Tamil Leader News
முக்கியம்
நான்கு மாவட்டங்களுக்கான நிலச்சரிவு எச்சரிக்கையை நீடித்தது NBRO!●'அவரைக் கொல்ல முயல்கிறார்கள்': இம்ரான் கானின் உயிருக்கு ஆபத்து என அவரது மகன் அவசர எச்சரிக்கை!●தமிழகத்தில் அடையாள அட்டைக்காகப் போராடும் இலங்கை இளைஞர்!●உலகின் மிகப்பெரிய கிரிப்டோகரன்சி கொள்ளையின் முழுமையான பின்னணி!●17ஆம் திகதி நாட்டை இருளில் மூழ்கடித்த திடீர் மின் தடையின் அறிக்கை வெளியானது!●இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●65 இலட்சம் ஓட்டுநர் உரிமங்கள் தேக்கம்: நிலைமை சீரடைய 2027 ஏப்ரல் வரை தாமதம்!●இஸ்ரேலிய வேலைவாய்ப்பு ஆட்சேர்ப்பு அரசாங்கத்தின் நேரடித் தலையீட்டிற்கு மாத்திரமே கட்டுப்படுத்தப்படும்!●மாடு அறுத்த குற்றத்துக்காக குஜராத்தில் மூவருக்கு ஆயுள் தண்டனை!●
செய்திகள்

நீதி மற்றும் பழிவாங்கலுக்கான அழைப்பை விடுத்த ஈரான்!

T

The Leader Desk

ஜூன் 13, 2025 • 1:15 PM

நீதி மற்றும் பழிவாங்கலுக்கான அழைப்பை விடுத்த ஈரான்!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • கொல்லப்பட்டுள்ளதாக ஈரானிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
  • மேலும், தூதரக அதிகாரிகளை 24 மணி நேரமும் தொலைபேசி மூலம் தொடர்புகொள்ளலாம் என்றும் குறிப்பிட்டுள்ளது.
  • இந்த மிகப்பெரிய தாக்குதலுக்கு ஈரான் நிச்சயமாக பதிலடி கொடுக்கும் என்பதால், இஸ்ரேல் தனது நாட்டில் அவசரகால நிலையை அறிவித்து அனைத்து பாடசாலைகளையும் மூட நடவடிக்கை எடுத்துள்ளது.
  • ஈரான் ஏற்கனவே சுமார் 200 போர் விமானங்களை இஸ்ரேலுக்கு அனுப்பியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
எழுத்து அளவு:

கொல்லப்பட்டுள்ளதாக ஈரானிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இஸ்ரேலுக்கு தக்க பதிலடி கொடுக்கப்படும் என்று ஈரான் (Iran) உச்ச தலைவர் அயத்துல்லா அலி கமேனி கடுந்தொனியில் எச்சரிக்கை விடுத்ததுடன் ஈரான் பதில் தாக்குதல் நடத்தி உள்ளது.

இஸ்ரேலின் தாக்குதலில் கொல்லப்பட்ட ஈரானின் (Iran) இராணுவப்படைகளின் தளபதிகளுக்கு பதிலாக, புதிய தளபதிகளை நியமித்து அந்நாட்டு உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி உத்தரவிட்டுள்ளார்.

இந்நிலையில் போர் பதற்றம் மேலும் அதிகரிக்கும் வகையில், கோமில் உள்ள ஜம்கரன் மசூதியில் ஈரான் சிவப்புக் கொடியை ஏற்றியுள்ளது.

இச்சிவப்புக் கொடியானது ஷியா பாரம்பரியத்தில் நீதி மற்றும் பழிவாங்கலுக்கான அழைப்பைக் குறிக்கிறது.

இதேவேளை, மத்திய கிழக்கு பிராந்தியத்தில் பாரிய அளவிலான இராணுவ மோதலுக்கான அபாயத்தை ஏற்படுத்தும் வகையில், இன்று (13) அதிகாலையில் ஈரான் மீது இஸ்ரேல் நடத்திய தொடர் தாக்குதல்களைத் தொடர்ந்து ஏற்பட்டுள்ள பதற்றமான சூழ்நிலை குறித்து இஸ்ரேலுக்கான இலங்கை தூதரகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

அமைதியின்மை காரணமாக, விமானப் பயணம் தடை செய்யப்பட்டுள்ளதாகவும், இஸ்ரேலுக்கு வரும் மற்றும் புறப்படும் இலங்கையர்கள் மறு அறிவிப்பு வரும் வரை தங்கள் விமானப் பயணங்களை தாமதப்படுத்துமாறு அறிவுறுத்தப்படுவதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இஸ்ரேலில் உள்ள இலங்கையர்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கவும், விரோதப் தரப்பினரிடமிருந்து ஏவப்படக்கூடிய ஏவுகணைகளிலிருந்து தங்களைப் பாதுகாத்துக்கொள்ள பாதுகாப்பான வீடுகளுக்கு அருகில் இருக்கவும் தூதரகம் அறிவுறுத்துகிறது.

இஸ்ரேலும் அனைவரையும் பாதுகாப்பான பகுதிகளுக்குச் செல்லுமாறு அறிவுறுத்தியுள்ளதுடன், போக்குவரத்தையும் நிறுத்தியுள்ளது.

