Tamil Leader News
முக்கியம்
நான்கு மாவட்டங்களுக்கான நிலச்சரிவு எச்சரிக்கையை நீடித்தது NBRO!●'அவரைக் கொல்ல முயல்கிறார்கள்': இம்ரான் கானின் உயிருக்கு ஆபத்து என அவரது மகன் அவசர எச்சரிக்கை!●தமிழகத்தில் அடையாள அட்டைக்காகப் போராடும் இலங்கை இளைஞர்!●உலகின் மிகப்பெரிய கிரிப்டோகரன்சி கொள்ளையின் முழுமையான பின்னணி!●17ஆம் திகதி நாட்டை இருளில் மூழ்கடித்த திடீர் மின் தடையின் அறிக்கை வெளியானது!●இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●65 இலட்சம் ஓட்டுநர் உரிமங்கள் தேக்கம்: நிலைமை சீரடைய 2027 ஏப்ரல் வரை தாமதம்!●இஸ்ரேலிய வேலைவாய்ப்பு ஆட்சேர்ப்பு அரசாங்கத்தின் நேரடித் தலையீட்டிற்கு மாத்திரமே கட்டுப்படுத்தப்படும்!●மாடு அறுத்த குற்றத்துக்காக குஜராத்தில் மூவருக்கு ஆயுள் தண்டனை!●
செய்திகள்

13 அரசாங்க நிறுவனங்களை ஒன்றிணைத்து உருவாக்கப்படவுள்ள கட்டமைப்பு!

T

The Leader Desk

ஜூலை 28, 2023 • 4:17 AM

13 அரசாங்க நிறுவனங்களை ஒன்றிணைத்து உருவாக்கப்படவுள்ள கட்டமைப்பு!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • திணைக்களம் பொறுப்பேற்பதற்கான ஏற்பாடுகள் குறித்து வழி வகைகள் பற்றிய குழுவில் கலந்துரையாடப்பட்டது.
  • மேலும், RAMIS அமைப்பை ஏற்றுக்கொள்வது மற்றும் அதனை மேம்படுத்துவதற்கான கட்டமைக்கப்பட்ட முன்மொழிவை இந்த அறிக்கை உள்ளடக்கியிருக்க வேண்டும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
  • அதேநேரம், 13 அரசாங்க நிறுவனங்களை ஒன்றிணைத்து உருவாக்கப்படவுள்ள ஒருங்கிணைந்த தகவல் கட்டமைப்புக் குறித்தும் இங்கு கலந்துரையாடப்பட்டது.
  • இது தொடர்பில் சம்பந்தப்பட்ட 13 நிறுவனங்களுடனும் பல சுற்றுக் கலந்துரையாடல்கள் நடத்தப்பட்டது என்று தெரிவிக்கப்பட்டதுடன், இந்த நிறுவனங்கள் அனைத்தும் தங்கள் தகவல் அமைப்புகளில் தேசிய அடையாள எண்ணை பொதுவான குறியீடாக பயன்படுத்த வேண்டும் என்று பரிந்துரைக்கப்பட்டது.
எழுத்து அளவு:

திணைக்களம் பொறுப்பேற்பதற்கான ஏற்பாடுகள் குறித்து வழி வகைகள் பற்றிய குழுவில் கலந்துரையாடப்பட்டது.

பாராளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக ரணவக்க தலைமையில் அண்மையில் கூடிய வழிவகைகள் பற்றிய குழுக் கூட்டத்திலேயே இவ்விடயம் கலந்துரையாடப்பட்டது.

அண்மையில் உள்நாட்டு இறைவரித் திணைக்களத்துக்கு விஜயம் மேற்கொண்டிருந்த வழிவகைகள் பற்றிய குழு RAMIS அமைப்பு உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்துக் கலந்துரையாடியிருந்தது. இது தொடர்பில் மேலும் கலந்துரையாடும் நோக்கில் உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் அதிகாரிகள் மற்றும் இலங்கை தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப முகவர் நிலையத்தின் (ICTA) அதிகாரிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

RAMIS அமைப்புத் தொடர்பில் செயற்படும் சிங்கப்பூர் நிறுவனத்துடன் ஏற்கனவே செய்துகொள்ளப்பட்ட ஒப்பந்தத்துக்கு அமைய எதிர்வரும் ஜனவரி மாதத்துடன் குறித்த அமைப்பை உள்நாட்டு இறைவரித் திணைக்களம் முழுமையாகப் பொறுப்பேற்க வேண்டும் என்ற விடயம் இங்கு சுட்டிக்காட்டப்பட்டது.

இதற்குத் தேவையான மனித வளம் உள்ளிட்ட உள்ளக விடயங்கள் திணைக்களத்திற்குள் உருவாக்கப்படாமை இங்கு தெரியவந்ததுடன், இது தொடர்பில் அறிக்கையொன்றைக் குழுவுக்கு சமர்ப்பிக்குமாறு அதன் தலைவர் பாட்டலி சம்பிக்க ரணவக, உள்நாட்டு இறைவரித் திணைக்களத்திற்கு அறிவுறுத்தல் விடுத்தார். மேலும், RAMIS அமைப்பை ஏற்றுக்கொள்வது மற்றும் அதனை மேம்படுத்துவதற்கான கட்டமைக்கப்பட்ட முன்மொழிவை இந்த அறிக்கை உள்ளடக்கியிருக்க வேண்டும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

எட்டு வருடங்களுக்கு முன்னர் அறிமுகப்படுத்தப்பட்ட RAMIS அமைப்பை இன்னமும் முழுமையாக செயற்படுத்தப்பட முடியாமல் இருப்பது தொடர்பில் குழு உறுப்பினர்கள் அதிருப்தி வெளியிட்டனர்.

அதேநேரம், 13 அரசாங்க நிறுவனங்களை ஒன்றிணைத்து உருவாக்கப்படவுள்ள ஒருங்கிணைந்த தகவல் கட்டமைப்புக் குறித்தும் இங்கு கலந்துரையாடப்பட்டது. இது தொடர்பில் சம்பந்தப்பட்ட 13 நிறுவனங்களுடனும் பல சுற்றுக் கலந்துரையாடல்கள் நடத்தப்பட்டது என்று தெரிவிக்கப்பட்டதுடன், இந்த நிறுவனங்கள் அனைத்தும் தங்கள் தகவல் அமைப்புகளில் தேசிய அடையாள எண்ணை பொதுவான குறியீடாக பயன்படுத்த வேண்டும் என்று பரிந்துரைக்கப்பட்டது.

இவ்வாறு ஒருங்கிணைந்த அமைப்பு ஒன்றை உருவாக்கும்போது தனித்துவமான அடையாளம் ஒன்றின் ஊடாக இதனை அணுகுவதற்கான ஏற்பாடுகளைச் செய்வது பொருத்தமானதாக இருக்கும் என குழு பரிந்துரைத்தது.

இக்கூட்டத்தில் இராஜாங்க அமைச்சர்களான லசந்த அழகியவண்ண, சஷீந்திர ராஜபக்ஷ, அநுராத ஜயரத்ன, பாராளுமன்ற உறுப்பினர்களான வாசுதேவ நாணயகா, டபிள்யூ.டி.ஜே. செனவிரத்ன, கலாநிதி ஹர்ஷ.த சில்வா, இஷாக் ரஹ்மான், வசந்தயாப்பா பண்டார மற்றும் சஞ்ஜீவ எதிரிமான்ன ஆகியோர் கலந்துகொண்டனர்.

 
 
தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...