Tamil Leader News
முக்கியம்
2027க்கான பட்ஜெட்; அட்வகாட்டா நிறுவனத்திடமிருந்து 5 பொருளாதார முன்மொழிவுகள்!●சங்கக்காரவின் விமான நிலையச் சம்பவத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்!●நான்கு மாவட்டங்களுக்கான நிலச்சரிவு எச்சரிக்கையை நீடித்தது NBRO!●'அவரைக் கொல்ல முயல்கிறார்கள்': இம்ரான் கானின் உயிருக்கு ஆபத்து என அவரது மகன் அவசர எச்சரிக்கை!●தமிழகத்தில் அடையாள அட்டைக்காகப் போராடும் இலங்கை இளைஞர்!●உலகின் மிகப்பெரிய கிரிப்டோகரன்சி கொள்ளையின் முழுமையான பின்னணி!●17ஆம் திகதி நாட்டை இருளில் மூழ்கடித்த திடீர் மின் தடையின் அறிக்கை வெளியானது!●இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●65 இலட்சம் ஓட்டுநர் உரிமங்கள் தேக்கம்: நிலைமை சீரடைய 2027 ஏப்ரல் வரை தாமதம்!●
செய்திகள்

பண்டிகைக் காலத்தில் அவதானமாக செயற்படுங்கள்!

T

The Leader Desk

ஏப்ரல் 13, 2025 • 4:51 AM

பண்டிகைக் காலத்தில் அவதானமாக செயற்படுங்கள்!   

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • சிகிச்சை பெறும் நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து இருப்பதாக விசேட வைத்திய நிபுணர் வைத்தியர் சமித சிறிதுங்க தெரிவித்தார்.
  • கடந்த காலத்தில் புத்தாண்டின் போது 28,000 முதல் 30,000 வரையிலானவர்கள் விபத்துக்கள் காரணமாக வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டதாக விசேட வைத்திய நிபுணர் சமித சிறிதுங்க தெரிவித்தார்.
  • ஆம் ஆண்டில் இது 1.3 மில்லியனுக்கும் அதிகமாக காணப்பட்டதாகவும், 2020-2021ஆம் ஆண்டில் இந்தத் தொகையில் வீழ்ச்சி ஏற்பட்டாலும், இந்த எண்ணிக்கை 2022-2023ஆம் ஆண்டில் மீண்டும் அதிகரிப்பைக் காட்டியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
  • அடுத்துவரும் 5-10 வருடங்களுக்குள் இது மேலும் அதிகரிக்கக்கூடும் என்றும், தற்போதைய கணக்கின்படி இது சுமார் 2 இலட்சத்தை அண்மிக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
எழுத்து அளவு:

சிகிச்சை பெறும் நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து இருப்பதாக விசேட வைத்திய நிபுணர் வைத்தியர் சமித சிறிதுங்க தெரிவித்தார்.

சாதாரணமாக வாராந்தம் திடீர் விபத்துக்கள் காரணமாக அரச வைத்தியசாலைகளில் 20,000 - 24,000 வரையானவர்கள் உள்நோயாளர்கள் பிரிவில் சிகிச்சைப் பெறுகின்ற போதிலும், ஒவ்வொரு வருடமும் ஏப்ரல் 8-16 வரையான பண்டிகைக் காலப்பகுதியில் இந்த எண்ணிக்கை 22,000 இலிருந்து 28,000ஆக அதிகரித்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

கடந்த காலத்தில் புத்தாண்டின் போது 28,000 முதல் 30,000 வரையிலானவர்கள் விபத்துக்கள் காரணமாக வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டதாக விசேட வைத்திய நிபுணர் சமித சிறிதுங்க தெரிவித்தார்.

வீதி விபத்துகள், விலங்கு கடி, விஷம் உடலில் சேர்தல் மற்றும் வன்முறை சம்பவங்கள் அதிகரிப்பு ஆகியவற்றால் இந்த விபத்துகள் ஏற்படுவதாக தெரிவித்தார்.

இந்த நாட்டில் உள்ள அரச வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்படும் பெரும்பாலான நோயாளிகள் விபத்துகள் காரணமாக அனுமதிக்கப்படுவதாகவும், இது வருடத்திற்கு சுமார் ஒரு மில்லியன் ஆகும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

2019ஆம் ஆண்டில் இது 1.3 மில்லியனுக்கும் அதிகமாக காணப்பட்டதாகவும், 2020-2021ஆம் ஆண்டில் இந்தத் தொகையில் வீழ்ச்சி ஏற்பட்டாலும், இந்த எண்ணிக்கை 2022-2023ஆம் ஆண்டில் மீண்டும் அதிகரிப்பைக் காட்டியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

அடுத்துவரும் 5-10 வருடங்களுக்குள் இது மேலும் அதிகரிக்கக்கூடும் என்றும், தற்போதைய கணக்கின்படி இது சுமார் 2 இலட்சத்தை அண்மிக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

வைத்தியசாலையில் அனுமதிக்கப்படும் ஒவ்வொரு 6 பேரில் ஒருவர் விபத்துக்கள் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்படுவதாகவும், இந்த விபத்துக்கள் ஒவ்வொன்றும் தடுக்கக்கூடியவை என்றும் விசேட வைத்திய நிபுணர் குறிப்பிட்டார்.

பல்வேறு காரணங்களால் ஒவ்வொரு ஆண்டும் 140,000-150,000 பேர் வரை இறக்கின்றனர் என்றும் விசேட வைத்திய நிபுணர் சுட்டிக்காட்டினார். மேலும் இந்த இறப்புகளில் 7 வீதமானவை விபத்துக்களால் ஏற்படுவதாகவும் கூறினார்.

இதனால் வாகன சாரதிகள் மற்றும் பொதுமக்கள் மிகவும் அவதானமாக செயற்படுமாறும் பாதுகாப்பான இடங்களில் விடுமுறையை களிக்குமாறும் விசேட வைத்தியர் அறிவுறுத்தியுள்ளார்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...