Tamil Leader News
முக்கியம்
2027க்கான பட்ஜெட்; அட்வகாட்டா நிறுவனத்திடமிருந்து 5 பொருளாதார முன்மொழிவுகள்!●சங்கக்காரவின் விமான நிலையச் சம்பவத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்!●நான்கு மாவட்டங்களுக்கான நிலச்சரிவு எச்சரிக்கையை நீடித்தது NBRO!●'அவரைக் கொல்ல முயல்கிறார்கள்': இம்ரான் கானின் உயிருக்கு ஆபத்து என அவரது மகன் அவசர எச்சரிக்கை!●தமிழகத்தில் அடையாள அட்டைக்காகப் போராடும் இலங்கை இளைஞர்!●உலகின் மிகப்பெரிய கிரிப்டோகரன்சி கொள்ளையின் முழுமையான பின்னணி!●17ஆம் திகதி நாட்டை இருளில் மூழ்கடித்த திடீர் மின் தடையின் அறிக்கை வெளியானது!●இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●65 இலட்சம் ஓட்டுநர் உரிமங்கள் தேக்கம்: நிலைமை சீரடைய 2027 ஏப்ரல் வரை தாமதம்!●
செய்திகள்

பாடசாலை மாணவிகளுக்கு தலசீமியா பரிசோதனை!

T

The Leader Desk

மே 13, 2025 • 5:02 AM

பாடசாலை மாணவிகளுக்கு தலசீமியா பரிசோதனை!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • பாதிக்கப்பட்டுள்ளார்களா என்பதை ஆராய, நாடு முழுவதும் உள்ள பாடசாலைகளில் ஒரு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
  • அத்தகைய சிறுமிகள் மீது கவனம் செலுத்தப்பட்டு, தேவையான சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.
  • இந்த நாட்டில் சுமார் 2,500 குழந்தைகள் தலசீமியா என்ற பயங்கர நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
எழுத்து அளவு:

பாதிக்கப்பட்டுள்ளார்களா என்பதை ஆராய, நாடு முழுவதும் உள்ள பாடசாலைகளில் ஒரு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்த குழந்தைகளுக்கான பரிசோதனையின் போது மூன்று அட்டைகள் வழங்கப்படும் என்று சுகாதார அமைச்சின் தொற்றா நோய்கள் பிரிவின் பணிப்பாளர் சிறப்பு மருத்துவர் சமிந்தி சமரக்கோன் தெரிவித்தார்.

அதன்படி, சம்பந்தப்பட்ட சிறுமிகளுக்கு கிரீன் கார்ட் வழங்கப்பட்டிருந்தால், அச்சிறுமி நோய்க்கு இலக்காகவில்லை என்பது உறுதிப்படுத்தப்படுகிறது.

சுகாதார அதிகாரிகளால் மஞ்சள் அட்டை வழங்கப்பட்டிருந்தால், அது சிறுமிக்கு தொற்று நோய் இருக்கலாம் என்பதற்கான எச்சரிக்கையாகும்.

இளஞ்சிவப்பு அட்டை வழங்கப்பட்டிருந்தால், சிறுமிக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என்று அர்த்தப்படும் என்று, சிறப்பு மருத்துவர் சமிந்தி சமரக்கோன் தெரிவித்தார்.

அத்தகைய சிறுமிகள் மீது கவனம் செலுத்தப்பட்டு, தேவையான சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.

இதற்காக வைத்தியசாலைக் கட்டமைப்பு அதிக பணத்தைச் செலவிடுகிறது, முக்கியமாக, இரத்தமாற்றம் மற்றும் இரத்தத்திலிருந்து இரும்புச்சத்தை அகற்றுதல் போன்றன முன்னெடுக்கப்படுவதாக, விசேட மருத்துவர் சமிந்தி சமரக்கோன் கூறினார்.

இந்த நாட்டில் சுமார் 2,500 குழந்தைகள் தலசீமியா என்ற பயங்கர நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் சுமார் ஐந்து இலட்சம் பேர் இந்த நோயின் தாக்கத்துக்கு இலக்காகியுள்ளனர் என்று அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இந்த நாட்டில் ஒவ்வொரு ஆண்டும், நாற்பது முதல் ஐம்பது வரை தலசீமியா நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் பிறப்பதாக சுகாதார அமைச்சு கூறுகிறது.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...