உள்ளூராட்சிமன்றத் தேர்தல்கள் (விசேட ஏற்பாடுகள்) சட்டமூலத்தில், அரசியலமைப்பின் 79ஆவது
உறுப்புரைக்கு அமைய, சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்ன இன்று (17) தனது கையொப்பத்தையிட்டு சான்றுரைப்படுத்தினார்.
இந்தச் சட்டமூலம் தொடர்பான இரண்டாவது மதிப்பீட்டு விவாதம் இன்று பி.ப 2.00 மணி முதல் பி.ப 7.00 மணிவரை இடம்பெற்று திருத்தங்கள் இன்றி விசேட பெரும்பான்மையுடன் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.
இந்த சட்டமூலம் 2025 ஜனவரி 9ஆம் திகதி முதலாவது மதிப்பீட்டுக்காக பாராளுமன்றத்திற்கு முன்வைக்கப்பட்டது.
அதற்கமைய இந்த சட்டமூலம் 2025ஆம் ஆண்டில் 1ஆம் இலக்க உள்ளூராட்சி மன்றத் தேர்தல்கள் (விசேட ஏற்பாடுகள்) சட்டமாக அமுலுக்கு வரும்.
இதேவேளை, உள்ளூராட்சிமன்றத் தேர்தல் சிறப்பு ஏற்பாடுகள் சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு சற்று நேரத்திற்கு முன்பு பாராளுமன்றத்தில் சிறப்பு பெரும்பான்மை வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது. இதற்கு ஆதரவாக 187 வாக்குகள் பதிவாகின.
இருப்பினும், எந்த பாராளுமன்ற உறுப்பினரும் சட்டமூலத்திற்கு எதிராக வாக்களிக்கவில்லை, அதேபொல் யாரும் வாக்களிப்பதைத் தவிர்க்கவும் இல்லை.
அதனை தொடர்ந்து உள்ளூராட்சி மன்றத் தேர்தல் (சிறப்பு ஏற்பாடுகள்) சட்டமூலத்தின் மூன்றாவது வாசிப்பு எனப்படும் குழு நிலை விவாதம் ஆரம்பமானது.
இதில் சட்டமூலத்திற்கு ஆதரவாக 158 வாக்குகள் பதிவாகியிருந்த நிலையில் எதிராக வாக்குகள் எதுவும் பதிவாகவில்லை.
அதன்படி, உள்ளூராட்சி மன்றத் தேர்தல் (சிறப்பு ஏற்பாடுகள்) சட்டமூலம் திருத்தம் இல்லாமல் சிறப்பு பெரும்பான்மையால் நிறைவேற்றப்பட்டதாக சபாநாயகர் சபைக்குத் அறிவித்தார்.