Tamil Leader News
முக்கியம்
2027க்கான பட்ஜெட்; அட்வகாட்டா நிறுவனத்திடமிருந்து 5 பொருளாதார முன்மொழிவுகள்!●சங்கக்காரவின் விமான நிலையச் சம்பவத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்!●நான்கு மாவட்டங்களுக்கான நிலச்சரிவு எச்சரிக்கையை நீடித்தது NBRO!●'அவரைக் கொல்ல முயல்கிறார்கள்': இம்ரான் கானின் உயிருக்கு ஆபத்து என அவரது மகன் அவசர எச்சரிக்கை!●தமிழகத்தில் அடையாள அட்டைக்காகப் போராடும் இலங்கை இளைஞர்!●உலகின் மிகப்பெரிய கிரிப்டோகரன்சி கொள்ளையின் முழுமையான பின்னணி!●17ஆம் திகதி நாட்டை இருளில் மூழ்கடித்த திடீர் மின் தடையின் அறிக்கை வெளியானது!●இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●65 இலட்சம் ஓட்டுநர் உரிமங்கள் தேக்கம்: நிலைமை சீரடைய 2027 ஏப்ரல் வரை தாமதம்!●
செய்திகள்

கனடாவில் 'முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபி': அறிக்கை கோரியது இலங்கை!

T

The Leader Desk

மே 13, 2025 • 3:58 AM

கனடாவில் 'முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபி': அறிக்கை கோரியது இலங்கை!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • இவ்வாறு கூறுபவர்கள் கனடாவில் எவரும் இருந்தால், நீங்கள் கொழும்பிற்கு திரும்பிச் செல்லுங்கள்" என்று கூறி, கனடாவின் பிரம்டன் நகரபிதா பெற்றிக் பிரவுண்னினால் 'முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபி' திறந்துவைக்கப்பட்டமை, சமூக ஊடகங்களில் பேசுபொருளாகியுள்ளது.
  • கனடாவில் வசிக்கும் இலங்கை வம்சாவளியைச் சேர்ந்த தமிழர்கள் சிலரால் பிராம்ப்டன் நகரில் கட்டப்பட்ட நினைவுச்சின்னம் ஒன்று தொடர்பாக, தற்போது சமூக ஊடகங்களில் பல வீடியோக்கள் பரவி வருகின்றன.
  • சமூக ஊடகங்களில் வெளியிடப்பட்ட பதிவுகளில், 2021ஆம் ஆண்டு யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் கட்டப்பட்ட நினைவுச்சின்னம் அழிக்கப்பட்டதற்கு எதிர்ப்பாக இந்த நினைவுச்சின்னம் கட்டப்பட்டதாக அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
எழுத்து அளவு:

பொய்யர்கள். இவ்வாறு கூறுபவர்கள் கனடாவில் எவரும் இருந்தால், நீங்கள்  கொழும்பிற்கு திரும்பிச்  செல்லுங்கள்" என்று கூறி, கனடாவின் பிரம்டன் நகரபிதா பெற்றிக் பிரவுண்னினால் 'முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபி' திறந்துவைக்கப்பட்டமை, சமூக ஊடகங்களில் பேசுபொருளாகியுள்ளது.

கனடாவில் வசிக்கும் தமிழர்கள் சிலர் அந்நாட்டின் பிரம்ப்டன் நகரில், விடுதலை புலிகள் அமைப்பின் ஈழம் வரைபடத்தை உள்ளடக்கிய தமிழ் இனப்படுகொலை நினைவுச்சின்னம் ஒன்றை திறந்து வைத்த வீடியோ ஒன்றும், சமூக ஊடகங்களில் பரவி வருகிறது.

இது தொடர்பாக, கனடாவிலுள்ள இலங்கை உயர்ஸ்தானிகர் அலுவலகத்திடமிருந்து அறிக்கை ஒன்றை கோருவதற்கு எதிர்பார்ப்பதாக, வௌிவிவகார அமைச்சு தெரிவித்தது.

கனடாவில் வசிக்கும் இலங்கை வம்சாவளியைச் சேர்ந்த தமிழர்கள் சிலரால் பிராம்ப்டன் நகரில் கட்டப்பட்ட நினைவுச்சின்னம் ஒன்று தொடர்பாக, தற்போது சமூக ஊடகங்களில் பல வீடியோக்கள் பரவி வருகின்றன.

சமூக ஊடகங்களில் வெளியிடப்பட்ட பதிவுகளில், 2021ஆம் ஆண்டு யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் கட்டப்பட்ட நினைவுச்சின்னம் அழிக்கப்பட்டதற்கு எதிர்ப்பாக இந்த நினைவுச்சின்னம் கட்டப்பட்டதாக அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

கனேடிய தமிழ் தேசிய கவுன்சில் உள்ளிட்ட கனடாவில் உள்ள தமிழ் அமைப்புகளின் ஆதரவுடன் கட்டப்பட்ட இந்த நினைவுச்சின்னம், விடுதலை புலிகள் அமைப்பு உருவாக்கியதாகக் கூறப்படும் தமிழீழ வரைபடத்தையும் உள்ளடக்கி நிறுவப்பட்டுள்ளதை காணமுடிகிறது.

அந்த நினைவுச்சின்னத்தை திறந்து வைக்கும் நிகழ்வில், ஒன்ராறியோவின் பிரதி அமைச்சராகவும், இலங்கையின் யாழ்ப்பாணத்தில் பிறந்த விஜே தணிகாசலம் என்பவரும் கலந்துகொண்டிருந்ததை சமூக ஊடகங்களில் பரவிய வீடியோக்களில் காணமுடிந்தது.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...