Tamil Leader News
முக்கியம்
நீதிமன்ற அலைக்களத்தின் வார இறுதி விபரிப்பு: அரசியல் பலவான்களுக்கு எதிரான சட்டம்!●2027க்கான பட்ஜெட்; அட்வகாட்டா நிறுவனத்திடமிருந்து 5 பொருளாதார முன்மொழிவுகள்!●சங்கக்காரவின் விமான நிலையச் சம்பவத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்!●நான்கு மாவட்டங்களுக்கான நிலச்சரிவு எச்சரிக்கையை நீடித்தது NBRO!●'அவரைக் கொல்ல முயல்கிறார்கள்': இம்ரான் கானின் உயிருக்கு ஆபத்து என அவரது மகன் அவசர எச்சரிக்கை!●தமிழகத்தில் அடையாள அட்டைக்காகப் போராடும் இலங்கை இளைஞர்!●உலகின் மிகப்பெரிய கிரிப்டோகரன்சி கொள்ளையின் முழுமையான பின்னணி!●17ஆம் திகதி நாட்டை இருளில் மூழ்கடித்த திடீர் மின் தடையின் அறிக்கை வெளியானது!●இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●
செய்திகள்

எல்ல – வெல்லவாய வீதி முடக்கம்!

T

The Leader Desk

மார்ச் 14, 2025 • 3:06 AM

எல்ல – வெல்லவாய வீதி முடக்கம்!   

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • சீரற்ற வானிலை காரணமாக, எல்ல - வெல்லவாய வீதியின் 12ஆவது கிலோமீற்றர் கம்பத்திற்கு அருகிலுள்ள பகுதியில் வீதி தடைப்பட்டுள்ளதாக பொலிஸார் சாரதிகளுக்கு அறிவித்துள்ளனர்.
  • எல்ல பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட எல்ல - வெல்லவாய பிரதான வீதியில், கரந்தகொல்ல பகுதியில், 12ஆவது கிலோமீற்றர் கம்பத்திற்கு அருகில், நேற்று (13) மண் சரிந்து விழுந்ததால் இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது.
  • குறித்த வீதியில் பயணிக்கும் வாகனங்கள் வெல்லவாய மற்றும் எல்ல நோக்கி செல்லும் போது பின்வரும் மாற்று வழிகளை பயன்படுத்தலாம்.
எழுத்து அளவு:

சீரற்ற வானிலை காரணமாக, எல்ல - வெல்லவாய வீதியின் 12ஆவது கிலோமீற்றர் கம்பத்திற்கு அருகிலுள்ள பகுதியில் வீதி தடைப்பட்டுள்ளதாக பொலிஸார் சாரதிகளுக்கு அறிவித்துள்ளனர்.

எல்ல பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட எல்ல - வெல்லவாய பிரதான வீதியில், கரந்தகொல்ல பகுதியில், 12ஆவது கிலோமீற்றர் கம்பத்திற்கு அருகில், நேற்று (13) மண் சரிந்து விழுந்ததால் இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது.

இதன் காரணமாக போக்குவரத்து தடைபட்டுள்ளதுடன், குறித்த வீதியை சீரமைத்து மீண்டும் வழமைக்கு கொண்டுவரும் வரை மாற்று வழிகளை பயன்படுத்துமாறு பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.

குறித்த வீதியில் பயணிக்கும் வாகனங்கள் வெல்லவாய மற்றும் எல்ல நோக்கி செல்லும் போது பின்வரும் மாற்று வழிகளை பயன்படுத்தலாம்.

மாற்று வழிகள்:

  • எல்லயில் இருந்து வெல்லவாய நோக்கி செல்லும் போது - பண்டாரவளையில் இருந்து அம்பதண்டேகம வழியாக ஊவ கரந்தகொல்ல பகுதி வழியாக வெல்லவாய நோக்கி செல்லலாம்.
  • வெல்லவாயவில் இருந்து எல்ல நோக்கி செல்லும் போது - வெல்லவாய ஊவ கரந்தகொல்ல பகுதியில் இருந்து அம்பதண்டேகம வழியாக எல்ல நோக்கி செல்ல முடியும்.
தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

எல்ல – வெல்லவாய வீதி முடக்கம்! | Tamil Leader | We Lead the Nation