கொரோனா வைரஸ் கட்டுப்படுத்தல் நடவடிக்கைகளுக்கு ஒத்துழைக்கும் திட்டத்தின் முதற்படியாக இலங்கைக்கு இந்திய இராணுவக் குழுவொன்றை அனுப்பு இந்தியா தயாராக இருப்பதாக இந்தியாவிலிருந்து வெளிவரும் ஹிந்துப் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

கடந்த மாதம் மாலைதீவில் கொரோனாவை கட்டுப்படுத்துவதற்காக ஒரு துணைப்படையை இந்தியா ஈடுபடுத்தியதாகக் கூறும் அப்பத்திரிகை இலங்கை, பங்களாதேசம், பூட்டான் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளுக்கும் அத்தகைய படையணியை அனுப்பத் திட்டமிட்டிருப்பதாகம் பத்திரிகை கூறுகிறது.

பிராந்திய சார்க் நாடுகளுக்கு ஒத்துழைப்பு வழங்கும் கொள்கையின்படி 10 மில்லியன் டொலர் திட்டத்தின் கீழ் ஒத்துழைப்பு வழங்குவதாகக் கூறப்பட்டாலும், பாகிஸ்தான் அதனை நிராகரித்துள்ளது. சமீபத்தில் 15 இராணுவ வீரர்கள் அடங்கிய குழுவொன்றை குவைத்திற்கும் அனுப்பியுள்ளதாக அப்பத்திரிகைச் செய்தி மேலும் கூறுகிறது.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி