்ளாகியுள்ளதாக இஸ்ரேலுக்கான இலங்கைத் தூதுவர் நிமல் பண்டார தெரிவித்துள்ளார்.

இன்று (15) காலை இஸ்ரேலின் Batyam மற்றும் Ramat Gan பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட ஏவுகணைத் தாக்குதல்களினால் கட்டிடங்கள் சேதமடைந்ததன் காரணமாக இவ்விருவருக்கும் சிறு காயங்கள் ஏற்பட்டுள்ளதாக தூதுவர் கூறுகிறார்.

அதன்படி, அவர்கள் தங்கியுள்ள இடங்களுக்கு தூதுதர் நேரில் சென்று நலம் விசாரித்துள்ளார்.

இதேவேளை, ஈரான் மீதான இஸ்ரேலின் தாக்குதல்களில், சிறுவர்கள் உட்பட 128 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இந்தத் தாக்குதலில் சுமார் 900 பேர் காயமடைந்ததாக ஈரானிய சுகாதார அமைச்சகத்தை மேற்கோள் காட்டி ஈரானிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. உயிரிழந்தவர்களில் இரண்டு மாத குழந்தை ஒன்றும் அடங்குவதாக கூறப்படுகிறது.

இதனிடையே, இஸ்ரேல் மீது ஈரான் நடத்திய ஏவுகணைத் தாக்குதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 13 ஆக உயர்ந்துள்ளது. தாக்குதல்களில் காயமடைந்தவர்களின் எண்ணிக்கை சுமார் 380 பேர் என இஸ்ரேல் அரசாங்கம் தெரிவித்துள்ளது.

மத்திய இஸ்ரேலின் பேட் என்ற பகுதியின் மீது நேற்று ஈரான் நடத்திய ஏவுகணை தாக்குதலால், குடியிருப்பு வளாக கட்டிடம் ஒன்று கடுமையாக சேதமடைந்தது. இந்நிலையில், ஈரானின் ஆயுத உற்பத்தி நிலையங்களை அண்மித்த பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களை அந்த இடங்களை விட்டு வெளியேறுமாறு இஸ்ரேல் எச்சரிக்கை விடுத்துள்ளது.

ஈரானியர்கள் தங்கள் உயிரைப் பாதுகாக்க இதுபோன்ற நடவடிக்கைகளை எடுக்குமாறு அறிவுறுத்திய இஸ்ரேலிய பாதுகாப்புப் படை, மறு அறிவிப்பு வரும் வரை அந்த இடங்களுக்குச் செல்வதைத் தவிர்க்குமாறு எச்சரித்துள்ளது.

இஸ்ரேலின் இந்த எச்சரிக்கை, ஈரான் மீது மேலும் தாக்குதல் நடத்துவதற்கான அறிகுறி என்று வெளிநாட்டு விமர்சகர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, ஈரானிய அயதுல்லா அல் கமேனியின் ஆட்சிக்கு சொந்தமான ஒவ்வொரு இடங்களையும் ஒவ்வொரு இலக்குகளையும் தாக்கப்போவதாக நேற்று அறிவித்தார்.

எவ்வாறாயினும், இஸ்ரேலின் தாக்குதல்கள் தொடர்ந்தால் தாக்குதலை தீவிரப்படுத்துவோம் என ஈரான் எச்சரித்துள்ளது.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...