Tamil Leader News
முக்கியம்
நான்கு மாவட்டங்களுக்கான நிலச்சரிவு எச்சரிக்கையை நீடித்தது NBRO!●'அவரைக் கொல்ல முயல்கிறார்கள்': இம்ரான் கானின் உயிருக்கு ஆபத்து என அவரது மகன் அவசர எச்சரிக்கை!●தமிழகத்தில் அடையாள அட்டைக்காகப் போராடும் இலங்கை இளைஞர்!●உலகின் மிகப்பெரிய கிரிப்டோகரன்சி கொள்ளையின் முழுமையான பின்னணி!●17ஆம் திகதி நாட்டை இருளில் மூழ்கடித்த திடீர் மின் தடையின் அறிக்கை வெளியானது!●இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●65 இலட்சம் ஓட்டுநர் உரிமங்கள் தேக்கம்: நிலைமை சீரடைய 2027 ஏப்ரல் வரை தாமதம்!●இஸ்ரேலிய வேலைவாய்ப்பு ஆட்சேர்ப்பு அரசாங்கத்தின் நேரடித் தலையீட்டிற்கு மாத்திரமே கட்டுப்படுத்தப்படும்!●மாடு அறுத்த குற்றத்துக்காக குஜராத்தில் மூவருக்கு ஆயுள் தண்டனை!●
செய்திகள்

செம்மணி மனிதப் புதைகுழி விவகாரம்; நீதிமன்றத்தில் இன்று விசாரணை!

T

The Leader Desk

ஆகஸ்ட் 14, 2025 • 4:37 AM

செம்மணி மனிதப் புதைகுழி விவகாரம்; நீதிமன்றத்தில் இன்று விசாரணை!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • செம்மணி - சித்துப்பாத்தி மனிதப் புதைகுழி வளாகத்தில் அண்மையில் முன்னெடுக்கப்பட்ட ஸ்கேன் ஆய்வு தொடர்பான அறிக்கை இன்று நீதிமன்றத்தில் சமர்பிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
  • இரண்டாம் கட்டத்தின் இரண்டாவது அமர்வு அகழ்வுப் பணிகளின் நிறைவில் 140 எலும்புக்கூடுகள் அகழ்ந்தெடுக்கப்பட்டன.
  • சித்துப்பாத்தி மனிதப் புதைகுழி தொடர்பான வழக்கு யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றத்தில் இன்று மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.
எழுத்து அளவு:

செம்மணி - சித்துப்பாத்தி மனிதப் புதைகுழி வளாகத்தில் அண்மையில் முன்னெடுக்கப்பட்ட ஸ்கேன் ஆய்வு தொடர்பான அறிக்கை இன்று நீதிமன்றத்தில் சமர்பிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சித்துப்பாத்தி மனிதப் புதைகுழி தொடர்பான வழக்கு யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றத்தில் இன்று மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.

மனிதபுதைகுழியின் இரண்டாம் கட்ட அகழ்வுப் பணியின், இரண்டாவது அமர்வில் மீட்கப்பட்ட தடயப் பொருட்கள் மற்றும் என்புக்கூட்டுத் தொகுதிகள் தொடர்பான அறிக்கையும் இன்றைய தினம் மன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், மனிதப் புதைகுழியின் அடுத்தகட்ட அகழ்வுப் பணிக்கான திகதியை நீதிமன்றத்திடம் இன்று பெற்றுக் கொள்ளவுள்ளதாகப் பாதிக்கப்பட்டோர் சார்பில் முன்னிலையாகும் சட்டத்தரணி வி.எஸ் நிரஞ்சன் தெரிவித்தார்.

செம்மணி - சித்துப்பாத்தி மனிதப் புதைகுழியில் இரண்டாம் கட்ட அகழ்வுப் பணிகளை 45 நாட்கள் நடத்துவதற்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியிருந்தது.

அதற்கமைய மூன்று அமர்வுகளாக முன்னெடுப்பதற்குத் திட்டமிடப்பட்ட அகழ்வுப் பணிகளில் இரண்டு அமர்வுகள் நிறைவடைந்துள்ளன.

இரண்டாம் கட்டத்தின் இரண்டாவது அமர்வு அகழ்வுப் பணிகளின் நிறைவில் 140 எலும்புக்கூடுகள்  அகழ்ந்தெடுக்கப்பட்டன.

இந்த நிலையிலேயே இன்றைய வழக்கில் அடுத்த கட்ட அகழ்வுப் பணிக்கான திகதியைப் பெற்றுக்கொள்ளவுள்ளதாக சட்டத்தரணி வி.எஸ் நிரஞ்சன் தெரிவித்துள்ளார்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...