Tamil Leader News
முக்கியம்
2027க்கான பட்ஜெட்; அட்வகாட்டா நிறுவனத்திடமிருந்து 5 பொருளாதார முன்மொழிவுகள்!●சங்கக்காரவின் விமான நிலையச் சம்பவத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்!●நான்கு மாவட்டங்களுக்கான நிலச்சரிவு எச்சரிக்கையை நீடித்தது NBRO!●'அவரைக் கொல்ல முயல்கிறார்கள்': இம்ரான் கானின் உயிருக்கு ஆபத்து என அவரது மகன் அவசர எச்சரிக்கை!●தமிழகத்தில் அடையாள அட்டைக்காகப் போராடும் இலங்கை இளைஞர்!●உலகின் மிகப்பெரிய கிரிப்டோகரன்சி கொள்ளையின் முழுமையான பின்னணி!●17ஆம் திகதி நாட்டை இருளில் மூழ்கடித்த திடீர் மின் தடையின் அறிக்கை வெளியானது!●இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●65 இலட்சம் ஓட்டுநர் உரிமங்கள் தேக்கம்: நிலைமை சீரடைய 2027 ஏப்ரல் வரை தாமதம்!●
செய்திகள்

ஃபோர்ப்ஸ் சஞ்சிகையில் இடம்பிடித்த இலங்கையின் இளம் திறமையாளர்கள்!

T

The Leader Desk

மே 15, 2025 • 2:20 PM

ஃபோர்ப்ஸ் சஞ்சிகையில் இடம்பிடித்த இலங்கையின் இளம் திறமையாளர்கள்!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • ஃபோர்ப்ஸ் (Forbes) சஞ்சிகை 30 வயதுக்குட்பட்ட ஆசியாவின் திறமையாளர்கள் 30 ​பேரின் பட்டியலை வெளியிட்டுள்ளது.
  • இன்றைய நிலையில் பத்து மில்லியன் யூடியூப் பின்பற்றுனர்கள் மற்றும் 2.3 மில்லியன் இன்ஸ்டாகிராம் பின்பற்றுனர்கள் அவரின் இரசிகர்களாக உள்ளனர்.
  • இரண்டாமவரான யானிகா அமரசேகர சியகுணே என்பவர்.
  • இவர்கள் மூவரும், ஆசியாவின் 30 வயதுக்கு கீழ்ப்பட்ட திறமைசாலிகளாக ஃபோர்ப்ஸ் சஞ்சிகை அங்கீகரித்து கௌரவித்துள்ளது.
எழுத்து அளவு:

ஃபோர்ப்ஸ் (Forbes) சஞ்சிகை 30 வயதுக்குட்பட்ட ஆசியாவின் திறமையாளர்கள் 30 ​பேரின் பட்டியலை வெளியிட்டுள்ளது. அதில் மூன்று இலங்கையர்களின் பெயர்களும் உள்ளடக்கப்பட்டுள்ளன.

முதலாமவராக வைல்ட் குக் புக் (Wild Cookbook) எனும் பெயரில் யூடியூப்பில் சமையல் நிகழ்ச்சிகளை நடத்தி வரும் ஷரித் என் சில்வா இடம்பிடித்துள்ளார்.

கொவிட் தொற்றுக் காலத்தில் திறந்த வெளியில் சமைப்பதை internet sensation ஆக மாற்றியிருந்தார். இன்றைய நிலையில் பத்து மில்லியன் யூடியூப் பின்பற்றுனர்கள் மற்றும் 2.3 மில்லியன் இன்ஸ்டாகிராம் பின்பற்றுனர்கள் அவரின் இரசிகர்களாக உள்ளனர்.

அவர் ஒரு படைப்பாளியாக மாத்திரமன்றி, கொழும்பில் WILDISH எனும் பெயரில் உணவகமொன்றை ஆரம்பித்ததன் மூலம் வர்த்தகராகவும் மாறியுள்ளார்.

இரண்டாமவரான யானிகா அமரசேகர சியகுணே என்பவர். இலங்கையின் முதலாவது ஒன்லைன் திருமண பதிவேடான (online wedding registry) சில்வர் ஐல் (Silver Isle) தளத்தை உருவாக்கியவர் ஆவார்.

திருமணப் பரிசுகள் தொடக்கம் விடுமுறையைக் கழிப்பது வரை வாழ்வின் முக்கிய கட்டங்களை மகிழ்வுடன் கழிப்பதற்கான ஏற்பாடுகளை புதியவழிமுறைகளில் அவர் ஏற்படுத்திக் கொடுக்கின்றார்.

அத்துடன் தற்போதைக்கு எல்.பி பினான்ஸ் நிறுவனத்தின் சுயாதீன பணிப்பாளர்களில் ஒருவராகவும் செயற்படுகின்றார்.

மூன்றாமவராக, சந்தைப்படுத்தல் மற்றும் விளம்பரத் துறையில் பணிபுரியும் நிகின் மாதராராச்சியின் பெயரும் அந்த சஞ்சிகையில் இடம்பெற்றுள்ளது. இவர்கள் மூவரும், ஆசியாவின் 30 வயதுக்கு கீழ்ப்பட்ட திறமைசாலிகளாக ஃபோர்ப்ஸ் சஞ்சிகை அங்கீகரித்து கௌரவித்துள்ளது.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...