Tamil Leader News
முக்கியம்
நான்கு மாவட்டங்களுக்கான நிலச்சரிவு எச்சரிக்கையை நீடித்தது NBRO!●'அவரைக் கொல்ல முயல்கிறார்கள்': இம்ரான் கானின் உயிருக்கு ஆபத்து என அவரது மகன் அவசர எச்சரிக்கை!●தமிழகத்தில் அடையாள அட்டைக்காகப் போராடும் இலங்கை இளைஞர்!●உலகின் மிகப்பெரிய கிரிப்டோகரன்சி கொள்ளையின் முழுமையான பின்னணி!●17ஆம் திகதி நாட்டை இருளில் மூழ்கடித்த திடீர் மின் தடையின் அறிக்கை வெளியானது!●இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●65 இலட்சம் ஓட்டுநர் உரிமங்கள் தேக்கம்: நிலைமை சீரடைய 2027 ஏப்ரல் வரை தாமதம்!●இஸ்ரேலிய வேலைவாய்ப்பு ஆட்சேர்ப்பு அரசாங்கத்தின் நேரடித் தலையீட்டிற்கு மாத்திரமே கட்டுப்படுத்தப்படும்!●மாடு அறுத்த குற்றத்துக்காக குஜராத்தில் மூவருக்கு ஆயுள் தண்டனை!●
செய்திகள்

யாழ்ப்பாணத்துக்கு வருகிறார் ஐ.நா ஆணையாளர்!

T

The Leader Desk

ஜூன் 14, 2025 • 4:06 AM

யாழ்ப்பாணத்துக்கு வருகிறார் ஐ.நா ஆணையாளர்!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • உறுதியான வகையில் அறியமுடிகின்றது.
  • ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளர் வோல்கர் டேர்க், எதிர்வரும் 23ஆம் திகதி இலங்கைக்கு வருகை தரவுள்ளார்.
  • இதன் ஒரு பகுதியாகவே, அவர் யாழ்ப்பாணத்துக்கு எதிர்வரும் 25ஆம் திகதி பயணம் மேற்கொள்ளவுள்ளார் என்று தெரியவருகின்றது.
  • யாழ்ப்பாணத்தில் சிறுபான்மைக் கட்சிகளின் பிரதிநிதிகள், மனித உரிமைச் செயற்பாட்டாளர்கள் எனப் பலதரப்பினரையும் அவர் சந்தித்துக் கலந்துரையாடல் நடத்தவுள்ளார்.
எழுத்து அளவு:

உறுதியான வகையில் அறியமுடிகின்றது.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளர் வோல்கர் டேர்க், எதிர்வரும் 23ஆம் திகதி இலங்கைக்கு வருகை தரவுள்ளார்.

நான்கு நாள்கள் இலங்கையில் தங்கியிருக்கும் அவர் பல்வேறு தரப்பினரையும் சந்தித்துக் கலந்துரையாடல் நடத்தவுள்ளார்.

இதன் ஒரு பகுதியாகவே, அவர் யாழ்ப்பாணத்துக்கு எதிர்வரும் 25ஆம் திகதி பயணம் மேற்கொள்ளவுள்ளார் என்று தெரியவருகின்றது.

யாழ்ப்பாணத்தில் சிறுபான்மைக் கட்சிகளின் பிரதிநிதிகள், மனித உரிமைச் செயற்பாட்டாளர்கள் எனப் பலதரப்பினரையும் அவர் சந்தித்துக் கலந்துரையாடல் நடத்தவுள்ளார்.

அத்துடன், இறுதிப்போரில் இடம்பெற்ற இனப்படுகொலைகள் தொடர்பான பொறுப்புக்கூறல் பொறிமுறைகள் தொடர்பிலும் அவர் ஆராய்வார் என்று தெரியவருகின்றது.

இலங்கை இராணுவத்தின் மீது சுமத்தப்பட்டுள்ள மனித உரிமை மீறல்கள் தொடர்பான குற்றச்சாட்டுத் தொடர்பில் எதிர்வரும் செப்டெம்பர் மாத அமர்வில் சில நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளன.

ஆதலால், ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளர் யாழ்ப்பாணம் வருகின்றமை முக்கியத்துவம் மிக்க விடயமாகப் பார்க்கப்படுகின்றது.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

யாழ்ப்பாணத்துக்கு வருகிறார் ஐ.நா ஆணையாளர்! | Tamil Leader | We Lead the Nation