Tamil Leader News
முக்கியம்
2027க்கான பட்ஜெட்; அட்வகாட்டா நிறுவனத்திடமிருந்து 5 பொருளாதார முன்மொழிவுகள்!●சங்கக்காரவின் விமான நிலையச் சம்பவத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்!●நான்கு மாவட்டங்களுக்கான நிலச்சரிவு எச்சரிக்கையை நீடித்தது NBRO!●'அவரைக் கொல்ல முயல்கிறார்கள்': இம்ரான் கானின் உயிருக்கு ஆபத்து என அவரது மகன் அவசர எச்சரிக்கை!●தமிழகத்தில் அடையாள அட்டைக்காகப் போராடும் இலங்கை இளைஞர்!●உலகின் மிகப்பெரிய கிரிப்டோகரன்சி கொள்ளையின் முழுமையான பின்னணி!●17ஆம் திகதி நாட்டை இருளில் மூழ்கடித்த திடீர் மின் தடையின் அறிக்கை வெளியானது!●இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●65 இலட்சம் ஓட்டுநர் உரிமங்கள் தேக்கம்: நிலைமை சீரடைய 2027 ஏப்ரல் வரை தாமதம்!●
செய்திகள்

120,000 தொன் உப்பு உற்பத்தி செய்த ஆனையிறவில் தற்போது 18,000 தொன் மட்டுமே உற்பத்தி!

T

The Leader Desk

மே 15, 2025 • 2:32 AM

120,000 தொன் உப்பு உற்பத்தி செய்த ஆனையிறவில் தற்போது 18,000 தொன் மட்டுமே உற்பத்தி!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • ,610 சதுர கிலோமீற்றர் பரப்பளவைக்கொண்ட நாட்டில் 23,400 சதுரக் கிலோமீற்றர் கடல் சொந்தமாக உள்ளது.
  • இது 1,700 கிலோமீற்றர் நீளக் கடற்கரையை உள்ளடக்கியுள்ளது.
  • இவ்வாறுள்ள இலங்கையில் இன்று 50 ஏக்கருக்கு மேற்பட்ட விஸ்தீரணம் கொண்ட உப்பளங்கள் முப்பது உள்ள போதிலும் அவற்றில் அரசிற்கு சொந்தமான உப்பளங்கள் ஆக மூன்று மட்டுமே.
  • இதில் ஆனையிறவு அரச உப்பளத்திற்கு 3000 ஆயிரம் ஏக்கர் நில வசதி உள்ளபோதும் மிகச் சொற்ப நிலத்திலேயே உப்பு உற்பத்தி இடம்பெறுகின்றது.
எழுத்து அளவு:

65,610 சதுர கிலோமீற்றர் பரப்பளவைக்கொண்ட நாட்டில் 23,400 சதுரக் கிலோமீற்றர் கடல் சொந்தமாக உள்ளது. இது 1,700 கிலோமீற்றர் நீளக் கடற்கரையை உள்ளடக்கியுள்ளது.

இவ்வாறுள்ள இலங்கையில் இன்று 50 ஏக்கருக்கு மேற்பட்ட விஸ்தீரணம் கொண்ட உப்பளங்கள் முப்பது உள்ள போதிலும் அவற்றில் அரசிற்கு சொந்தமான உப்பளங்கள் ஆக மூன்று மட்டுமே.

இதில் ஆனையிறவு அரச உப்பளத்திற்கு 3000 ஆயிரம் ஏக்கர் நில வசதி உள்ளபோதும் மிகச் சொற்ப நிலத்திலேயே உப்பு உற்பத்தி இடம்பெறுகின்றது.

1990 ஆம் ஆண்டிற்கு முன்பு ஆண்டிற்கு 120,000 மெற்றிக் தொன் உப்பு உற்பத்தி இடம்பெற்ற ஆனையிறவில் இன்று வெறுமனே 18,000 மெற்றிக் தொன் உப்பு மட்டுமே உற்பத்தி செய்யப்படுகின்றது. இதற்கு குறிஞ்சாத்தீவில் உப்பு உற்பத்தி ஆரம்பிக்கப்படாதமையும் முக்கிய காரணம் எனக் கூறப்படுகின்றது.

இவை தொடர்பில் இலங்கை தேசிய உப்பு உற்பத்தி நிறுவனத்தை தொடர்பு கொண்டு கேட்டபோது - இலங்கை நாட்டிற்கு ஆண்டிற்கு ஒரு இலட்சத்து 80 ஆயிரம் மெற்றிக் தொன் உப்பு தேவையாகவுள்ளது.

ஆனால் 2 லட்சம் மெற்றிக் தொன் உற்பத்தியை மேற்கொண்டு வந்தோம். இருப்பினும் தற்போது இரு ஆண்டுகளாக நாடு முழுவதும் ஒரு இலட்சத்து 20 ஆயிரம் மெற்றிக் தொன் உப்பை மட்டுமே உற்பத்தி செய்ய முடிகின்றது.

இதனைப் பங்கீட்டு அடிப்படையில் சில்லறை விலை 175 ரூபா அச்சிட்டு, 139 ரூபாவிற்கு விநியோகம் செய்கின்றோம். ஏற்றி, இறக்கல் விநியோகங்களுடன் அவர்கள் 175 ரூபாவிற்கு விற்பனை செய்கின்றனர்.

நாட்டில் ஏற்பட்ட உற்பத்திக் குறைவிற்கு நிர்வாக குறைபாடுகள் அல்லது தவறு காரணம் கிடையாது. மாறாக தற்போது நிலவும் கால நிலை மாற்றம் மட்டுமே காரணம்.

ஆனையிறவு உப்பளமானது 2016ஆம் ஆண்டு முதல் செயல்படுகின்றது. தற்போது அங்கு அதிகரித்த வலுக்கொண்ட சுத்திகரிப்பு இயந்திரம் பொருத்தப்பட்டுள்ளது. இதனால் அதிக உப்பு உற்பத்தி மேற்கொண்டாலும் உடன் சந்தைக்கு விட முடியும். இருப்பினும் கால நிலை மாற்றத்தால் ஏற்படும் அதிகரித்த மழை காரணமாக எதிர்பார்க்கும் உற்பத்தியை ஈட்டமுடியாத காரணத்தினாலேயே சில தனியார் நினைத்த விலையில் சந்தைப்படுத்துகின்றனர்.

அதிகரித்த விலை ஏற்றத்தைக் கட்டுப்படுத்தி தற்போது காணப்படும் நெருக்கடியை தவிர்ப்பதற்காக 50 ஆயிரம் மெற்றிக்தொன் உப்பு இறக்குமதி செய்யப்படுகின்றது. அது அடுத்த வாரம் சந்தைக்கு வரும் காலத்தில் உள்ளூர் உற்பத்தியும் வரும்போது தட்டுப்பாடோ அல்லது கட்டுப்பாடுகளோ இன்றி 175 ரூபாவிற்கு உப்பை வேண்டிய அளவில் பெற்றுக்கொள்ளலாம்.

இவ்வாறு அரச திணைக்களம் அதிக அளவில் சந்தைப்படுத்தப்படுவதாக கூறினாலும், வெளிச் சந்தையில் தனியாரின் உற்பத்தி பகிரங்கமாக 400 ரூபா அச்சடிக்கப்பட்ட பொதியில் விற்பனை செய்யப்படுகின்றமை மக்கள் மத்தியில் அதிக விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...