Tamil Leader News
முக்கியம்
நான்கு மாவட்டங்களுக்கான நிலச்சரிவு எச்சரிக்கையை நீடித்தது NBRO!●'அவரைக் கொல்ல முயல்கிறார்கள்': இம்ரான் கானின் உயிருக்கு ஆபத்து என அவரது மகன் அவசர எச்சரிக்கை!●தமிழகத்தில் அடையாள அட்டைக்காகப் போராடும் இலங்கை இளைஞர்!●உலகின் மிகப்பெரிய கிரிப்டோகரன்சி கொள்ளையின் முழுமையான பின்னணி!●17ஆம் திகதி நாட்டை இருளில் மூழ்கடித்த திடீர் மின் தடையின் அறிக்கை வெளியானது!●இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●65 இலட்சம் ஓட்டுநர் உரிமங்கள் தேக்கம்: நிலைமை சீரடைய 2027 ஏப்ரல் வரை தாமதம்!●இஸ்ரேலிய வேலைவாய்ப்பு ஆட்சேர்ப்பு அரசாங்கத்தின் நேரடித் தலையீட்டிற்கு மாத்திரமே கட்டுப்படுத்தப்படும்!●மாடு அறுத்த குற்றத்துக்காக குஜராத்தில் மூவருக்கு ஆயுள் தண்டனை!●
செய்திகள்

மியன்மார் பௌத்த மடத்தின் மீது நடத்திய வான்வழித் தாக்குதலில் 23 பேர் பலி!

T

The Leader Desk

ஜூலை 12, 2025 • 2:05 AM

மியன்மார் பௌத்த மடத்தின் மீது நடத்திய வான்வழித் தாக்குதலில் 23 பேர் பலி!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • பேர் கொல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
  • இந்நிலையில், அம்மாகாணத்தின் லின் தா லூ கிராமத்தில் அமைந்திருந்த பௌத்த மடத்தின் மீது நேற்று முன்தினம் (10) நள்ளிரவு போர் விமானங்கள் குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தியதாகத் தெரிவிக்கப்படுகிறது.
  • இதில், 4 குழந்தைகள் உள்பட 23 பேர் கொல்லப்பட்டதாக, உள்நாட்டு கிளர்ச்சிப்படை இன்று (11) தெரிவித்துள்ளது.
  • இருதரப்புக்கும் இடையில் நடைபெறும் மோதல்களிலிருந்து தப்பித்து மடத்தில் தஞ்சமடைந்திருந்த சுமார் 150-க்கும் மேற்பட்டோர் இரவு உறங்கிக்கொண்டிருந்தபோது இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
எழுத்து அளவு:

பேர் கொல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

சகாயிங் மாகாணத்தில் உள்நாட்டு கிளர்ச்சிப்படைக்கும், மியன்மார் இராணுவத்துக்கும் இடையில் கடந்த சில வாரங்களாக மோதல்கள் அதிகரித்துள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், அம்மாகாணத்தின் லின் தா லூ கிராமத்தில் அமைந்திருந்த பௌத்த மடத்தின் மீது நேற்று முன்தினம் (10) நள்ளிரவு போர் விமானங்கள் குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தியதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இதில், 4 குழந்தைகள் உள்பட 23 பேர் கொல்லப்பட்டதாக, உள்நாட்டு கிளர்ச்சிப்படை இன்று (11) தெரிவித்துள்ளது.

இருதரப்புக்கும் இடையில் நடைபெறும் மோதல்களிலிருந்து தப்பித்து மடத்தில் தஞ்சமடைந்திருந்த சுமார் 150-க்கும் மேற்பட்டோர் இரவு உறங்கிக்கொண்டிருந்தபோது இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இதனால், 30-க்கும் அதிகமானோர் படுகாயமடைந்ததாகவும், அதில் 10 பேரது உடல்நிலையானது தொடர்ந்து கவலைக்கிடமாக உள்ளதாகவும் கூறப்படுகிறது.

இருப்பினும், கிளர்ச்சிப்படைகளை மட்டுமே குறிவைத்து தங்களது தாக்குதல்களை மேற்கொண்டு வருவதாகக் கூறும், மியன்மார் இராணுவம்தான் இந்தத் தாக்குதலை நடத்தியுள்ளதாகக் குற்றம்சாட்டப்படுகிறது. ஆனால், இதுகுறித்து இதுவரை மியன்மார் இராணுவம் எந்தவொரு கருத்தும் தெரிவிக்கவில்லை.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...