Tamil Leader News
முக்கியம்
நீதிமன்ற அலைக்களத்தின் வார இறுதி விபரிப்பு: அரசியல் பலவான்களுக்கு எதிரான சட்டம்!●2027க்கான பட்ஜெட்; அட்வகாட்டா நிறுவனத்திடமிருந்து 5 பொருளாதார முன்மொழிவுகள்!●சங்கக்காரவின் விமான நிலையச் சம்பவத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்!●நான்கு மாவட்டங்களுக்கான நிலச்சரிவு எச்சரிக்கையை நீடித்தது NBRO!●'அவரைக் கொல்ல முயல்கிறார்கள்': இம்ரான் கானின் உயிருக்கு ஆபத்து என அவரது மகன் அவசர எச்சரிக்கை!●தமிழகத்தில் அடையாள அட்டைக்காகப் போராடும் இலங்கை இளைஞர்!●உலகின் மிகப்பெரிய கிரிப்டோகரன்சி கொள்ளையின் முழுமையான பின்னணி!●17ஆம் திகதி நாட்டை இருளில் மூழ்கடித்த திடீர் மின் தடையின் அறிக்கை வெளியானது!●இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●
செய்திகள்

'மு.கா எம்.பி பதவி எவருக்கும் இல்லை: தேர்தல் முடிவுகளே உறுப்பினரைத் தெரிந்தெடுக்கும்!'

T

The Leader Desk

மார்ச் 15, 2025 • 10:31 AM

'மு.கா எம்.பி பதவி எவருக்கும் இல்லை: தேர்தல் முடிவுகளே உறுப்பினரைத் தெரிந்தெடுக்கும்!'

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
  • “மேலும், இந்த வெற்றிடமான பாராளுமன்ற உறுப்பினர் பதவியை உள்ளூராட்சி மன்றத் தேர்தல் முடியும் வரை எவருக்கும் வழங்கப்பட மாட்டாது.
  • “இக்கட்சியின் செயலாளர் என்ற வகையில் நான் மிகவும் பெருமிதமும், மகிழச்சியும் அடைந்துள்ளேன்.
எழுத்து அளவு:

தன்னுடைய பதவியை இராஜினாமா செய்தது முஸ்லிம் காங்கிரஸ் அரசியல் சரித்திரத்தில் மாத்திரம் அல்ல, இலங்கை முஸ்லிம் அரசியல் சரித்திரத்திலும் ஒரு தாக்கத்தை உருவாக்கிய நிகழ்வாகும்” என்று, ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் செயலாளர் நாயகமும், பாராளுமன்ற உறுப்பினருமான ஜனாதிபதி சட்டத்தரணி நிசாம் காரியப்பர் தெரிவித்தார்.

ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

அவர் தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில்,

“கட்சிக்கு கொடுக்கப்பட்ட வாக்குறுதிகள் மற்றும் மக்களுக்கு கொடுக்கப்பட்ட வாக்குறுதிகள் நிறைவேற்றியது சம்பந்தமாக, முன்னுதாரணமாக இருந்தது மாத்திரமல்ல ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சரித்திரத்தில் அக்கட்சியின் வேண்டுகோளை ஏற்றுக்கொண்டு தனக்கு வழங்கப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் பதவியை நாலு மாதங்களுக்குள் இராஜினாமா செய்த வரலாற்றில் இது முதல் தடவையாகும்.

“இக்கட்சியின் செயலாளர் என்ற வகையில் நான் மிகவும் பெருமிதமும், மகிழச்சியும் அடைந்துள்ளேன். கட்சி சார்பாக என்னுடைய நன்றிகளை அவருக்கு தெரிவிக்கக் கடமைப்பட்டுள்ளேன்.

“மேலும், இந்த வெற்றிடமான பாராளுமன்ற உறுப்பினர் பதவியை உள்ளூராட்சி மன்றத் தேர்தல் முடியும் வரை எவருக்கும் வழங்கப்பட மாட்டாது. மாறாக இந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் முக்கியமாக அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களில் பாராளுமன்ற உறுப்பினர் பதவி தங்களது பிரதேசத்துக்கு கிடைக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பவர்கள் நடைபெறவுள்ள உள்ளூராட்சிமன்றத் தேர்தலில் தங்களுடைய செல்வாக்கை பயன்படுத்தி தமது சபைகளை கைப்பற்றி ஆட்சியை அமைக்க வேண்டும். அதற்கான சகல எற்பாடுகளையும் செய்து பணியாற்ற வேண்டும் என எதிர்பார்க்கின்றோம்.

“இந்த பாராளுமன்ற உறுப்பினர் பதவி சுழற்சி முறையில் ஒரு வருடத்திற்கென்ற முறையில் பகிர்ந்தளிக்கப்படும். அதனை கட்சி தீர்மானித்துள்ளது. அந்த வகையில் கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள், மாகாண சபை உறுப்பினர்கள் மற்றும் தவிசாளர்கள், உயர்பீட உறுப்பினர்கள் தங்களது சபைகளை வெல்ல வைத்தால் கட்சி உங்களுக்கு பாராளுமன்ற உறுப்பினர் பதவியைத்தந்து உங்களையும், உங்களது பிரதேசத்தையும் கௌரவப்படுத்தும்” எனவும் தெரிவித்தார்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...