Tamil Leader News
முக்கியம்
நீதிமன்ற அலைக்களத்தின் வார இறுதி விபரிப்பு: அரசியல் பலவான்களுக்கு எதிரான சட்டம்!●2027க்கான பட்ஜெட்; அட்வகாட்டா நிறுவனத்திடமிருந்து 5 பொருளாதார முன்மொழிவுகள்!●சங்கக்காரவின் விமான நிலையச் சம்பவத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்!●நான்கு மாவட்டங்களுக்கான நிலச்சரிவு எச்சரிக்கையை நீடித்தது NBRO!●'அவரைக் கொல்ல முயல்கிறார்கள்': இம்ரான் கானின் உயிருக்கு ஆபத்து என அவரது மகன் அவசர எச்சரிக்கை!●தமிழகத்தில் அடையாள அட்டைக்காகப் போராடும் இலங்கை இளைஞர்!●உலகின் மிகப்பெரிய கிரிப்டோகரன்சி கொள்ளையின் முழுமையான பின்னணி!●17ஆம் திகதி நாட்டை இருளில் மூழ்கடித்த திடீர் மின் தடையின் அறிக்கை வெளியானது!●இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●
செய்திகள்

பெண் மருத்துவர் விவகாரத்தில் திடீர் திருப்பம்!

T

The Leader Desk

மார்ச் 13, 2025 • 4:24 AM

பெண் மருத்துவர் விவகாரத்தில் திடீர் திருப்பம்!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • சம்பவம் தொடர்பில் சந்தேகநபரின் சகோதரி மற்றும் மற்றுமொரு நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
  • இதேவேளை, குறித்த பெண் மருத்துவரை தவறான முறைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட சந்தேக நபர் இன்று (13) அநுராதபுரம் நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட உள்ளார்.
  • சம்பவம் அநுராதபுரம் மருத்துவமனை பெண் மருத்துவர் தவறான முறைக்குட்படுத்தப்பட்ட சம்பவத்தின் சூத்திரதாரி, தொலைபேசி மூலம் கண்காணிக்கப்பட்டு கைது செய்யப்பட்டார்.
  • அதன் மூலமாக நேற்று(12.03.2025) காலை சந்தேகநபரை கல்னேவ பிரதேசத்தில் வைத்துக் கைது செய்துள்ளதாக பொலிஸார் அறிவித்துள்ளனர்.
எழுத்து அளவு:

சம்பவம் தொடர்பில் சந்தேகநபரின் சகோதரி மற்றும் மற்றுமொரு நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சந்தேகநபரின் சகோதரி மற்றும் மற்றுமொரு நபர், நேற்று (12) இரவு கல்னேவ, நிதிகும்பாயாய பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


சந்தேகநபர் மறைந்திருக்க உதவிய குற்றச்சாட்டின் பேரில் அவரது சகோதரி கைது செய்யப்பட்டுள்ளார்.

இதேவேளை மருத்துவர் தவறான முறைக்குட்படுத்தப்பட்ட பின்னர் சந்தேக நபரால் திருடப்பட்டதாகக் கூறப்படும் தொலைபேசியை வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் மற்றொரு நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதேவேளை, குறித்த பெண் மருத்துவரை தவறான முறைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட சந்தேக நபர் இன்று (13) அநுராதபுரம் நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட உள்ளார்.

சம்பவம்
அநுராதபுரம் மருத்துவமனை பெண் மருத்துவர் தவறான முறைக்குட்படுத்தப்பட்ட சம்பவத்தின் சூத்திரதாரி, தொலைபேசி மூலம் கண்காணிக்கப்பட்டு கைது செய்யப்பட்டார்.

கடந்த ஞாயிறன்று இரவு பெண் மருத்துவரை அவரது விடுதி அறைக்குள் கூர்மையான கத்தியைக் காட்டி அச்சுறுத்தி அவரை தவறான முறைக்குட்படுத்தியதன் பின்னர் அவரது தொலைபேசியைத் திருடிக் கொண்டு சந்தேக நபர் தப்பியோடியுள்ளார்.

பாதிக்கப்பட்ட பெண் மருத்துவர் அளித்த புகாரின் ​பேரில் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபரின் நடமாட்டங்களை, மருத்துவரின் திருடப்பட்ட தொலைபேசி மூலம் பொலிஸார் கண்காணித்துள்ளனர்.

அதன் மூலமாக நேற்று(12.03.2025) காலை சந்தேகநபரை கல்னேவ பிரதேசத்தில் வைத்துக் கைது செய்துள்ளதாக பொலிஸார் அறிவித்துள்ளனர்.
37 வயதுடைய சகோதரி மற்றும் 27 வயதுடைய ஆண் ஒருவருமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...