Tamil Leader News
முக்கியம்
2027க்கான பட்ஜெட்; அட்வகாட்டா நிறுவனத்திடமிருந்து 5 பொருளாதார முன்மொழிவுகள்!●சங்கக்காரவின் விமான நிலையச் சம்பவத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்!●நான்கு மாவட்டங்களுக்கான நிலச்சரிவு எச்சரிக்கையை நீடித்தது NBRO!●'அவரைக் கொல்ல முயல்கிறார்கள்': இம்ரான் கானின் உயிருக்கு ஆபத்து என அவரது மகன் அவசர எச்சரிக்கை!●தமிழகத்தில் அடையாள அட்டைக்காகப் போராடும் இலங்கை இளைஞர்!●உலகின் மிகப்பெரிய கிரிப்டோகரன்சி கொள்ளையின் முழுமையான பின்னணி!●17ஆம் திகதி நாட்டை இருளில் மூழ்கடித்த திடீர் மின் தடையின் அறிக்கை வெளியானது!●இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●65 இலட்சம் ஓட்டுநர் உரிமங்கள் தேக்கம்: நிலைமை சீரடைய 2027 ஏப்ரல் வரை தாமதம்!●
செய்திகள்

கேஸ் லீக் என்றால் 1311 ஹொட்லைனுக்கு தெரிவிக்கவும்!

T

The Leader Desk

டிசம்பர் 1, 2021 • 5:53 PM

கேஸ் லீக் என்றால் 1311 ஹொட்லைனுக்கு தெரிவிக்கவும்!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • நாடு முழுவதும் தொடரும் எரிவாயு விபத்துக்களை மையப்படுத்தி, நுகர்வோரின் வசதிக்காக இந்த ஹொட்லைன் இலக்கம் அறிவிக்கப்பட்டிருப்பதாக லிட்ரோ கேஸ் நிறுவனத்தின் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
  • நேற்று (30) 10 க்கும் மேற்பட்ட எரிவாயு கசிவுகள் மற்றும் விபத்துக்கள் நாட்டின் பல்வேறு பகுதிகளில் பதிவாகியுள்ளன.
  • இந்தக் குழு நேற்று (30) நியமிக்கப்பட்டதாக ஜனாதிபதி செயலகம் தெரிவித்துள்ளது.
எழுத்து அளவு:

நாடு முழுவதும் தொடரும் எரிவாயு விபத்துக்களை மையப்படுத்தி, நுகர்வோரின் வசதிக்காக இந்த ஹொட்லைன் இலக்கம் அறிவிக்கப்பட்டிருப்பதாக லிட்ரோ கேஸ் நிறுவனத்தின் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

நேற்று (30) 10 க்கும் மேற்பட்ட எரிவாயு கசிவுகள் மற்றும் விபத்துக்கள் நாட்டின் பல்வேறு பகுதிகளில் பதிவாகியுள்ளன.

 எரிவாயு குறித்து ஆய்வு செய்ய ஜனாதிபதி குழுவை நியமித்தார்

நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள உள்நாட்டு, வர்த்தக மற்றும் விற்பனை நிலையங்களில் அண்மையில் ஏற்பட்ட எரிவாயு சிலிண்டர் தீ மற்றும் வெடிப்புக்கான காரணங்களை ஆராய்ந்து உடனடி தீர்வுகளை வழங்குவதற்காக மொரட்டுவ பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் சாந்த வல்பொல தலைமையில் 8 பேரை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நியமித்துள்ளார். இந்தக் குழு நேற்று (30) நியமிக்கப்பட்டதாக ஜனாதிபதி செயலகம் தெரிவித்துள்ளது.

குழுவின் ஏனைய உறுப்பினர்களான மொரட்டுவ பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் அஜித் டி சில்வா, ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் டபிள்யூ.டி. ஜயதிலக்க, இலங்கை கண்டுபிடிப்பாளர்கள் ஆணைக்குழுவின் ஆணையாளர் பேராசிரியர் பிரதீப் ஜயவீர, பேராசிரியர் நாராயண் சிறிமுத்து, மேலதிக பணிப்பாளர் கைத்தொழில் தொழிநுட்ப நிறுவகத்தின் இணைப் பணிப்பாளர் சோமிரில், நியமங்கள் நிறுவனத்தின் சிரேஷ்ட பிரதிப் பணிப்பாளர் சுஜீவ மஹகம மற்றும் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

அனைத்து தரப்பினரின் கருத்துக்கள், தற்போதைய ஆய்வுகள் மற்றும் பல்வேறு கருத்துக்களை ஆராய்ந்து இரண்டு வாரங்களுக்குள் அறிக்கை ஒன்றை தமக்கு சமர்ப்பிக்குமாறு ஜனாதிபதி குழுவிற்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...