Tamil Leader News
முக்கியம்
2027க்கான பட்ஜெட்; அட்வகாட்டா நிறுவனத்திடமிருந்து 5 பொருளாதார முன்மொழிவுகள்!●சங்கக்காரவின் விமான நிலையச் சம்பவத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்!●நான்கு மாவட்டங்களுக்கான நிலச்சரிவு எச்சரிக்கையை நீடித்தது NBRO!●'அவரைக் கொல்ல முயல்கிறார்கள்': இம்ரான் கானின் உயிருக்கு ஆபத்து என அவரது மகன் அவசர எச்சரிக்கை!●தமிழகத்தில் அடையாள அட்டைக்காகப் போராடும் இலங்கை இளைஞர்!●உலகின் மிகப்பெரிய கிரிப்டோகரன்சி கொள்ளையின் முழுமையான பின்னணி!●17ஆம் திகதி நாட்டை இருளில் மூழ்கடித்த திடீர் மின் தடையின் அறிக்கை வெளியானது!●இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●65 இலட்சம் ஓட்டுநர் உரிமங்கள் தேக்கம்: நிலைமை சீரடைய 2027 ஏப்ரல் வரை தாமதம்!●
செய்திகள்

விட்ட தவறுகளை சுயவிமர்சனம் செய்து 13ஆவது திருத்தச் சட்டத்தை அமுலாக்க ஓத்துழைக்க வேண்டும் !இரா.துரைரெத்தினம்

T

The Leader Desk

டிசம்பர் 6, 2021 • 4:18 PM

விட்ட தவறுகளை சுயவிமர்சனம் செய்து 13ஆவது திருத்தச் சட்டத்தை அமுலாக்க ஓத்துழைக்க வேண்டும் !இரா.துரைரெத்தினம்

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • இது இலங்கையில் முழுமையாக நடை முறைப்படுத்தப்படுகின்றன.
  • இது காலப்போக்கில் இனவாத அரசினால் சில அதிகாரங்கள் இல்லாமலாக்கப்பட்டுள்ளது.
  • குறிப்பாக, இணைக்கப்பட்ட வடக்கு,கிழக்கு மாகாணசபை 30.06.2006ம் ஆண்டு காலகட்டத்தில் இணைந்த முறமை தவறென பெரும்பான்மை இனத்தைச் சார்ந்த ஒருவரினால் வடக்கு,கிழக்கு மாகாணசபை நிருவாகம் கிழக்கு வேறாக, வடக்கு வேறாக பிரிக்கப்பட்டது.
  • கடந்த காலத்தில் மாகாணசபை தொடர்பாக விட்ட தவறுகளை சுயவிமர்சனம் செய்து கொண்டு எதிர் காலத்தில் நாடாளுமன்றத்தில் அனுமதிக்கப்பட்டுள்ள 13ஆவது திருத்தச் சட்டத்தை அமுலாக்க ஓத்துழைக்க வேண்டுமென அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
எழுத்து அளவு:

முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினரும் -ஈ.பி.ஆர்.எல்.எப், பத்மநாபா மன்ற தலைவருமான இரா.துரைரெத்தினம் இன்று (திங்கட்கிழமை) ஊடக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்

1990ம் ஆண்டு இருந்து இன்றுவரையும் மாகாணமுறை நிருவாகம் அமுலில் உள்ளது இது  நாடாளுமன்றத்தில் சட்டத்திருத்தத்தில் உள்ளடக்கப்பட்ட ஒரு அரசியல் அதிகாரமாகும். இது இலங்கையில் முழுமையாக நடை முறைப்படுத்தப்படுகின்றன.

13 இன்றைப் பொறுத்தவரையில் சிறுபான்மை இனத்திற்காக வடக்கு, கிழக்கை இணைத்து ஒரு மாகாண சபையாக இயங்கி வந்த நிலையில் பல அதிகாரங்கள் மாகாணசபை நிருவாகத்தின் கீழ் உள்ளடக்கப்பட்டன. இது காலப்போக்கில் இனவாத அரசினால் சில அதிகாரங்கள் இல்லாமலாக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக, இணைக்கப்பட்ட வடக்கு,கிழக்கு மாகாணசபை 30.06.2006ம் ஆண்டு காலகட்டத்தில் இணைந்த முறமை தவறென பெரும்பான்மை இனத்தைச் சார்ந்த  ஒருவரினால் வடக்கு,கிழக்கு மாகாணசபை நிருவாகம் கிழக்கு வேறாக, வடக்கு வேறாக பிரிக்கப்பட்டது.

இத்தோடு, மாகாண நிருவாகத்திற்கென உள்ளடக்கப்பட்ட அதிகாரங்களான பிரதேச செயலகத்திற்கு கட்டுப்பட்ட சில அதிகாரங்கள் இல்லாமலாக்கப்பட்டதோடு, பொலிஸ்அதிகாரங்கள், காணி அதிகாரங்கள், நிதி தொடர்பான அதிகாரங்கள், விவசாய, நீர்பாசனத்தோடு சம்பந்தப்பட்ட அதிகாரங்கள், பொதுச்சேவை, பொதுநிருவாகத்தின் கீழுள்ள அதிகாரங்களை மத்திய அரசு கையில் எடுத்துக் கொண்டது.

குறிப்பிட்ட அதிகாரங்களை எடுத்துக் கொண்டாலும், இன்னும் சில விடயங்களில் மாகாணசபை முறமையின் கீழுள்ள நிலையில் முன்பு இல்லாமல் இருக்கும் தமிழர்கள் ஆகிய நாங்கள் உள்ளதை சிறப்பாக செய்வதற்கு முயற்சிப்பதோடு, அரசு சிறுபான்மை இனத்திற்கு எதிரான அதிகாரத்தை இல்லாமலாக்குகின்ற புதிய அதிகாரத்தை தர மறுக்கின்ற செயல்வடிவத்தை செய்வதற்கும்,

சர்வதேச அங்கீகாரத்தை பெற்றுக் கொண்ட சர்வதேசத்தால் ஏற்றுக் கொள்ளப்பட்ட 13ஆவது திருத்தச் சட்டத்தை முழுமையாக அமுல் படுத்த தமிழ்த் தலைமைகள் செயல்வடிவம் கொடுக்க வேண்டும்.

கடந்த காலத்தில் மாகாணசபை தொடர்பாக விட்ட தவறுகளை சுயவிமர்சனம் செய்து கொண்டு எதிர் காலத்தில்  நாடாளுமன்றத்தில் அனுமதிக்கப்பட்டுள்ள 13ஆவது திருத்தச் சட்டத்தை அமுலாக்க ஓத்துழைக்க வேண்டுமென அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

விட்ட தவறுகளை சுயவிமர்சனம் செய்து 13ஆவது திருத்தச் சட்டத்தை அமுலாக்க ஓத்துழைக்க வேண்டும் !இரா.துரைரெத்தினம் | Tamil Leader | We Lead the Nation