Tamil Leader News
முக்கியம்
நீதிமன்ற அலைக்களத்தின் வார இறுதி விபரிப்பு: அரசியல் பலவான்களுக்கு எதிரான சட்டம்!●2027க்கான பட்ஜெட்; அட்வகாட்டா நிறுவனத்திடமிருந்து 5 பொருளாதார முன்மொழிவுகள்!●சங்கக்காரவின் விமான நிலையச் சம்பவத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்!●நான்கு மாவட்டங்களுக்கான நிலச்சரிவு எச்சரிக்கையை நீடித்தது NBRO!●'அவரைக் கொல்ல முயல்கிறார்கள்': இம்ரான் கானின் உயிருக்கு ஆபத்து என அவரது மகன் அவசர எச்சரிக்கை!●தமிழகத்தில் அடையாள அட்டைக்காகப் போராடும் இலங்கை இளைஞர்!●உலகின் மிகப்பெரிய கிரிப்டோகரன்சி கொள்ளையின் முழுமையான பின்னணி!●17ஆம் திகதி நாட்டை இருளில் மூழ்கடித்த திடீர் மின் தடையின் அறிக்கை வெளியானது!●இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●
செய்திகள்

இன்றும் மின் துண்டிப்பு அமுல்படுத்தப்படுகிறது!

T

The Leader Desk

பிப்ரவரி 13, 2025 • 4:24 AM

இன்றும் மின் துண்டிப்பு அமுல்படுத்தப்படுகிறது!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • இந்த மின் விநியோகத் துண்டிப்பு ஒரு மணி நேரம் அமுல்படுத்தப்படும் என்று, இலங்கை மின்சார சபை மேலும் தெரிவித்துள்ளது.
  • அதன்படி, பிற்பகல் 3.30 மணி முதல் இரவு 9.30 மணி வரை 6 மணி நேரத்திற்குள் 4 பிரிவுகளாக மின் விநியோகம் துண்டிக்கப்பட்டது.
  • இருப்பினும், நேற்று (12) பௌர்ணமி தினம் என்பதால், குறைந்த மின்சார தேவையை பூர்த்தி செய்ய முடிந்ததால், மின் விநியோத் துண்டிப்பை இலங்கை மின்சார சபை மேற்கொள்ளவில்லை.
  • தற்போது, ​​நுரைச்சோலை அனல் மின் நிலையத்தில் உள்ள மின்பிறப்பாக்கிகள் செயலிழந்துள்ள நிலையில், அதன் பராமரிப்புப் பணிகள் மின் பொறியாளர்களால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
எழுத்து அளவு:

இந்த மின் விநியோகத் துண்டிப்பு ஒரு மணி நேரம் அமுல்படுத்தப்படும் என்று, இலங்கை மின்சார சபை மேலும் தெரிவித்துள்ளது. மின் விநியோகத் துண்டிப்பு அமுல்படுத்தப்படும் பகுதிகள் மற்றும் நேர அட்டவணையை இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது.  

கடந்த ஞாயிற்றுக்கிழமை ஏற்பட்ட திடீர் மின் தடையைத் தொடர்ந்து, நுரைச்சோலை மின் நிலையத்தில் உள்ள 3 மின் உற்பத்தி இயந்திரங்களும் செயலிழந்ததால் மின்சாரத் தேவையை நிர்வகிக்க, இலங்கை மின்சார சபை 10 மற்றும் 11ஆம் திகதிகளில் நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் ஒன்றரை மணி நேரம் மின் விநியோகத் துண்டிப்பை அமுல்படுத்த நடவடிக்கை எடுத்தது.

அதன்படி, பிற்பகல் 3.30 மணி முதல் இரவு 9.30 மணி வரை 6 மணி நேரத்திற்குள் 4 பிரிவுகளாக மின் விநியோகம் துண்டிக்கப்பட்டது.

இருப்பினும், நேற்று (12) பௌர்ணமி தினம் என்பதால், குறைந்த மின்சார தேவையை பூர்த்தி செய்ய முடிந்ததால், மின் விநியோத் துண்டிப்பை இலங்கை மின்சார சபை மேற்கொள்ளவில்லை.

தற்போது, ​​நுரைச்சோலை அனல் மின் நிலையத்தில் உள்ள மின்பிறப்பாக்கிகள் செயலிழந்துள்ள நிலையில், அதன் பராமரிப்புப் பணிகள் மின் பொறியாளர்களால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

குறித்த பணிகளை விரைவாக முடித்த பின்னர், மின்பிறப்பாக்கிகளை இயக்க நடவடிக்கை எடுப்பதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

பெரும்பாலும் நாளை (14) நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையம், தேசிய மின் கட்டமைப்புடன் இணைக்க வாய்ப்புள்ளதாக இலங்கை மின்சார சபை மேலும் தெரிவித்துள்ளது.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...