Tamil Leader News
முக்கியம்
2027க்கான பட்ஜெட்; அட்வகாட்டா நிறுவனத்திடமிருந்து 5 பொருளாதார முன்மொழிவுகள்!●சங்கக்காரவின் விமான நிலையச் சம்பவத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்!●நான்கு மாவட்டங்களுக்கான நிலச்சரிவு எச்சரிக்கையை நீடித்தது NBRO!●'அவரைக் கொல்ல முயல்கிறார்கள்': இம்ரான் கானின் உயிருக்கு ஆபத்து என அவரது மகன் அவசர எச்சரிக்கை!●தமிழகத்தில் அடையாள அட்டைக்காகப் போராடும் இலங்கை இளைஞர்!●உலகின் மிகப்பெரிய கிரிப்டோகரன்சி கொள்ளையின் முழுமையான பின்னணி!●17ஆம் திகதி நாட்டை இருளில் மூழ்கடித்த திடீர் மின் தடையின் அறிக்கை வெளியானது!●இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●65 இலட்சம் ஓட்டுநர் உரிமங்கள் தேக்கம்: நிலைமை சீரடைய 2027 ஏப்ரல் வரை தாமதம்!●
செய்திகள்

நுவரெலியா செல்வோருக்கு முக்கிய அறிவித்தல்!

T

The Leader Desk

மே 12, 2025 • 4:32 AM

நுவரெலியா செல்வோருக்கு முக்கிய அறிவித்தல்!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • மக்காத பொருட்களை கொண்டு வருவதைத் தவிர்க்குமாறு Clean Sri Lanka திட்டம் கேட்டுக்கொண்டுள்ளது.
  • நுவரெலியா மாவட்டத்தை மையமாகக் கொண்டு ஆரம்பமாகி உள்ள அரச வெசாக் விழாவுடன் இணைந்து, விழாவில் பங்கேற்கும் மக்களின் வசதிகளை மேம்படுத்துவதற்கும் கழிவுகளை நிர்வகிப்பதற்கும் Clean Sri Lanka சிறப்புத் திட்டத்தை முன்னெடுத்து வருகிறது.
  • மே மாதம் 10 ஆம் திகதி முதல் 16 ஆம் திகதி வரை நடைபெறும் வெசாக் வாரத்திற்கு லட்சக்கணக்கான மக்கள் நுவரெலியாவுக்கு வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்பட்டுள்ளது.
எழுத்து அளவு:

மக்காத பொருட்களை கொண்டு வருவதைத் தவிர்க்குமாறு Clean Sri Lanka திட்டம் கேட்டுக்கொண்டுள்ளது.

நாட்டு மக்கள் நமது பொறுப்பை நிறைவேற்ற, கூட்டாக தலையிட்டு, பொருத்தமான இடங்களில் குப்பைகளை அகற்றவும், சுற்றுப்புற சூழலின் தூய்மையை பாதுகாக்கவும் உயர்ந்தபட்ச கவனம் செலுத்த வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

நுவரெலியா மாவட்டத்தை மையமாகக் கொண்டு ஆரம்பமாகி உள்ள அரச வெசாக் விழாவுடன் இணைந்து, விழாவில் பங்கேற்கும் மக்களின் வசதிகளை மேம்படுத்துவதற்கும் கழிவுகளை நிர்வகிப்பதற்கும் Clean Sri Lanka சிறப்புத் திட்டத்தை முன்னெடுத்து வருகிறது.

மே மாதம் 10 ஆம் திகதி முதல் 16 ஆம் திகதி வரை நடைபெறும் வெசாக் வாரத்திற்கு லட்சக்கணக்கான மக்கள் நுவரெலியாவுக்கு வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, உள்ளூர் மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் கிரேகரி ஏரி மற்றும் அரசு வெசாக் விழா நடைபெறும் நுவரெலியா சர்வதேச பௌத்த மையம் ஆகியவற்றை மையமாக கொண்டு இந்த துப்பரவு செய்யும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருவதாக ஜனாதிபதி செயலகம் தெரிவித்துள்ளது.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

நுவரெலியா செல்வோருக்கு முக்கிய அறிவித்தல்! | Tamil Leader | We Lead the Nation