Tamil Leader News
முக்கியம்
2027க்கான பட்ஜெட்; அட்வகாட்டா நிறுவனத்திடமிருந்து 5 பொருளாதார முன்மொழிவுகள்!●சங்கக்காரவின் விமான நிலையச் சம்பவத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்!●நான்கு மாவட்டங்களுக்கான நிலச்சரிவு எச்சரிக்கையை நீடித்தது NBRO!●'அவரைக் கொல்ல முயல்கிறார்கள்': இம்ரான் கானின் உயிருக்கு ஆபத்து என அவரது மகன் அவசர எச்சரிக்கை!●தமிழகத்தில் அடையாள அட்டைக்காகப் போராடும் இலங்கை இளைஞர்!●உலகின் மிகப்பெரிய கிரிப்டோகரன்சி கொள்ளையின் முழுமையான பின்னணி!●17ஆம் திகதி நாட்டை இருளில் மூழ்கடித்த திடீர் மின் தடையின் அறிக்கை வெளியானது!●இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●65 இலட்சம் ஓட்டுநர் உரிமங்கள் தேக்கம்: நிலைமை சீரடைய 2027 ஏப்ரல் வரை தாமதம்!●
செய்திகள்

‘CIDஇல் தூங்கக்கூட இடமில்லை’: அடிப்படை உரிமை மீறல் மனுவைத் தாக்கல் செய்தார் பிள்ளையான்!

T

The Leader Desk

மே 15, 2025 • 2:44 PM

‘CIDஇல் தூங்கக்கூட இடமில்லை’: அடிப்படை உரிமை மீறல் மனுவைத் தாக்கல் செய்தார் பிள்ளையான்!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • ஏப்ரல் 8ஆம் திகதியன்று, மட்டக்களப்புப் பகுதியில் தனது கட்சியின் அமைப்பு நடவடிக்கைகளில் பங்கேற்றுக் கொண்டிருந்தபோது, ​​குற்றப் புலனாய்வுத் துறையைச் சேர்ந்த அதிகாரிகள் குழு வந்து தன்னைக் கைது செய்ததாக மனுதாரர் கூறுகிறார்.
  • அmத்துடன், வழக்கறிஞர்களை அணுகப் போதுமான வசதிகள் தனக்கு இல்லை என்றும் அவர் தனது மனுவில் குறிப்பிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
எழுத்து அளவு:

பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்க குற்றப் புலனாய்வுத் திணைக்களம் எடுத்துள்ள முடிவால், தனது அடிப்படை மனித உரிமைகள் மீறப்படுவதாக தீர்ப்பு வழங்குமாறு கோரி, பிள்ளையான் என்றழைக்கப்படும் முன்னாள் அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன், உயர் நீதிமன்றத்தில் அடிப்படை உரிமைகள் மனு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளார்.

அந்த மனுவில் பிரதிவாதிகளாக, குற்றப் புலனாய்வுத் துறையின் விசேட புலனாய்வுப் பிரிவு பொறுப்பதிகாரி மாதவ குணவர்தன, குற்றப் புலனாய்வுத் துறை இயக்குநரும் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் இமேஷா முத்துமாலா, பதில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய, பாதுகாப்பு அமைச்சர் அனுர திசாநாயக்க மற்றும் சட்டமா அதிபர் ஆகியோர் பெயரிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ஏப்ரல் 8ஆம் திகதியன்று, மட்டக்களப்புப் பகுதியில் தனது கட்சியின் அமைப்பு நடவடிக்கைகளில் பங்கேற்றுக் கொண்டிருந்தபோது, ​​குற்றப் புலனாய்வுத் துறையைச் சேர்ந்த அதிகாரிகள் குழு வந்து தன்னைக் கைது செய்ததாக மனுதாரர் கூறுகிறார்.

கிழக்குப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் சுப்பிரமணியம் ரவீந்திரநாத் கடத்தப்பட்டு காணாமல் போனது தொடர்பாக தாம் கைது செய்யப்பட்டு தடுப்புக்காவல் உத்தரவின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகத் தான் அறிந்ததாகத் தெரிவித்துள்ள மனுதாரர் குற்றப் புலனாய்வுத் துறையில் தனக்குத் தூங்குவதற்குகூட போதுமான வசதிகள் இல்லை என்றும் கூறியுள்ளார்.

அmத்துடன், வழக்கறிஞர்களை அணுகப் போதுமான வசதிகள் தனக்கு இல்லை என்றும் அவர் தனது மனுவில் குறிப்பிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

எந்தவொரு நியாயமான காரணமும் இல்லாமல் தன்னைக் கைது செய்து தடுத்து வைத்திருப்பதன் மூலம் தனது அடிப்படை மனித உரிமைகள் மீறப்படுவதாக குற்றப் புலனாய்வுத் துறைக்கு தீர்ப்பளிக்க வேண்டும் என்றும் கோரியுள்ள அவர், தன்னைத் தடுத்து வைக்கப் பிறப்பிக்கப்பட்ட தடுப்புக்காவல் உத்தரவை செல்லாததாக்கும் தீர்ப்பையும் கோரியுள்ளார்.

மேலும், தனது வழக்கறிஞர்களை அணுகுவதைத் தடுப்பதன் மூலம் தனது அடிப்படை உரிமைகள் மீறப்பட்டுள்ளதாக தீர்ப்பளிக்கக் கோரியும், தனது அடிப்படை உரிமைகளை மீறியதற்காக நூறு மில்லியன் ரூபாய் இழப்பீடு கோரியும், பிள்ளையான் தனது வழக்கறிஞர்கள் மூலம் இந்த மனுவைத் தாக்கல் செய்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

‘CIDஇல் தூங்கக்கூட இடமில்லை’: அடிப்படை உரிமை மீறல் மனுவைத் தாக்கல் செய்தார் பிள்ளையான்! | Tamil Leader | We Lead the Nation