Tamil Leader News
முக்கியம்
நான்கு மாவட்டங்களுக்கான நிலச்சரிவு எச்சரிக்கையை நீடித்தது NBRO!●'அவரைக் கொல்ல முயல்கிறார்கள்': இம்ரான் கானின் உயிருக்கு ஆபத்து என அவரது மகன் அவசர எச்சரிக்கை!●தமிழகத்தில் அடையாள அட்டைக்காகப் போராடும் இலங்கை இளைஞர்!●உலகின் மிகப்பெரிய கிரிப்டோகரன்சி கொள்ளையின் முழுமையான பின்னணி!●17ஆம் திகதி நாட்டை இருளில் மூழ்கடித்த திடீர் மின் தடையின் அறிக்கை வெளியானது!●இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●65 இலட்சம் ஓட்டுநர் உரிமங்கள் தேக்கம்: நிலைமை சீரடைய 2027 ஏப்ரல் வரை தாமதம்!●இஸ்ரேலிய வேலைவாய்ப்பு ஆட்சேர்ப்பு அரசாங்கத்தின் நேரடித் தலையீட்டிற்கு மாத்திரமே கட்டுப்படுத்தப்படும்!●மாடு அறுத்த குற்றத்துக்காக குஜராத்தில் மூவருக்கு ஆயுள் தண்டனை!●
செய்திகள்

பலத்த எதிர்ப்பார்ப்புக்கு மத்தியில் கொழும்பு மாநகர சபையின் மேயர் பதவிக்கான போட்டி நாளை!

T

The Leader Desk

ஜூன் 15, 2025 • 2:34 PM

பலத்த எதிர்ப்பார்ப்புக்கு மத்தியில் கொழும்பு மாநகர சபையின் மேயர் பதவிக்கான போட்டி நாளை!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • தேர்தலில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில், கொழும்பு மாநகர சபையின் ஆரம்பக் கூட்டம் நாளை (16) நடைபெறவுள்ளது.
  • இந்த ஆண்டு நடைபெற்ற உள்ளூராட்சிமன்றத் தேர்தல் முடிவுகளின்படி கொழும்பு மாநகர சபையின் மொத்த உறுப்பினர்களான 117 பேரில், தேசிய மக்கள் சக்தி 48 ஆசனங்களையும் ஐக்கிய மக்கள் சக்தி 29 ஆசனங்களையும் கைப்பற்றியுள்ளது.
  • அத்துடன், ஐக்கிய தேசியக் கட்சி 13 ஆசனங்களையும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன 5 ஆசனங்களையும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் 4 ஆசனங்களையும், சர்வஜன சக்தஜ 2 ஆசனங்களையும் பெற்றதோடு, எஞ்சிய ஆசனங்கள் ஏனைய அரசியல் கட்சிகள் மற்றும் சுயேச்சைக் குழுக்களுக்கிடையில் பகிர்ந்தளிக்கப்பட்டன.
  • வாக்கெடுப்பு முடிவுகளின்படி எந்தக் கட்சியும் 50 சதவீதத்துக்கும் அதிகமான உறுப்பினர்களைப் பெறவில்லை என்பதுடன், கொழும்பு மாநகர சபையின் தலைவர்களைத் தெரிவு செய்வதற்கான வாக்கெடுப்பு நாளை ஆரம்பமாகும் கூட்டத்தில் நடத்தப்பட உள்ளது.
எழுத்து அளவு:

தேர்தலில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில், கொழும்பு மாநகர சபையின் ஆரம்பக் கூட்டம் நாளை (16) நடைபெறவுள்ளது.

இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தலை உள்ளூராட்சி ஆணையாளர் அண்மையில் வெளியிட்டதுடன், அதன் பிரகாரம் கொழும்பு மாநகர மண்டபத்தில் நடைபெறவுள்ள கூட்டத்தில் புதிய மேயர் மற்றும் பிரதி மேயரை தெரிவு செய்வதே முதல் பணியாகும்.

இந்த ஆண்டு நடைபெற்ற உள்ளூராட்சிமன்றத் தேர்தல் முடிவுகளின்படி கொழும்பு மாநகர சபையின் மொத்த உறுப்பினர்களான 117 பேரில், தேசிய மக்கள் சக்தி 48 ஆசனங்களையும் ஐக்கிய மக்கள் சக்தி 29 ஆசனங்களையும் கைப்பற்றியுள்ளது.

அத்துடன், ஐக்கிய தேசியக் கட்சி 13 ஆசனங்களையும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன 5 ஆசனங்களையும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் 4 ஆசனங்களையும், சர்வஜன சக்தஜ 2 ஆசனங்களையும் பெற்றதோடு, எஞ்சிய ஆசனங்கள் ஏனைய அரசியல் கட்சிகள் மற்றும் சுயேச்சைக் குழுக்களுக்கிடையில் பகிர்ந்தளிக்கப்பட்டன.

வாக்கெடுப்பு முடிவுகளின்படி எந்தக் கட்சியும் 50 சதவீதத்துக்கும் அதிகமான உறுப்பினர்களைப் பெறவில்லை என்பதுடன், கொழும்பு மாநகர சபையின் தலைவர்களைத் தெரிவு செய்வதற்கான வாக்கெடுப்பு நாளை ஆரம்பமாகும் கூட்டத்தில் நடத்தப்பட உள்ளது.

கொழும்பு மாநகர சபையில் தேசிய மக்கள் சக்தியைப் போன்றே பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியும் இணைந்து ஆட்சியமைக்கப் போவதாக அறிவித்துள்ளமையால், நாளை நடைபெறும் வாக்கெடுப்பு பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

கொழும்பு மாநகர சபைக்கு தெரிவு செய்யப்பட்ட தேசிய மக்கள் சக்தி உறுப்பினர்கள் அண்மையில் பதவிப் பிரமாணம் செய்துகொண்டதுடன் ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினர்கள் இன்று (15) எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டனர்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...