Tamil Leader News
முக்கியம்
நான்கு மாவட்டங்களுக்கான நிலச்சரிவு எச்சரிக்கையை நீடித்தது NBRO!●'அவரைக் கொல்ல முயல்கிறார்கள்': இம்ரான் கானின் உயிருக்கு ஆபத்து என அவரது மகன் அவசர எச்சரிக்கை!●தமிழகத்தில் அடையாள அட்டைக்காகப் போராடும் இலங்கை இளைஞர்!●உலகின் மிகப்பெரிய கிரிப்டோகரன்சி கொள்ளையின் முழுமையான பின்னணி!●17ஆம் திகதி நாட்டை இருளில் மூழ்கடித்த திடீர் மின் தடையின் அறிக்கை வெளியானது!●இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●65 இலட்சம் ஓட்டுநர் உரிமங்கள் தேக்கம்: நிலைமை சீரடைய 2027 ஏப்ரல் வரை தாமதம்!●இஸ்ரேலிய வேலைவாய்ப்பு ஆட்சேர்ப்பு அரசாங்கத்தின் நேரடித் தலையீட்டிற்கு மாத்திரமே கட்டுப்படுத்தப்படும்!●மாடு அறுத்த குற்றத்துக்காக குஜராத்தில் மூவருக்கு ஆயுள் தண்டனை!●
செய்திகள்

வட, கிழக்கு ஹர்த்தால் திகதி மாற்றம்!

T

The Leader Desk

ஆகஸ்ட் 12, 2025 • 3:13 PM

வட, கிழக்கு ஹர்த்தால் திகதி மாற்றம்!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • இராணுவ அடாவடித்தனத்தில் உயிரிழந்தமையைக் கண்டித்தும் இலங்கைத் தமிழரசுக் கட்சி நடத்துவதாக அறிவித்துள்ள ஹர்த்தால் எதிர்வரும் 15 ஆம் திகதி வெள்ளிக்கிழமை நடைபெறாது என்றும், அடுத்த திங்கட்கிழமை 18ஆம் திகதியே நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
  • மடு தேவாலய உற்சவத்தை ஒட்டி மன்னார் குரு முதல்வருடனும் ஏனைய குருமாருடனும் சுமந்திரன் இன்று பிற்பகல் மன்னாரில் கலந்துரையாடினார்.
  • மடு தேவாலய உற்சவம் மற்றும் நல்லூர் உற்சவ விசேட தினங்களைக் கருத்தில் எடுத்து இந்த முடிவு மேற்கொள்ளப்பட்டிருப்பதாகத் தமிழரசுக் கட்சியின் பொதுச்செயலாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.
எழுத்து அளவு:

இராணுவ அடாவடித்தனத்தில் உயிரிழந்தமையைக்  கண்டித்தும் இலங்கைத் தமிழரசுக் கட்சி நடத்துவதாக அறிவித்துள்ள ஹர்த்தால் எதிர்வரும் 15 ஆம் திகதி வெள்ளிக்கிழமை நடைபெறாது என்றும், அடுத்த திங்கட்கிழமை 18ஆம் திகதியே நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மடு தேவாலய உற்சவம் மற்றும் நல்லூர் உற்சவ விசேட தினங்களைக்  கருத்தில் எடுத்து இந்த முடிவு மேற்கொள்ளப்பட்டிருப்பதாகத் தமிழரசுக் கட்சியின் பொதுச்செயலாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.

மடு தேவாலய உற்சவத்தை ஒட்டி மன்னார் குரு முதல்வருடனும் ஏனைய குருமாருடனும் சுமந்திரன் இன்று பிற்பகல் மன்னாரில் கலந்துரையாடினார்.

அதையடுத்து தமிழரசுக் கட்சியின் தலைவர் சி.வி.கே. சிவஞானத்துடனும் நல்லூர் உற்சவ தினங்கள் குறித்தும் கலந்துரையாடிய பின்னர் முன்னர் அறிவித்தபடி எதிர்வரும் வெள்ளிக்கிழமை 15 ஆம் திகதி ஹர்த்தாலை வடக்கு, கிழக்கில் முன்னெடுப்பதில்லை என்றும், எதிர்வரும் 18ஆம் திகதி திங்கட்கிழமை அதை மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளது என்றும் சுமந்திரன் மேலும் குறிப்பிட்டார்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...