Tamil Leader News
முக்கியம்
நான்கு மாவட்டங்களுக்கான நிலச்சரிவு எச்சரிக்கையை நீடித்தது NBRO!●'அவரைக் கொல்ல முயல்கிறார்கள்': இம்ரான் கானின் உயிருக்கு ஆபத்து என அவரது மகன் அவசர எச்சரிக்கை!●தமிழகத்தில் அடையாள அட்டைக்காகப் போராடும் இலங்கை இளைஞர்!●உலகின் மிகப்பெரிய கிரிப்டோகரன்சி கொள்ளையின் முழுமையான பின்னணி!●17ஆம் திகதி நாட்டை இருளில் மூழ்கடித்த திடீர் மின் தடையின் அறிக்கை வெளியானது!●இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●65 இலட்சம் ஓட்டுநர் உரிமங்கள் தேக்கம்: நிலைமை சீரடைய 2027 ஏப்ரல் வரை தாமதம்!●இஸ்ரேலிய வேலைவாய்ப்பு ஆட்சேர்ப்பு அரசாங்கத்தின் நேரடித் தலையீட்டிற்கு மாத்திரமே கட்டுப்படுத்தப்படும்!●மாடு அறுத்த குற்றத்துக்காக குஜராத்தில் மூவருக்கு ஆயுள் தண்டனை!●
செய்திகள்

‘நிலைமை இன்னும் மோசமாகும்’: ஈரானை எச்சரித்த ட்ரம்ப்!

T

The Leader Desk

ஜூன் 13, 2025 • 2:52 PM

‘நிலைமை இன்னும் மோசமாகும்’: ஈரானை எச்சரித்த ட்ரம்ப்!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • கொடுக்கவே பதற்றம் அதிகரித்துள்ளது.
  • எச்சரிக்கும் வகையில் கூட பேசி பார்த்தேன்.
  • இஸ்ரேல் மீது 100+ டிரோன்களை ஈரான் ஏவியுள்ளது.
எழுத்து அளவு:

கொடுக்கவே பதற்றம் அதிகரித்துள்ளது. இதற்கிடையே வரும் நாட்களில் நிலைமை மேலும் மோசமாகும் என்பதால் எச்சரிக்கையாக இருக்கும்படி ஈரானுக்கு அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் நேரடியாகவே எச்சரித்துள்ளார்.

அணு ஆயுதங்கள் குறித்து ஈரானிடம் அமெரிக்கா தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வந்தது. இருப்பினும், அந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு எதுவும் எட்டப்படாமலேயே இருந்தது. இந்தச் சூழலில் ஈரான் மீது திடீரென இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. அதில் ஈரான் தளபதி, அணு விஞ்ஞானிகள் உட்பட பலரும் கொல்லப்பட்டனர்.

மத்திய கிழக்கில் பதற்றம்

இந்தத் தாக்குதலைத் தொடர்ந்து மத்திய கிழக்கில் மீண்டும் பதற்றம் அதிகரித்துள்ளது. இதற்கிடையே இந்த விவகாரத்தில் நேரடியாக ஈரானை எச்சரிக்கும் வகையில் ஜனாதிபதி ட்ரம்ப் சில முக்கிய தகவல்களைத் தெரிவித்துள்ளார்.

ஈரான் மீதான இஸ்ரேல் தாக்குதல் குறித்து முன்பே தனக்குத் தெரியும் என்றும் இந்தத் தாக்குதல்களைத் தொடர்ந்து இப்போது ஈரான் பேச்சுவார்த்தைக்குத் திரும்பும் என நம்புவதாக டொனால்ட் ட்ரம்ப் கூறியுள்ளார். உலகின் மிகவும் ஆபத்தான ஆயுதங்கள் அமெரிக்காவிடம் உள்ளன என்று குறிப்பிட்ட ட்ரம்ப், அவற்றில் பல இஸ்ரேலிடம் உள்ளன என்றும் அவற்றை ஈரான் மீது பயன்படுத்தக்கூடும் என்றும் ட்ரம்ப் எச்சரித்துள்ளார்.

பின்னணி

ஈரான் அணு ஆயுதங்களை உருவாக்குவதில் தீவிரம் காட்டி வருகிறது. இதற்காக யுரேனியத்தை செறிவூட்டும் பணிகளை ஈரான் தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. ஆனால், ஈரான் வசம் அணு அயுதம் இருந்தால் ஆபத்து எனக் கருதும் அமெரிக்கா அதைத் தடுக்க முயன்று வருகிறது. இது தொடர்பாக டிரம்ப் நிர்வாகம் ஈரான் அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்திய போதிலும் அதில் பெரியளவில் உடன்பாடு ஏற்படவில்லை. இந்தச் சூழலில் தான் இஸ்ரேல் திடீர் தாக்குதலை நடத்தியது. இதில் ஈரான் படையின் தளபதி ஹொசைன் சலாமி உட்பட பலர் கொல்லப்பட்டனர்.

ட்ரம்ப் எச்சரிக்கை

அதைத் தொடர்ந்தே ஈரான் நாட்டிற்கு ட்ரம்ப் கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து பேசியுள்ள ட்ரம்ப், "ஈரான் இந்த விவகாரத்தில் ஒரு டீல் போட நான் பல வாய்ப்புகளைக் கொடுத்தேன். எச்சரிக்கும் வகையில் கூட பேசி பார்த்தேன். ஆனால் எவ்வளவு முயற்சி செய்தும், அவர்கள் ஒத்து வரவில்லை. நான் ஒன்றை மட்டும் சொல்லிக்கொள்ள விரும்புகிறேன். அமெரிக்காவிடம் இதுவரை பலரும் கேள்விகூட படாத பல இராணுவத் தளவாடங்கள் உள்ளன. அதில் பல ஆயுதங்கள் இஸ்ரேலிடமும் உள்ளன. அதை எங்கே எப்போது பயன்படுத்தலாம் என்பதும் அவர்களுக்கு நன்றாகவே தெரியும்” என எச்சரித்திருந்தார்.

நிலைமை மோசமாகும்!

"சில ஈரான் தலைவர்கள் தேவையில்லாமல் பதற்றத்தை ஏற்படுத்தும் வகையில் பேசினார்கள். ஆனால் அவர்களுக்கு என்ன நடக்கும் என்று தெரியாது. அவர்கள் எல்லாரும் இப்போது இறந்துவிட்டார்கள். இந்த தாக்குதல்கள் வரும் காலங்களில் மேலும் மோசமாகத்தான் இருக்கும்" என்றும் ஜனாதிபதி ட்ரம்ப் மேலும் தெரிவித்தார். இஸ்ரேல் - ஈரான் இடையே மோதல் வெடித்துள்ள நிலையில், ட்ரம்பின் இந்த எச்சரிக்கை முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.

டிரம்ப் சொல்வது என்ன!

முன்னதாக ஃபொக்ஸ் நியூஸ் உடனான ஒரு நேர்காணலிலும் ட்ரம்ப் கிட்டதட்ட அதே கருத்துகளைக் கூறியிருந்தார். இது தொடர்பாக அவர் கூறுகையில், "இஸ்ரேல் ஈரான் மீது தாக்குதல் நடத்தியது குறித்து எனக்கு முன்பே தெரியும். இனிமேல் ஈரான் பேச்சுவார்த்தைக்குத் திரும்பும் என்று நம்புகிறேன்.. ஈரான் அணு ஆயுதங்களை வைத்திருக்கக் கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறோம். அவர்கள் டீல் போடுவார்கள். பொறுத்திருந்து பார்ப்போம்" என்றார்.

இதற்கிடையில், இஸ்ரேல் தாக்குதலுக்குப் பதிலடியை ஈரான் ஆரம்பித்துள்ளது. இஸ்ரேல் மீது 100+ டிரோன்களை ஈரான் ஏவியுள்ளது. இதனால் மத்திய கிழக்கில் பதற்றம் தொடர்ந்து அதிகரித்தே வருகிறது.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

‘நிலைமை இன்னும் மோசமாகும்’: ஈரானை எச்சரித்த ட்ரம்ப்! | Tamil Leader | We Lead the Nation