இலங்கையர்கள் எப்போதும் குடிநீரையும் உலர் உணவையும் தங்களிடம் வைத்திருக்குமாறு இலங்கைத் தூதரகம் அறிவுறுத்துகிறது. மேலும், தூதரக அதிகாரிகளை 24 மணி நேரமும் தொலைபேசி மூலம் தொடர்புகொள்ளலாம் என்றும் குறிப்பிட்டுள்ளது.

இது தொடர்பில் கருத்து தெரிவித்த இலங்கை வெளியுறவு அமைச்சு, இஸ்ரேல் மற்றும் ஈரானில் உள்ள இலங்கை தூதரகங்களுடன் தொடர்பில் இருப்பதாகவும், சமீபத்திய நிலைமை குறித்த தகவல்களை சேகரித்து வருவதாகவும் சுட்டிக்காட்டுகிறது.

ஈரான் மீதான தொடர்ச்சியான பாரிய வான்வழித் தாக்குதல்களில் ஈரானிய புரட்சிகர காவல்படையின் தலைவர் ஹொசைன் சலாமியும் கொல்லப்பட்டுள்ளார்.

"ஆபரேஷன் ரைசிங் லயன்" என்று பெயரிடப்பட்ட இந்த நடவடிக்கை, ஈரானின் அணுசக்தி நிலையங்கள், ஏவுகணை தொழிற்சாலைகள் மற்றும் இராணுவ தலைமையகங்களை குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்த மிகப்பெரிய தாக்குதலுக்கு ஈரான் நிச்சயமாக பதிலடி கொடுக்கும் என்பதால், இஸ்ரேல் தனது நாட்டில் அவசரகால நிலையை அறிவித்து அனைத்து பாடசாலைகளையும் மூட நடவடிக்கை எடுத்துள்ளது.

ஈரானின் அணுசக்தித் திட்டத்துடன் தொடர்புடைய மையங்கள் மற்றும் இராணுவ இலக்குகளை குறிவைத்து நடத்தப்பட்ட இந்தத் தாக்குதல்கள், இஸ்ரேலிய IAF ஜெட் விமானங்களைப் பயன்படுத்தி நடத்தப்பட்டன.

ஈரானின் முக்கிய இராணுவப் பிரிவாகக் கருதப்படும் இஸ்லாமிய புரட்சிகர காவல்படையின் தலைமையகமும் இஸ்ரேலிய தாக்குதல்களுக்கு இலக்காகியது.

இஸ்ரேலிய தாக்குதலில் ஈரானிய இராணுவத் தளபதி மேஜர் ஜெனரல் மொஹமட் பகேரி கொல்லப்பட்டதாக ஈரானிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அவர் நாட்டின் மிக உயர்ந்த பதவியில் இருக்கும் இராணுவ அதிகாரியாகவும் கருதப்படுகிறார்.

இந்த தாக்குதல்களில் ஈரானிய அணுசக்தி திட்டத்தில் ஈடுபட்ட பல விஞ்ஞானிகளும் குறிவைக்கப்பட்டனர்.

எனினும், நட்சான் அணு ஆய்வகத்திற்கு இஸ்ரேல் நடத்திய தாக்குதல்கள் குறித்து உறுதிப்படுத்தப்பட்டாலும், அங்கு கதிரியக்க அளவு அதிகரிக்கவில்லை என்று சர்வதேச அணுசக்தி முகமை (IAEA) தெரிவித்துள்ளது.

ஈரான் ஏற்கனவே சுமார் 200 போர் விமானங்களை இஸ்ரேலுக்கு அனுப்பியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இந்த தாக்குதல் இஸ்ரேலின் கொடூரமான தன்மையை விளக்குகிறது என்றும், இஸ்ரேல் தனது நாட்டிற்கு ஒரு கசப்பான விதியைத் திட்டமிடுகிறது என்றும் ஈரானின் ஆன்மீகத் தலைவர் ஆயத்துல்லா அல்-கமெய்னி ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார்.

இதற்கிடையில், தாக்குதல் குறித்து கருத்து தெரிவித்த இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, இது தாக்குதலின் ஆரம்பம் என்றும், தேவையான அளவுக்கு ஈரானை தாக்குவதே அவரது திட்டம் என்றும் வலியுறுத்தினார்.

ஈரான் அணு ஆயுதம் வாங்குவதைத் தடுக்கவும், அதன் மூலம் அதன் மக்களைப் பாதுகாக்கவும் இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக இஸ்ரேலிய பிரதமர் மேலும் கூறினார்.

இந்தத் தாக்குதலுக்கு அமெரிக்கா எந்த வகையிலும் உதவவில்லை அல்லது தூண்டவில்லை என்று கூறியுள்ளது.

இருப்பினும், அமெரிக்கா சமீபத்தில் மத்திய கிழக்கு பிராந்தியத்திலிருந்து அனைத்து அத்தியாவசியமற்ற அமெரிக்கர்களையும் வெளியேற்ற உத்தரவிட்டது.

மத்திய கிழக்கு பிராந்தியத்தை சீர்குலைக்கும் வகையில், ஈரானிய அணுசக்தி தளங்கள் மீதான இஸ்ரேலின் தாக்குதலை ஐக்கிய நாடுகள் சபை கண்டித்துள்ளது.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

நீதி மற்றும் பழிவாங்கலுக்கான அழைப்பை விடுத்த ஈரான்! | Tamil Leader | We Lead the Nation