புதிய கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட மற்றொரு நோயாளி இறந்துவிட்டார் என்று சுகாதார அமைச்சகம் அறிவித்துள்ளது.

இது நாட்டில் பத்தாவது கொரோனா வைரஸ் மரணம்.

பாதிக்கப்பட்டவர் திருகோணமலையில் உள்ள மங்கி பிரிட்ஜ்  தனிமைப்படுத்தப்பட்டிருக்கும் மையத்தில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த நிலையில்  இறந்துள்ளார்.

குவைத்திலிருந்து நாட்டிற்கு வந்த 52 வயது பெண் இறந்துவிட்டார் என்று சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அனில் ஜாசிங்க தெரிவித்தார்.அதன்படி, நாட்டில் இறப்பு எண்ணிக்கை 10 ஆக உயர்ந்துள்ளது.

அந்த பெண் இதய நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவித்தார்.

பெண்ணின் உயிரியல் மாதிரிகளை பரிசோதித்தபின், அவருக்கு கொவிட் தொற்று இருப்பது கண்டறியப்பட்டது.

மத்திய கிழக்கில் இருந்து திருகோணமலை போன்ற ஒரு தனிமைப்படுத்தப்பட்ட மையத்திற்கு இத்தகைய இதய நோயால் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு சிகிச்சை அளித்ததற்காக அரசாங்கம் சமூக ஊடகங்களால் கடுமையாக விமர்சிக்கப்பட்டுள்ளது.

கொவிட் 19

இந்த சூழ்நிலையில், இலங்கைக்கு வரும் செல்வந்தர்கள் அந்நிய செலாவணியைக் கொண்டுவருவதற்காக அவர்களை ஐந்து நட்சத்திர ஹோட்டல்களில் தனிமைப்படுத்த அனுமதிக்கின்றனர், வெளியுறவு கல்வி அமைச்சர்களின் பிள்ளைககள் மற்றும் கோடீஸ்வரர்களின் பிள்ளைககள்  இராணுவ இல்லங்களிலும் சகல வசதிகளும் செய்து கொடுக்கப்படுகின்றன ஆனால் இந்த நாட்டிற்காக உழைத்த மத்திய கிழக்கிலிருந்து வரும் ஹீரோக்களிடம் இப்படி  நடந்து கொள்வதாக ஊடகங்கள் கவலை வெளியிட்டுள்ளன.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி