Tamil Leader News
முக்கியம்
நீதிமன்ற அலைக்களத்தின் வார இறுதி விபரிப்பு: அரசியல் பலவான்களுக்கு எதிரான சட்டம்!●2027க்கான பட்ஜெட்; அட்வகாட்டா நிறுவனத்திடமிருந்து 5 பொருளாதார முன்மொழிவுகள்!●சங்கக்காரவின் விமான நிலையச் சம்பவத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்!●நான்கு மாவட்டங்களுக்கான நிலச்சரிவு எச்சரிக்கையை நீடித்தது NBRO!●'அவரைக் கொல்ல முயல்கிறார்கள்': இம்ரான் கானின் உயிருக்கு ஆபத்து என அவரது மகன் அவசர எச்சரிக்கை!●தமிழகத்தில் அடையாள அட்டைக்காகப் போராடும் இலங்கை இளைஞர்!●உலகின் மிகப்பெரிய கிரிப்டோகரன்சி கொள்ளையின் முழுமையான பின்னணி!●17ஆம் திகதி நாட்டை இருளில் மூழ்கடித்த திடீர் மின் தடையின் அறிக்கை வெளியானது!●இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●
செய்திகள்

நாடு எங்கே செல்கிறது?: சிரத்தைக் கொள்க!

T

The Leader Desk

மார்ச் 14, 2025 • 2:20 AM

நாடு எங்கே செல்கிறது?: சிரத்தைக் கொள்க!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • வருகையில், பெண்களுக்கு எதிரான கொடூரமான குற்றங்கள் பற்றிய செய்திகள் சமூக ஊடகங்களில் பரபரப்பு விடயமாக மாறி வருகின்றன.
  • நவம்பரில் நீர் கொழும்பு பொது வைத்தியசாலையில் 23 வயதுடைய - ஆடை தொழிற்சாலையில் பணியாற்றுகின்ற - ஓர் இளம் பெண் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டு, கழுத்து நெரிக்கப்பட்டு ஆறாவது மாடியில் இருந்து தள்ளி விழுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டார்.
  • ஏழு ஆண்டுகள் தாமதத்தின் பின்னர் - 2014இல் - அந்தக் குற்றத்தை இழைத்த மருத்துவ அதிகாரி பாலியல் வல்லுறவு மற்றும் கொலை குற்றங்களில் குற்றவாளியாகக் காணப்பட்டார்.
  • இதற்கிடையில் - கிராம சேவையாளர்கள் தமக்கு தேவையான பாதுகாப்பை வழங்குவதற்கான வேலைத்திட்டம் ஒன்றை தயாரிக்குமாறு கோரிஎநேற்று முதல் மட்டுப்படுத்தப்பட்ட அளவில் தொழிற்சங்க நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளனர் என இலங்கை கிராம உத்தியோகத்தர் சங்கம் தெரிவித்துள்ளது.
எழுத்து அளவு:

வருகையில், பெண்களுக்கு எதிரான கொடூரமான குற்றங்கள் பற்றிய செய்திகள் சமூக ஊடகங்களில் பரபரப்பு விடயமாக மாறி வருகின்றன.

பெண்களைப் போற்றி மதிக்கும் சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்பட்டு இரண்டு நாள்கள் முடிவதற்கு இடையில் அநுராதபுரம் போதனா வைத்தியசாலை பெண் வைத்தியர் ஒருவர் முன்னாள் படைச் சிப்பாய் ஒருவரினால் கத்தி முனையில் பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்டமை பற்றிய செய்தி அதிர்ச்சி தருவதாக வெளியாகி இருக்கின்றது.

பாலியல் குற்றங்களும் துஷ்பிரயோகங்களும் சமூகத்தில் தவிர்க் முடியாத விவகாரமாகத் தொடர்ந்து இடம்பெற்று வந்தாலும் இந்தக் குற்றங்கள் எல்லா மட்டங்களிலும்இடம்பெ ற்று வருகின்றமை மறுக்கப்படக்கூடியது அல்ல.

2007 நவம்பரில் நீர் கொழும்பு பொது வைத்தியசாலையில் 23 வயதுடைய - ஆடை தொழிற்சாலையில் பணியாற்றுகின்ற - ஓர் இளம் பெண் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டு, கழுத்து நெரிக்கப்பட்டு ஆறாவது மாடியில் இருந்து தள்ளி விழுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டார்.

ஏழு ஆண்டுகள் தாமதத்தின் பின்னர் - 2014இல் - அந்தக் குற்றத்தை இழைத்த மருத்துவ அதிகாரி பாலியல் வல்லுறவு மற்றும் கொலை குற்றங்களில் குற்றவாளியாகக் காணப்பட்டார். அவர் ஏழு வருடங்கள் சிறையிலிருந்த பின்னர் தற்போது பிணையில் வெளியில் இருக்கின்றார்.

அநுராதபுரத்தில் தற்போது பெண் மருத்துவ அதிகாரி கொடூரத்துக்கு உள்ளாக்கப்பட்ட செய்தி பரபரப்பாக வெளியானமையை அடுத்து நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் பணியாற்றும் மருத்துவர்களின் பாதுகாப்புத் தொடர்பான நெருக்கடிகள், சிக்கல்கள் பற்றி பல்வேறு செய்திகள் சமூக ஊடகங்களில் வெளியாகி வருகின்றன.

இதற்கிடையில் - கிராம சேவையாளர்கள் தமக்கு தேவையான பாதுகாப்பை வழங்குவதற்கான வேலைத்திட்டம் ஒன்றை தயாரிக்குமாறு கோரிஎநேற்று முதல் மட்டுப்படுத்தப்பட்ட அளவில் தொழிற்சங்க நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளனர் என இலங்கை கிராம உத்தியோகத்தர் சங்கம் தெரிவித்துள்ளது.

தமது சங்கத்தைச் சேர்ந்த உறுப்பினர்களினால் இந்த தொழில்சார் நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாகவும், ஏனைய சங்கங்களின் பிரதிநிதிகளும் இதற்கு ஆதரவளிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுவதாகவும் சங்கத்தின் தேசிய அமைப்பாளர் நெவில் விஜேரத்ன தெரிவித்துள்ளார்.

கிராம உத்தியோகத்தர்களில் அறுபது சதவீதத்திற்கும் அதிகமானவர்கள் பெண்கள் எனவும், பெரும்பாலான கிராம உத்தியோகத்தர்களின் அலுவலகங்கள் தனிமைப்படுத்தப்பட்ட அல்லது மக்கள் நடமாட்டம் இல்லாத பிரதேசங்களில் அமைந்துள்ளன எனவும் அவர் கூறினார்.

தனிமைப்படுத்தப்பட்ட அலுவலகங்களில் பணிபுரியும் பெண் உத்தியோகத்தர்கள் பல்வேறுசந்தர்ப்பங்களில் பிரச்சினைகளை எதிர்கொள்ள வேண்டியுள்ளனர் எனவும் நெவில் விஜேரத்ன குறிப்பிட்டுள்ளார்.

அரச மற்றும் பொது ஊழியர்களின் சேவை நேரப் பாதுகாப்புத் தொடர்பில் விசேட கவனம்செலுத்த வேண்டிய ஒரு தேவை எழுந்திருக்கின்றது. அரசு சிரத்தை எடுத்து நட்வடிக்கை எடுக்க வேண்டிய விவகாரம் இது.

-முரசு ஆசிரியர் தலையங்கம்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

நாடு எங்கே செல்கிறது?: சிரத்தைக் கொள்க! | Tamil Leader | We Lead the Nation