Tamil Leader News
முக்கியம்
நான்கு மாவட்டங்களுக்கான நிலச்சரிவு எச்சரிக்கையை நீடித்தது NBRO!●'அவரைக் கொல்ல முயல்கிறார்கள்': இம்ரான் கானின் உயிருக்கு ஆபத்து என அவரது மகன் அவசர எச்சரிக்கை!●தமிழகத்தில் அடையாள அட்டைக்காகப் போராடும் இலங்கை இளைஞர்!●உலகின் மிகப்பெரிய கிரிப்டோகரன்சி கொள்ளையின் முழுமையான பின்னணி!●17ஆம் திகதி நாட்டை இருளில் மூழ்கடித்த திடீர் மின் தடையின் அறிக்கை வெளியானது!●இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●65 இலட்சம் ஓட்டுநர் உரிமங்கள் தேக்கம்: நிலைமை சீரடைய 2027 ஏப்ரல் வரை தாமதம்!●இஸ்ரேலிய வேலைவாய்ப்பு ஆட்சேர்ப்பு அரசாங்கத்தின் நேரடித் தலையீட்டிற்கு மாத்திரமே கட்டுப்படுத்தப்படும்!●மாடு அறுத்த குற்றத்துக்காக குஜராத்தில் மூவருக்கு ஆயுள் தண்டனை!●
செய்திகள்

புவிசார் சுற்றுப்பாதைகளில் இலங்கை என்ற பெயரில் செயற்கைக்கோள் இல்லையா?

T

The Leader Desk

ஆகஸ்ட் 12, 2025 • 3:43 PM

புவிசார் சுற்றுப்பாதைகளில் இலங்கை என்ற பெயரில் செயற்கைக்கோள் இல்லையா?

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • இன்று (12) இடம்பெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு குறிப்பிட்டார்.
  • “இந்த செயல்முறையே, ஐக்கிய நாடுகள் சபையின் சர்வதேச தொலைத்தொடர்பு ஒன்றியத்தால், உலகளவில் பொதுவாக ஏற்றுக்கொள்ளப்பட்ட, செயற்கைக்கோளை ஏவுவதற்கான நிலையான முறையாகும்.
  • அதன்படி, இந்த புவிசார் சுற்றுப்பாதைகளில் இலங்கை 121.5 மற்றும் 50 என இரண்டு நிலைகளைக் கொண்டுள்ளது.
  • “ITU ஊடாக கிடைக்கும் தகவல்களின்படி, 121.5 மற்றும் 50 என இந்த புவிசார் சுற்றுப்பாதைகளில் தற்போது இலங்கை என்ற பெயரில் எந்த செயற்கைக்கோளும் இல்லை.
எழுத்து அளவு:

இன்று (12) இடம்பெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு குறிப்பிட்டார்.

“உலகில் தகவல் மற்றும் தொடர்பு தொழில்நுட்பத்தில் பணியாற்றி வரும் ஐக்கிய நாடுகள் சபையின் விசேட நிறுவனம் ஒன்று உள்ளது. அதுதான் சர்வதேச தொலைத்தொடர்பு ஒன்றியம். சர்வதேச தொலைத்தொடர்பு ஒன்றியம் (International Telecommunication Union) அல்லது ITU. இந்த ITU மூலம்தான் இது தொடர்பான தொழில்நுட்ப மற்றும் ஒருங்கிணைப்பு செயல்முறை மேற்கொள்ளப்படுகிறது.

"செயற்கைக்கோளை தாக்கல் செய்யும் செயல்முறை மூன்று முக்கிய படிகளைக் கொண்டுள்ளது என்று ITU கூறியுள்ளது. இதில் முதலாவது படிமுறை, திட்டமிடப்பட்ட செயற்கைக்கோள் வலையமைப்பின் தொழில்நுட்ப விபரங்களை தொடர்புடைய நிர்வாக அமைப்பால் ITUஇற்கு சமர்ப்பிப்பதாகும்.

“இரண்டாவதாக, தகவல் தொடர்பு இடையூறுகளைத் தவிர்க்க, வழங்கப்படும் இந்தத் தகவல்கள் மற்ற உறுப்பு நாடுகளுடன் ஒருங்கிணைக்கப்பட வேண்டும். மூன்றாவதாக, பதிவு மற்றும் சர்வதேச அங்கீகாரத்திற்கான இறுதி அளவுருக்கள் குறித்த அறிவிப்பு.

“இந்த செயல்முறையே, ஐக்கிய நாடுகள் சபையின் சர்வதேச தொலைத்தொடர்பு ஒன்றியத்தால், உலகளவில் பொதுவாக ஏற்றுக்கொள்ளப்பட்ட, செயற்கைக்கோளை ஏவுவதற்கான நிலையான முறையாகும். இதற்கு வழக்கமாக குறைந்தபட்சம் மூன்று வருடங்களும் அதிகபட்சம் ஏழு வருடங்களும் ஆகும். அதுதான் செயல்முறை.

“ITU எனப்படும் இந்த அமைப்பின் இலங்கை சார்பில் இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைக்குழு உறுப்புரிமையை கொண்டுள்ளது. அதன்படி, இந்த புவிசார் சுற்றுப்பாதைகளில் இலங்கை 121.5 மற்றும் 50 என இரண்டு நிலைகளைக் கொண்டுள்ளது. ஆனால் இதில் உள்ள தகவல்களின்படி, இந்த இடங்கள் எங்களுக்காக ஒதுக்கப்பட்டிருந்தாலும், ஆப்கானிஸ்தான், கிர்கிஸ்தான், மால்டோவா, நேபாளம், தஜிகிஸ்தான் மற்றும் ருமேனியா போன்ற நாடுகளும் விரும்பினால் இந்த இடங்களில் தங்கள் பணியைத் தடையின்றித் தொடரலாம்.

“ITU ஊடாக கிடைக்கும் தகவல்களின்படி, 121.5 மற்றும் 50 என இந்த புவிசார் சுற்றுப்பாதைகளில் தற்போது இலங்கை என்ற பெயரில் எந்த செயற்கைக்கோளும் இல்லை. பின்னர், இந்த ITU ஊடாக சுப்ரீம் சாட் வன் என்ற செயற்கைக்கோள் இயக்கப்படுகிறதா என்று ஆராய்ந்தோம். அப்படி எதுவும் இல்லை. சுப்ரீம் சாட் வன் பின்னர் சைனாஸ் எட் டுவெல் என பெயரிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

“இலங்கையுடன் தொடர்புடைய இந்த இடத்தில் சுற்றுப்பாதையில் உள்ள சீன செயற்கைக்கோள் பற்றி ITU வலைத்தளத்தில் குறிப்பிடப்படவில்லை. இலங்கைக்குச் சொந்தமான இந்த சுப்ரீம் சாட் வன் அல்லது சீனா சாட் டுவெல் என்ற பெயரில் இலங்கைக்கு சொந்தமான சுற்றுப்பாதைகளிலிருந்து எந்தவொரு தகலும் இல்லையென ITU தெரிவிக்கிறது” என அமைச்சர் கூறினார்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

புவிசார் சுற்றுப்பாதைகளில் இலங்கை என்ற பெயரில் செயற்கைக்கோள் இல்லையா? | Tamil Leader | We Lead the Nation