Tamil Leader News
முக்கியம்
நான்கு மாவட்டங்களுக்கான நிலச்சரிவு எச்சரிக்கையை நீடித்தது NBRO!●'அவரைக் கொல்ல முயல்கிறார்கள்': இம்ரான் கானின் உயிருக்கு ஆபத்து என அவரது மகன் அவசர எச்சரிக்கை!●தமிழகத்தில் அடையாள அட்டைக்காகப் போராடும் இலங்கை இளைஞர்!●உலகின் மிகப்பெரிய கிரிப்டோகரன்சி கொள்ளையின் முழுமையான பின்னணி!●17ஆம் திகதி நாட்டை இருளில் மூழ்கடித்த திடீர் மின் தடையின் அறிக்கை வெளியானது!●இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●65 இலட்சம் ஓட்டுநர் உரிமங்கள் தேக்கம்: நிலைமை சீரடைய 2027 ஏப்ரல் வரை தாமதம்!●இஸ்ரேலிய வேலைவாய்ப்பு ஆட்சேர்ப்பு அரசாங்கத்தின் நேரடித் தலையீட்டிற்கு மாத்திரமே கட்டுப்படுத்தப்படும்!●மாடு அறுத்த குற்றத்துக்காக குஜராத்தில் மூவருக்கு ஆயுள் தண்டனை!●
செய்திகள்

மன்னாரில் மீண்டும் நள்ளிரவில் பதற்றம்!

T

The Leader Desk

ஆகஸ்ட் 12, 2025 • 1:46 AM

மன்னாரில் மீண்டும் நள்ளிரவில் பதற்றம்!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • மன்னாரில் 2ஆம் கட்ட காற்றாலை மின்கோபுர திட்டத்திற்கான பொருட்கள் ஏற்றிவருகின்ற நிலையில் மக்கள் தொடர்ந்தும் எதிர்ப்பை வெளியபடுத்தி வருகின்றனர்.
  • இன்று (12) 10ஆவது நாளாகவும் போராட்டம் தொடரும் நிலையில் பொலிஸ் பாதுகாப்புடன் மின்கோபுர திட்டத்திற்கான பொருட்கள் ஏற்றப்பட்டு வருவதோடு மன்னார் நுழைவாயில், மன்னார் நீதிமன்றத்திற்கு முன்பாக வாகனங்கள் நிறுத்தப்பட்டுள்ளன.
  • இந்தநிலையில், மன்னார் மாவட்டத்தில் ஒன்றுகூடிய மக்கள் எதிர்ப்பு நிலையை உண்டாக்கியுள்ளனர்.
  • அங்கு 100ற்கும் மேற்பட்ட பொலிஸார் குவிக்கப்பட்டுள்ள நிலையில் சம்பவ இடத்திற்கு வருகை தந்த மன்னார் பொலிஸ்நிலைய பொறுப்பதிகாரி மக்களை அச்சுறுத்தும் வகையில் நடந்துக்கொண்டதோடு சக பொலிஸாரை வைத்து அனைவரையும் புகைப்படம் எடுத்துள்ளார்.
எழுத்து அளவு:

மன்னாரில் 2ஆம் கட்ட காற்றாலை மின்கோபுர திட்டத்திற்கான பொருட்கள் ஏற்றிவருகின்ற நிலையில் மக்கள் தொடர்ந்தும் எதிர்ப்பை வெளியபடுத்தி வருகின்றனர்.

இன்று (12) 10ஆவது நாளாகவும் போராட்டம் தொடரும் நிலையில் பொலிஸ் பாதுகாப்புடன் மின்கோபுர திட்டத்திற்கான பொருட்கள் ஏற்றப்பட்டு வருவதோடு மன்னார் நுழைவாயில், மன்னார் நீதிமன்றத்திற்கு முன்பாக வாகனங்கள் நிறுத்தப்பட்டுள்ளன.

இந்தநிலையில், மன்னார் மாவட்டத்தில் ஒன்றுகூடிய மக்கள் எதிர்ப்பு நிலையை உண்டாக்கியுள்ளனர்.

போராட்டத்தில் ஈடுபட்டுவந்த இளைஞர்கள், பொது அமைப்புக்கள், பிரஜைகள் குழுக்கள், நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம்  அடைகலநாதன் முன்னாள்  நாடாளுமன்ற உறுப்பினர் சார்லஸ் நிர்மலநாதன் உட்பட நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்துக்கொண்டு மின்கோபுர திட்டத்திற்கான பொருட்களை மன்னார் நகரிற்குள் கொண்டு வரக்கூடாது என்று எதிர்ப்பினை வெளிப்படுத்தியுள்ளதால் அங்கு பதற்றநிலை உருவாகியுள்ளது.

அங்கு 100ற்கும் மேற்பட்ட பொலிஸார் குவிக்கப்பட்டுள்ள நிலையில் சம்பவ இடத்திற்கு வருகை தந்த மன்னார் பொலிஸ்நிலைய பொறுப்பதிகாரி மக்களை அச்சுறுத்தும் வகையில் நடந்துக்கொண்டதோடு சக பொலிஸாரை வைத்து அனைவரையும் புகைப்படம் எடுத்துள்ளார்.

மக்களின் எதிர்ப்பினை மீறி பொலிஸாரின் உதவியுடன் பொருட்கள் கொண்டுவரப்பட்டுள்ளதார் மக்கள் தங்களது எதிர்ப்பினை வெளிப்படுத்தி வருகின்றனர்.

image_3.png

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

மன்னாரில் மீண்டும் நள்ளிரவில் பதற்றம்! | Tamil Leader | We Lead the Nation