சுதந்திர இலங்கையின் 79 ஆவது வரவு செலவுத் திட்டத்தை நிதியமைச்சர் என்ற அடிப்படையில்

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இன்று (17) காலை 10.30 மணிக்கு பாராளுமன்றத்தில் முன்வைக்கவுள்ளார்.

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க பதவியேற்ற பிறகு சமர்ப்பிக்கப்படும் முதலாவது வரவு செலவுத் திட்டம் இதுவாகும்.

அதன்படி, இன்று (17) காலை 10.30 மணிக்கு பாராளுமன்றம் கூடவுள்ளது.

வரவு செலவுத் திட்டம் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் பெப்ரவரி மாதம் 18ஆம் திகதி முதல் 25 ஆம் திகதி வரை 7 நாட்கள் நடைபெறவுள்ளது.

வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாவது வாசிப்பு மீதான வாக்கெடுப்பு பெப்ரவரி 25 ஆம் திகதி மாலை 6:00 மணிக்கு இடம்பெறவுள்ளது.

2025ஆம் ஆண்டுக்கான ஒதுக்கீட்டு சட்டமூலம் மீதான குழுநிலை விவாதம் பெப்ரவரி மாதம் 27ஆம் திகதி முதல் மார்ச் மாதம் 21 ஆம் திகதி வரை 4 சனிக்கிழமைகள் உட்பட 19 நாட்களுக்கு நடைபெறவுள்ளது.

பின்னர் ஒதுக்கீட்டுச் சட்டமூலம் மீதான மூன்றாம் வாசிப்பு வாக்கெடுப்பை மார்ச் மாதம் 21 ஆம் திகதி மாலை 6:00 மணிக்கு நடத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதற்கிடையில், வரவு செலவுத் திட்ட ஆவணத்தைத் தயாரிப்பதற்கான இறுதிக் கட்டத்திற்கான முதற்கட்ட கலந்துரையாடல் கடந்த 13 ஆம் திகதி ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையில் நடைபெற்றது.

இந்தக் கலந்துரையாடலில் அமைச்சர்களும், நிதி அமைச்சின் செயலாளர் மஹிந்த சிறிவர்தனவும் கலந்து கொண்டதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

மேலும், நேற்று (16) 2025ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் இறுதி வரைவை ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க ஜனாதிபதி அலுவலகத்தில் வைத்து பார்வையிட்டார்.

நிதி அமைச்சின் செயலாளர் மஹிந்த சிறிவர்தனவும் இந்த சந்தர்ப்பத்தில் இணைந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி