Tamil Leader News
முக்கியம்
நீதிமன்ற அலைக்களத்தின் வார இறுதி விபரிப்பு: அரசியல் பலவான்களுக்கு எதிரான சட்டம்!●2027க்கான பட்ஜெட்; அட்வகாட்டா நிறுவனத்திடமிருந்து 5 பொருளாதார முன்மொழிவுகள்!●சங்கக்காரவின் விமான நிலையச் சம்பவத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்!●நான்கு மாவட்டங்களுக்கான நிலச்சரிவு எச்சரிக்கையை நீடித்தது NBRO!●'அவரைக் கொல்ல முயல்கிறார்கள்': இம்ரான் கானின் உயிருக்கு ஆபத்து என அவரது மகன் அவசர எச்சரிக்கை!●தமிழகத்தில் அடையாள அட்டைக்காகப் போராடும் இலங்கை இளைஞர்!●உலகின் மிகப்பெரிய கிரிப்டோகரன்சி கொள்ளையின் முழுமையான பின்னணி!●17ஆம் திகதி நாட்டை இருளில் மூழ்கடித்த திடீர் மின் தடையின் அறிக்கை வெளியானது!●இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●
செய்திகள்

13வது திருத்தத்தை எதிர்த்து முதலமைச்சர் பதவிக்கு குறிவைக்கும் தரப்பு!

T

The Leader Desk

ஜனவரி 26, 2022 • 11:05 AM

13வது திருத்தத்தை எதிர்த்து முதலமைச்சர் பதவிக்கு குறிவைக்கும் தரப்பு!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • சுகாஷ் மற்றும் காண்டீபன் ஆகியோருக்கிடையில் இந்தப் போட்டி நிலவுவதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
  • "13வது திருத்தச் சட்டம் தமிழ் மக்கள் எதிர்பார்க்கின்ற அரசியல் தீர்வு கிடையாது அதில் நாம் வெளிப்படையாகவே இருக்கிறோம்.
  • ஒன்றிணைந்த தமிழ் தேசியக் கட்சிகளினால் இந்தியாவுக்கு அனுப்பப்பட்ட கடிதத்தில் 13ஆவது திருத்தத்தை நடைமுறைப்படுத்துமாறு கோரி இருக்கிறோம்.
  • தற்போது இருக்கின்ற சூழ்நிலையில் எமக்கு இருக்கின்ற குறைந்த பட்ச அதிகாரமாக 13வது திருத்தமே காணப்படுகிறது.
எழுத்து அளவு:



சுகாஷ் மற்றும் காண்டீபன் ஆகியோருக்கிடையில் இந்தப் போட்டி நிலவுவதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

யாழ் ஊடக மையத்தில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்தார்.

"13வது திருத்தச் சட்டம் தமிழ் மக்கள் எதிர்பார்க்கின்ற அரசியல் தீர்வு கிடையாது அதில் நாம் வெளிப்படையாகவே இருக்கிறோம்.

ஒன்றிணைந்த தமிழ் தேசியக் கட்சிகளினால் இந்தியாவுக்கு அனுப்பப்பட்ட கடிதத்தில் 13ஆவது திருத்தத்தை நடைமுறைப்படுத்துமாறு கோரி இருக்கிறோம்.

13 நாம் இந்தியாவிடம் கேட்பதற்கு காரணங்கள் இருக்கின்றது. தற்போது இருக்கின்ற சூழ்நிலையில் எமக்கு இருக்கின்ற குறைந்த பட்ச அதிகாரமாக 13வது திருத்தமே காணப்படுகிறது.

இதை இந்தியாவுக்கு நாம் வலியுறுத்தியுள்ளோம். இந்தியா இலங்கை அரசை எவ்வாறு கையாளப் போகின்றது என்பதைப் 13 ஆவது திருத்தம் நடைமுறைக்கு வரும் போதே அறிந்து கொள்ளலாம்.

சிலர் 13வது திருத்தம் தமிழ் மக்களுக்கு தேவை அல்ல என போராட்டம் நடத்துவதற்கு தயாராகிக் கொண்டிருக்கிறார்கள்.

அவர்களிடம் நான் ஒன்றைக் கேட்கிறேன் 13வது திருத்தச் சட்டம் வேண்டாம் என கூறுகின்றவர்கள் மாகாணசபைத் தேர்தலில் போட்டியிடப்போவது எதற்கு?

அதுமட்டுமல்லாது அவர்களின் கட்சிக்குள் முதலமைச்சர் வேட்பாளர் யார் என்ற போட்டி மேலோங்கி இருக்கின்ற நிலையில் இவர்களின் நோக்கம் என்ன.

வடக்கு மாகாண சபையை கைப்பற்ற 13ஆவது திருத்தத்தை இல்லாமல் செய்யப் போகிறார்களா அல்லது மாகாணசபையினால் வழங்கப்படுகின்ற சுகபோகங்களை அனுபவிக்க போகிறார்களா ?என்பதை பகிரங்கமாக கூற வேண்டும்.

முன்னணியினர் 13ஆம் திருத்தம் தேவையில்லை அதை அமுல்படுத்துமாறு கூறுபவர்களை எதிர்க்க வேண்டும் என வீதிகளில் கூறுவதை விடுத்து சமஷ்டியை எவ்வாறு ஏற்படுத்தப் போகிறோம் என்பதை மக்களுக்கு கூற வேண்டும்.

சீனா ஆதிக்கம் வடக்கில் மேல் ஆகியுள்ள நிலையில்13ஆவது திருத்தத்தை அமுல்படுத்துவதுவதை உறுதி செய்யவேண்டிய தேவை இந்தியாவுக்கே அதிகம் உள்ளது .

தமிழ் மக்களின் காணிகளை அரசாங்கம் பறித்து வருகின்ற நிலையில் பாராளுமன்ற உறுப்பினர்களாக இருந்தும் அவற்றையும் சாதிக்க முடியவில்லை.

13 இன் மூலம் மாகாண சபைக்கு வழங்கப்பட்ட அதிகாரங்களை செயற்படுத்துவதற்கு மாகாண சபை ஒன்று நடைமுறையில் இருக்கும் போதே ஓரளவேனும் கட்டுப்படுத்தலாம்.

ஆகவே 13 வேண்டாம் என மக்களை குழப்புவதை விடுத்து சமஷ்டியை எவ்வாறு பெறலாம் என்பதை கூறுங்கள் நாமும் இணைந்து பயணிக்க தயாராக இருக்கிறோம் என அவர் மேலும் தெரிவித்தார்.

 

எமது செய்திகளை வாட்ஸ்ஆப்பில் பெறுவதற்கு இணையுங்கள்

https://chat.whatsapp.com/GZOGo5j8CI1KyIL2UwXAMe

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

13வது திருத்தத்தை எதிர்த்து முதலமைச்சர் பதவிக்கு குறிவைக்கும் தரப்பு! | Tamil Leader | We Lead the Nation