Tamil Leader News
முக்கியம்
2027க்கான பட்ஜெட்; அட்வகாட்டா நிறுவனத்திடமிருந்து 5 பொருளாதார முன்மொழிவுகள்!●சங்கக்காரவின் விமான நிலையச் சம்பவத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்!●நான்கு மாவட்டங்களுக்கான நிலச்சரிவு எச்சரிக்கையை நீடித்தது NBRO!●'அவரைக் கொல்ல முயல்கிறார்கள்': இம்ரான் கானின் உயிருக்கு ஆபத்து என அவரது மகன் அவசர எச்சரிக்கை!●தமிழகத்தில் அடையாள அட்டைக்காகப் போராடும் இலங்கை இளைஞர்!●உலகின் மிகப்பெரிய கிரிப்டோகரன்சி கொள்ளையின் முழுமையான பின்னணி!●17ஆம் திகதி நாட்டை இருளில் மூழ்கடித்த திடீர் மின் தடையின் அறிக்கை வெளியானது!●இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●65 இலட்சம் ஓட்டுநர் உரிமங்கள் தேக்கம்: நிலைமை சீரடைய 2027 ஏப்ரல் வரை தாமதம்!●
செய்திகள்

ஜனாதிபதி அலுவலக சொகுசு வாகன ஏலத்தால் ரூ. 200 மில்லியனுக்கும் அதிக வருமானம்!

T

The Leader Desk

மே 15, 2025 • 1:37 PM

ஜனாதிபதி அலுவலக சொகுசு வாகன ஏலத்தால் ரூ. 200 மில்லியனுக்கும் அதிக வருமானம்!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • இரண்டாம் கட்டத்தின் கீழ், 26 சொகுசு வாகனங்கள் மற்றும் பயன்படுத்தப்படாத வாகனங்களை விற்பனை செய்வதற்கான ஏலம் இன்று (15) நடைபெற்றது.
  • முன்னாள் அமைச்சர்களும் முன்னாள் ஜனாதிபதியும், தங்கள் பதவிக் காலத்தில் அரசியலமைப்பின் 41 (01) பிரிவின் கீழ் நியமிக்கப்பட்ட ஆலோசகர்கள் மற்றும் ஊழியர்களுக்கு வழங்கிய 26 வாகனங்களே, இன்று ஏலம் விடப்பட்டன.
  • அவற்றில் 17 வாகனங்கள், இன்றைய தினமே விற்பனை செய்யப்பட்டதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
  • அரசாங்க செலவினங்களைக் குறைத்து, நிதி பொறுப்புணர்வை ஊக்குவிக்கும் நோக்கில் ஜனாதிபதி செயலகத்திற்குச் சொந்தமான வாகனங்களின் விற்பனை மேற்கொள்ளப்படுகிறது.
எழுத்து அளவு:

இரண்டாம் கட்டத்தின் கீழ், 26 சொகுசு வாகனங்கள் மற்றும் பயன்படுத்தப்படாத வாகனங்களை விற்பனை செய்வதற்கான ஏலம் இன்று (15) நடைபெற்றது.

முன்னாள் அமைச்சர்களும் முன்னாள் ஜனாதிபதியும், தங்கள் பதவிக் காலத்தில் அரசியலமைப்பின் 41 (01) பிரிவின் கீழ் நியமிக்கப்பட்ட ஆலோசகர்கள் மற்றும் ஊழியர்களுக்கு வழங்கிய 26 வாகனங்களே, இன்று ஏலம் விடப்பட்டன.

அவற்றில் 17 வாகனங்கள், இன்றைய தினமே விற்பனை செய்யப்பட்டதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

ஒரு BMW கார், 02 Ford Everest வாகனங்கள், ஒரு Hyundai Terracan வாகனம், 02 Land Rover Discovery வாகனங்கள், ஒரு Mitsubishi Montero வாகனம், 03 Nissan பெட்ரோல் வாகனங்கள், 02 Nissan வாகனங்கள், 05 Porsche Cayenne வாகனங்கள், 05 SsangYong Rexton ஜீப்கள், ஒரு Land Cruiser Sahara வாகனம், ஆறு V08 ரக வாகனங்கள் மற்றும் ஒரு Mitsubishi Rosa uக குளிரூட்டப்பட்ட பஸ் போன்றனவே இன்று ஏலத்திற்கு விடப்பட்டன.

அரசாங்க செலவினங்களைக் குறைத்து, நிதி பொறுப்புணர்வை ஊக்குவிக்கும் நோக்கில் ஜனாதிபதி செயலகத்திற்குச் சொந்தமான வாகனங்களின் விற்பனை மேற்கொள்ளப்படுகிறது.

இந்த வாகனங்களை வாங்க சுமார் 108 தொழிலதிபர்கள் முன்வந்துள்ளனர். இதன் விளைவாக வாகனங்களுக்கான தேவை அதிகரித்துள்ளது.

அதன்படி, இன்று நடைபெற்ற ஏல வாகன விற்பனை மூலம் 200 மில்லியன் ரூபாய்க்கு மேல் வருமானம் கிடைத்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...